Chicken 65 Listed In Taste Atlas: சிக்கனை வறுத்து சாப்பிடும் பழக்கம் உலகின் பல பகுதிகளில் உள்ளது எனலாம். ஆனால், ஒவ்வொரு நாட்டிலும் ஒவ்வொரு பிரதேசங்களிலும் வெவ்வேறு விதமாக சிக்கனை வறுத்து, அதற்கென விதவிதமாக மசாலாக்களும் உள்ளது. சிக்கனுக்கு ருசியை ஏற்றுவது அந்தந்த பிரதேசங்கள் அந்த உணவை செய்ய பயன்படுத்தும் பொருள்கள்தான் எனலாம்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

அந்த வகையில், Taste Atlas என்ற பிரபலமான உணவு மற்றும் பயண வழிகாட்டி நிறுவனம் உலகம் முழுவதும் உள்ள சிறந்த வறுத்த சிக்கன் உணவுகளை பட்டியலிட்டுள்ளது. இந்நிறுவனம் இந்த டிசம்பர் மாதம் அதன் தரவுகளை அப்டேட் செய்துள்ள நிலையில், டாப் 10 பட்டியலில் இந்தியாவின் அதுவும் சென்னையின் ஒரு உணவு இடம்பெற்றுள்ளது பலரையும் வியப்பில் ஆழ்த்தி உள்ளது.


3வது இடத்தை பிடித்த சிக்கன் 65


அதாவது, உலகம் முழுவதும் சிறந்த வறுத்த சிக்கன் உணவுகளின் டாப் 10 பட்டியலில் சென்னையின் 'சிக்கன் 65' மூன்றாவது இடத்தை பிடித்துள்ளன. தமிழ்நாட்டில் பல்வேறு மக்களுக்கும் பிடித்தமான அசைவ உணவில் இந்த சிக்கன் 65 எப்போதும் இடம் இருக்கும். 


மேலும் படிக்க | ஹெல்த் இன்ஷ்யூரென்ஸ் எடுக்க போறீங்களா... இந்த விஷயங்களை கண்டிப்பா செக் பண்ணுங்க


ஆனால், இது தற்போது உலகளவில் கவனத்தை குவித்திருப்பது ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது. சிக்கன் 65 இந்த பட்டியலில் வருவது முதல்முறையல்ல... கடந்தாண்டு இதே தலைப்பில் இந்த நிறுவனம் வெளியிட்ட பட்டியலில் சிக்கன் 65 10ஆவது இடத்தை பிடித்திருந்தது. தற்போது 7 இடங்கள் முன்னேறி 3ஆவது இடத்திற்கு நகர்ந்துள்ளது.


டாப் 10 பட்டியல் இதோ


Taste Atlas வெளியிட்ட இந்த பட்டியலில் தென்கொரியாவின் வறுத்த சிக்கன் உணவான சிக்கின் (Chikin) 4.6 ரேட்டிங்கை பெற்று முதலிடத்தை பிடித்துள்ளது. ஜப்பான் நாட்டின் கராகே (Karaage) 4.5 ரேட்டிங் உடன் இரண்டாவது இடத்தையும் பிடித்துள்ளன. இந்தியாவின் சிக்கன் 65 (Chicken 65) 4.5 ரேட்டிங்கை பெற்றிருந்தாலும் அது மூன்றாவது இடத்தையே பிடித்துள்ளது. மறுபுறம், தெற்கு அமெரிக்காவின் Fried Chicken, இந்தோனேஷியாவின் அயம் கோரெங் (Ayam Goreng) இரண்டும் 4.4 ரேட்டிங்கை பெற்று முறையே 4வது, 5ஆவது இடத்தை பெற்றுள்ளன. 


சீனாவின் Zhaziji, தைவானின் Taiwanese Popcorn Chicken, உக்ரைனின் Chicken Kyiv மற்றும் இந்தோனேஷியா Ayam Penyet ஆகியவை 4.4 ரேட்டிங்கை பெற்று முறையே 6வது, 7வது ,8வது, 9வது இடத்தை பிடித்துள்ளன. அமெரிக்காவின் Orange Chicken 4.2 ரேட்டிங் உடன் 10ஆவது இடத்தை பிடித்துள்ளது. 


சென்னையில் தோன்றிய சிக்கன் 65 


1960 காலகட்டங்களில் இது தமிழ்நாட்டின் தலைநகர் சென்னையில் தோன்றியதாகவும், அப்போது இருந்தே அது மிகவும் பிரபலமான உணவும் என்றும் Taste Atlas கூறுகிறது. ஆம், சிக்கன் 65 தமிழ்நாட்டில் தோன்றிய ஒன்றுதான். அதுகுறித்து சிறிய வரலாற்றை இங்கு பார்க்கலாம். 


தற்போது இந்தியாவின் பல்வேறு நகரங்களில், பெரிய பெரிய உணவகங்களில் கிடைக்கும் இந்த சிக்கன் 65, ஆரம்பத்தில் தமிழ்நாட்டின் புகழ்பெற்ற புஹாரி ஹோட்டலில்தான் விற்பனை செய்யப்பட்டுள்ளது. புஹாரி ஹோட்டலின் உரிமையாளரான ஏ.எம். புஹாரி என்பவரே இதனை அங்கு அறிமுகப்படுத்தியிருக்கிறார். புஹாரி ஹோட்டல் சிக்கன் 65 பதார்த்தத்தை அறிமுகப்படுத்திய சில நாள்களிலேயே இது மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று, பிரபலமாகிவிட்டது.


சிக்கன் 65 செய்வது எப்படி?


சென்னை அண்ணா சாலையில் 1951ஆம் ஆண்டு பிரியாணி விற்பனை செய்யும் கடையாக புஹாரி ஹோட்டல் தொடங்கப்பட்டுள்ளது. இங்கு 1965ஆம் ஆண்டில் சிக்கன் 65 அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. சிக்கனை பொடிப்பொடியாக வெட்டி அதில் மிளகாய் தூள், மஞ்சள் தூள், இஞ்சி பூண்ட் விழுது, கரம் மசாலா, எலுமிச்சை சாறு, தயிர், தேவையான உணவு ஆகியவை சேர்த்து நன்கு ஊறவைக்க வேண்டும். 


சிக்கன் 65 பெயர் காரணம்


குறைந்தது 1 மணிநேரம் ஊறிய பின்னர் அதில் முட்டையை உடைத்து ஊற்றி கிளற வேண்டும். அவை நன்கு ஒன்றான பின்னர் எண்ணெய்யில் பொறித்து எடுக்க வேண்டும். இதுவே சிக்கன் 65 செய்யும் முறையாகும். தேவைப்பட்டால் சோள மாவு, மைதா மாவை சேர்க்கலாம். இந்த பதார்த்தத்தை 1965ஆம் ஆண்டில் அறிமுக செய்ததால் அதற்கு சிக்கன் 65 என ஏ.எம். புஹாரி பெயர் சூட்டியதாகவும் தகவல்கள் கூறுகின்றன.


மேலும் படிக்க | குளிர் காலத்தில் சர்க்கரை அளவு தாறுமாறாக ஏறுதா? பச்சைப் பட்டாணி தான் கரெக்ட்..!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ