Body Heat Reduce Tips Tamil | சிக்கன் சாப்பிட்டாலே எனக்கு சூடு.. ஒத்துக்காது.. அப்படின்னு நிறைய பேர் சொல்வதை கேள்விபட்டு இருப்பீங்க. சிறுநீர் எரிச்சலாக வருகிறது, சிக்கன் சாப்பிட்டதால் தான் இப்படி ஆகிவிட்டது?, மலம் வரவில்லை என்ற காரணங்களையும் பொதுவாக சொல்வதை பார்த்திருப்பீர்கள். ஆனால், மருத்துவ ஆய்வுகளின்படி சிக்கன் சாப்பிட்டால் உடம்பு சூடு ஆகும், சிக்கன் சூட்டை உருவாக்கும் என்பதற்கான எந்த அடிப்படை ஆதாரமும் இல்லை. உடம்பு சூடு ஆவதற்கு சிறுநீர் தொற்று இருக்க வேண்டும் அல்லது காய்ச்சலாக இருக்க வேண்டும் அல்லது மலக்கட்டு உண்டாகி மலச்சிக்கலால் (கான்ஸ்டிபேஷன்) ஏற்படும் சூடாக இருக்க வேண்டும். இதனால் ஆசனவாய் எரிச்சல் வரும்.
சிக்கன் மட்டன் சாப்பிட்டாலும் உடல் சூடு வராமல் இருக்க என்ன செய்ய வேண்டும்?
ஆனால் சிக்கன் மட்டனை பொறுத்தவரை அதிக புரதம் உள்ள உணவுகள். மட்டனில் கூட கொஞ்சம் கொழுப்பு இருக்கும், சிக்கனில் கொழுப்புகூட அந்தளவுக்கு இருக்காது. அப்படியிருந்தும் சிக்கன் மட்டன் சாப்பிடும்போது உடல் சூடு ஏன் ஏற்படுகிறது? என்ற கேள்வி உங்களுக்கு எழலாம். மிக முக்கியமான விஷயம் என்னவென்றால் சிக்கன் மட்டனில் நார்ச்சத்து இருக்காது. அதனால் இவற்றை குடலால் செரிக்க முடியாது. அப்படியான சூழலில் இந்த உணவுகளை செரிக்க உடல் அதிக ஆற்றலை எடுத்துக் கொள்ளும். அதுவே நீங்கள் மட்டன் சிக்கன் சாப்பிடும்போது கூடவே நார்ச்சத்து மிக்க உணவுகளை சேர்த்து சாப்பிட்டால் இந்த பிரச்சனை உங்களுக்கு வராது. சிக்கன் மட்டன் சாப்பிடும்போது நீங்கள் கூடவே காய்கறி, கீரைகளை சாப்பிடலாம்.
மேலும் படிக்க | வாரம் ஒருமுறை அவகாடோ ஜூஸ் குடிங்க... உடம்பு முழுக்க ஊட்டச்சேத்து சேரும்!
சிக்கன் மட்டன் சாப்பிடும்போது நீங்கள் கவனத்தில் கொள்ள வேண்டிய முக்கியமான விஷயம்
குறைந்தபட்சம் 100 கிராம் அளவுக்கு காய்கறிகளை எடுத்துக் கொண்டால் சிக்கன் மட்டன் சாப்பிடும்போது உங்களுக்கு உடல் சூடு ஏற்படாது. மலச்சிக்கல் மலக்கட்டு போன்ற பிரச்சனைகள் வராது. கூடவே எப்போது சிக்கன் மட்டன் சாப்பிடும்போதும் மசாலாக்களை அதிகம் சேர்த்துக் கொள்ளாதீர்கள். சரிவிகத அளவு அல்லது குறைவான அளவில் மசாலா பொருட்களை சேர்த்துக் கொண்டால் உங்களுக்கு வயிறு, செரிமானம், குடல் பிரச்சனைகள், ஆசனவாய் பிரச்சனைகள் எல்லாம் வராது. கவனத்தில் கொள்ள வேண்டிய இன்னொரு விஷயம் என்னவென்றால் உங்கள் உடலுக்கு எந்த அளவில் உணவு தேவையோ அந்தளவை மட்டும் எடுத்துக் கொள்ளுங்கள். கூடுதல் கலோரிகள் உணவுகளை எடுத்துக் கொள்ளும்போதும் வயிறு அப்செட் ஆகும்.
நாட்டுக்கோழி vs பிராய்லர் : எது பெஸ்ட்?
நாட்டுக்கோழி, பிராயலர் என எந்த சிக்கனை வேண்டுமானாலும் சாப்பிடலாம். இந்த சிக்கன் சூடு, அந்த சிக்கனில் சூடு இல்லை என்ற கருத்துகள் எல்லாம் வதந்தியே. சிக்கன் எல்லாமே ஒன்று தான். இரண்டு சிக்கனில் உள்ள புரதம் உள்ளிட்ட சத்துகளில் வேண்டுமானால் அளவுகள் மாறுபாடு இருக்கலாமே தவிர நாட்டுக்கோழி, பிராயலர் கோழி என்றெல்லாம் பிரித்து பார்க்க தேவையில்லை. சரி, காய்கறிகள் தான் சாப்பிடணுமா? சிக்கன் மட்டன் கூட நார்ச்சத்து உணவுகளை சேர்த்துக் கொள்ள வேறு ஆப்சன் இல்லையா? என்றால் அதற்கான ஆப்சனும் இருக்கிறது. சிறு தானியங்களை சேர்த்துக் கொள்ளலாம். இந்த சிறுதானியங்களை தான் சேர்த்துக் கொள்ள வேண்டும் என்ற குறிப்பிட்ட ஆப்சன் எல்லாம் இல்லை. எந்த சிறுதானியங்களை வேண்டுமானாலும் உங்கள் உணவில் சேர்த்துக் கொள்ளலாம்.
அதனால், அடுத்தமுறை யாரேனும் சிக்கன் சாப்பிட்டால் உடல் சூடு, மட்டன் சாப்பிட்டால் உடல் சூடு என்ற காரணங்களை கூறினால், சிக்கன் சாப்பிடும்போது ஏன் உடல் சூடு இருக்கிறது, அதனுடன் என்ன சேர்த்து சாப்பிட வேண்டும் என்ற இந்த தகவலை அவர்களிடமும் தெரியப்படுத்துங்கள். அவர்களுக்கும் புரியும், இனி சிக்கன் மட்டன் சாப்பிடுவதையும் தவிர்க்க மாட்டார்கள்.
மேலும் படிக்க | கண் பார்வை கூர்மைக்கு... டயட்டில் இந்த உணவுகளை கண்டிப்பாக சேருங்க...
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ