Jio, Airtel, Vi நெட்வொர்க்குகளின் மிக குறைந்த விலை டேட்டா பிளான்களின் முழு விவரம்!
Airtel, Vi மற்றும் Jio இன் மலிவான ரீசார்ஜ் திட்டங்கள் (Cheap Recharge Plans) குறித்த தகவல்களை இன்று நாங்கள் உங்களுக்கு வழங்குகிறோம்.
புது டெல்லி: இந்தியாவில், பெரும்பாலான பயன்பாட்டாளர்கள் ஒரு நிலையான டேட்டா பிளானை சார்ந்தே இருக்கிறார்கள். தற்போது தொலைத் தொடர்பு நிறுவனங்கள் தங்கள் வாடிக்கையாளர்களை கவர்ந்திழுக்க சலுகைகளை வழங்குகின்றன. ஒவ்வொரு நிறுவனமும் பயனர்களுக்கு குறைந்தபட்ச விலையில் அதிகபட்ச நன்மைகளை அளிக்கிறது. Airtel, Vi மற்றும் Jio இன் மலிவான ரீசார்ஜ் திட்டங்கள் (Cheap Recharge Plans) குறித்த தகவல்களை இன்று நாங்கள் உங்களுக்கு வழங்குகிறோம்.
ஜியோவின் மலிவான டேட்டா பிளான்கள்:
Jio இன் ரூ.11 பிளான் ஆனது 1ஜிபி டேட்டா நன்மையை வழங்குகிறது. மேலும் இந்த பிளானின் செல்லுபடியாகும் காலம் யூசரிடம் ஏற்கனவே இருக்கும் திட்டத்துடன் ஒற்றுப்போகும் என்பது குறிப்பிடத்தக்கது. ஜியோ நிறுவனம் வழங்கும் ரூ.21 பிளான் ஆனது 2ஜிபி டேட்டா நன்மையை வழங்குகிறது. மேலும் இந்த பிளானின் செல்லுபடியாகும் காலம் யூசரிடம் ஏற்கனவே இருக்கும் பிளானுடன் ஒத்துப்போகும். இந்த இரண்டு திட்டங்களில் SMS, காலிங் போன்ற நன்மைகள் இவற்றில் இருக்காது.
ALSO READ | BSNL இன் அற்புதமான திட்டம், Unlimited Data கிடைக்கும்!
BSNL இன் மலிவான டேட்டா பிளான்கள்:
ரூ.19 பிளான் ஆனது 1ஜிபி டேட்டா நன்மையுடன் ஒரு நாள் வேலிடிட்டி-ஐ கொண்டுள்ளது. அடுத்து இதன் ரூ.56 பிளான் ஆனது 10ஜிபி டேட்டா நன்மையுடன் 10 நாட்கள் வேலிடிட்டி-ஐ கொண்டுள்ளது.
வோடபோன் ஐடியாவின் (Vi) மலிவான டேட்டா பிளான்கள்:
Vi வழங்கும் ரூ.16 பிளான் ஆனது 1ஜிபி டேட்டா நன்மை மற்றும் 1 நாள் வேலிடிட்டி-ஐ வழங்குகிறது. அதேபோல் இந்நிறுவனம் வழங்கும் ரூ.48 பிளான் ஆனது 3ஜிபி டேட்டாவுடன் 28 நாட்கள் வேலிடிட்டி-ஐ வழங்குகிறது. மேலும் வோடபோன் ஐடியா வழங்கும் இந்த இரண்டு பிளான்களும் SMS, கால் அழைப்பு நன்மைகளை வழங்காது.
ஏர்டெல் நிறுவனத்தின் மலிவான டேட்டா பிளான்கள்:
ஏர்டெல் (AIRTEL) நிறுவனத்தின் டேட்டா பிளான் ரூ.48 ஆகும். இது 3 ஜிபி அளவிலான டேட்டாவுடன் 28 நாட்கள் வேலிடிட்டி-ஐ வழங்குகிறது. டேட்டாவை காலி செய்த பின், யூசர்களுக்கு ஒரு Mbக்கு 50 பைசா வசூலிப்பதாக ஏர்டெல் கூறுகிறது. ஏர்டெல் வழங்கும் இரண்டாவது மலிவான திட்டத்தின் விலை ரூ. 78 இது மொத்தம் 5 ஜிபி டேட்டாவை வழங்குகிறது.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR