ஹெல்த் இன்ஷ்யூரென்ஸ் எடுக்க போறீங்களா... இந்த விஷயங்களை கண்டிப்பா செக் பண்ணுங்க

உடல் நல காப்பீடு அல்லது சுகாதார காப்பீடு எடுப்பது இன்றைய காலத்தின் மிகப்பெரிய தேவையாகிவிட்டது. காப்பீடு இல்லை என்றால், எதிர்பாராத விதமான நிகழ்வு அல்லது கடுமையான உடல் நல பிரச்சனையால் பாதிக்கப்படும் நிலையில், நமது சேமிப்பு அனைத்தும் மருத்துவமனை கட்டணத்தை செலுத்துவதில் செலவாகிவிடும் நிலை ஏற்படலாம்.

Written by - Vidya Gopalakrishnan | Last Updated : Dec 2, 2024, 11:36 AM IST
  • உடல் நல காப்பீடு அல்லது சுகாதார காப்பீடு எடுப்பது இன்றைய காலத்தின் மிகப்பெரிய தேவையாகிவிட்டது.
  • உடல்நலக் காப்பீட்டைத் தேர்ந்தெடுக்கும்போது என்னென்ன விஷயங்களை மனதில் கொள்ள வேண்டும்.
  • குறுகிய காத்திருப்பு காலத்துடன் கூடிய சுகாதார காப்பீட்டு பாலிஸி.
ஹெல்த் இன்ஷ்யூரென்ஸ் எடுக்க போறீங்களா... இந்த விஷயங்களை கண்டிப்பா செக் பண்ணுங்க title=

Health Insurance Tips: இன்றைய காலகட்டத்தில், கண் இமைக்கும் நேரத்தில், நமது நிலை மாறி, நமக்கு உடல் நல பிரச்சனைகள் ஏற்படும் வாய்ப்புகள் அதிகம் உள்ளது. இதற்கு சிகிச்சை அளிக்க நிறைய பணம் செலவாகலாம். டாக்டருக்கான கட்டணம், மருந்துகள் மற்றும் பல்வேறு வகையான சோதனைகள் ஆகியவை நமது பர்ஸை காலி செய்துவிடும். இதைத் தவிர்க்க, உடல் நல காப்பீடு அல்லது சுகாதார காப்பீடு எடுப்பது இன்றைய காலத்தின் மிகப்பெரிய தேவையாகிவிட்டது. காப்பீடு இல்லை என்றால், எதிர்பாராத விதமான நிகழ்வு அல்லது கடுமையான உடல் நல பிரச்சனையால் பாதிக்கப்படும் நிலையில், நமது சேமிப்புகள் அனைத்தும் சிகிச்சைக்கான கட்டணத்தை செலுத்துவதில் செலவாகிவிடும் நிலை ஏற்படலாம்.

உடல்நலக் காப்பீடு எடுக்கிறீர்கள் என்றால், நீங்கள் சில விஷயங்களைப் பற்றி எச்சரிக்கையாக இருக்க வேண்டும். இல்லை என்றால், எதிர்காலத்தில் கிளைம் செய்யும் போது சிக்கல்களைச் சந்திக்க நேரிடும். எனவே, உடல்நலக் காப்பீட்டைத் (Health Insurance) தேர்ந்தெடுக்கும் போது என்னென்ன விஷயங்களை மனதில் கொள்ள வேண்டும் என்பதை விபரமாக அறிந்து கொள்ளலாம்...

கேஷ்லெஸ் கிளைம்

உடல்நலக் காப்பீடு எடுக்கும் போதெல்லாம், கேஷ்லெஸ் கிளைம் வசதி உள்ளதா, இல்லையா என்பதை விசாரிக்க மறக்காதீர்கள். கேஷ்லெஸ் கிளைம் விருப்பத்தைத் தேர்ந்தெடுப்பது நல்லது. ஏனெனில் இதில் கிளைம் செய்வதற்கான நடைமுறைகளை பற்றியோ, பணத்தைப் பற்றியோ கவலைப்பட வேண்டியதில்லை, மேலும் அனைத்து கட்டணங்களையும் நேரிடையாக உங்கள் காப்பீடு நிறுவனம் மூலம் செலுத்தி விடலாம்.

காத்திருப்பு காலம்

உடல் நல காப்பீட்டில் கவனிக்க வேண்டிய மிக முக்கியமான விஷயம் அதன் வெயிடிங் பீரியட் என்னும் காத்திருப்பு காலமாகும். சில நிறுவனங்கள் தங்கள் வாடிக்கையாளர்களுக்கு நீண்ட காத்திருப்பு காலத்தை வழங்குகின்றன. இதன் காரணமாக பாலிசி எடுத்த பிறகு நீண்ட காலத்திற்கு காப்பீட்டுத் திட்டத்தின் பலனைப் பெற முடியாமல் போகலாம். எப்போதுமே, ஒரு குறுகிய காத்திருப்பு காலத்துடன் கூடிய சுகாதார காப்பீட்டு பாலிஸியைத் தேர்வு செய்வதே நல்லது.

மேலும் படிக்க | Aadhaar Update: ஆதார் அட்டை அப்டேட் பண்ணிட்டீங்களா.. இன்னும் இரண்டு வாரம் தான் இருக்கு

நோய்கள் பற்றிய தகவல்கள்

நீங்கள் ஹெல்த் இன்ஷூரன்ஸ் எடுக்கிறீர்கள் என்றால், உங்கள் பேக்கேஜில் எந்தெந்த நோய்களுக்குக் காப்பீடு இருக்கிறது என்பதை நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும். பல நேரங்களில் குறிப்பிட்ட சில நோய்களுக்கு சுகாதார காப்பீடு இருக்காது. இதன் காரணமாக எதிர்காலத்தில் நாம் பிரச்சினைகளை சந்திக்க நேரிடும். எனவே, இந்த தகவலை முன்கூட்டியே தெரிந்து கொள்ளுங்கள்.

பல காப்பீடுகளுடன் ஒப்பிடு

நீங்கள் உடல்நலக் காப்பீட்டுத் திட்டத்தைத் தேர்ந்தெடுக்கும் போதெல்லாம், வெவ்வேறு நிறுவனங்களின் திட்டங்களை ஒப்பிட்டுப் பார்க்க மறக்காதீர்கள். இதன் மூலம் நீங்கள் குறைந்த பிரீமியம் மற்றும் அதிக நன்மைகளை கொண்ட திட்டத்தை தேர்ந்தெடுக்கும் வாய்ப்பு கிடைக்கும். எனவே திட்டங்களை ஒப்பிட்டுப் பார்க்க மறக்காதீர்கள்.

பிரீமியம் தொகை

சுகாதார பாலிசியை எடுக்கும் போது, அதன் பிரீமியம் குறைவாக இருப்பதை மட்டும் பார்க்காமல், மற்ற விஷயங்களையும் கவனிக்கவும். ஏனெனில், குறைந்த பிரீமியம் பாலிசிக்கு பல வரம்புகள் இருக்கலாம். சிகிச்சையின் போது முழு செலவையும் ஈடுகட்டாது போகலாம். எனவே, பிரீமியத்தை விட பாலிசியின் பலன்களை ஆராய்ந்துப் பார்க்க வேண்டும்.

பாலிசி விதிமுறைகள்

ஹெல்த் இன்ஷூரன்ஸ் வாங்கும் போது பாலிசியின் நிபந்தனையையும் சரியாகப் படிப்பது மிகவும் முக்கியம். பல சமயங்களில் பாலிசி வாங்கும் போது டெர்ம் மற்றும் கண்டிஷன் பிரிவை சரியாகப் படிக்காமல் விட்டுவிடுகிறோம். இதனால், பாலிசியை கிளைம் செய்யும் போது சிரமத்தை சந்திக்க வேண்டிய நிலை ஏற்படலாம். பாலிசி வாங்கும் போது, ​​மருத்துவமனை சிகிச்சை மட்டுமல்லாது, அறைக்கட்டணம், மருந்துகள் போன்றவற்றிற்கான கிளைம் விதிகளை சரியாகப் படிக்கவும்.

மேலும் படிக்க | Aadhaar Card: ஆதார் அட்டையில் இத்தனை வகைகளா... உங்களுக்கு ஏற்றது எது...

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News