Union Bank Of India வங்கியில் வேலை வாய்ப்பு - முழு விவரம்
யூனியன் பேங்க் ஆஃப் இந்தியாவில் வேலை வாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது.
மும்பையில் தலைமை அலுவலகத்தை கொண்ட முன்னணி பொதுத்துறை வங்கியான யூனியன் பேங்க் ஆஃப் இந்தியா வங்கியில் இருந்து ஒப்பந்த அடிப்படையில் தலைமை இடர் அதிகாரி (Chief Risk Officer) பதவிக்கு என வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்த வங்கி பணிக்கு என ஒரு பணியிடம் காலியாக உள்ளது. எனவே ஆர்வமுள்ளவர்கள் ஆன்லைன் மூலம் 19.10.2022 முதல் 08.11.2022 வரை இப்பணிக்கு விண்ணப்பிக்கலாம்.
காலி பணியிட விவரம்:
Chief Risk Officer பதவிக்கு என ஒரு பணியிடம் காலியாக உள்ளது.
வயது வரம்பு:
01.10.2022 தேதியின்படி, விண்ணப்பிக்க விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் வயதானது குறைந்தபட்சம் 35 முதல் அதிகபட்சம் 55க்குள் இருக்க வேண்டும்.
கல்வித் தகுதி:
அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்களில் இருந்து Professional certification in Financial Risk Management from Global Association of Risk professionals ஆகிய துறைகளில் டிகிரி முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.
மேலும் படிக்க | ரேஷன் அட்டைதாரர்களுக்கு மிகப்பெரிய செய்தி: தீபாவளி பரிசாய் வந்த அரசின் அறிவிப்பு
தேர்வு செய்யப்படும் முறை:
விண்ணப்பதாரர்கள் தகுதி, அனுபவம், தகுதி மற்றும் செயல்திறன் ஆகியவற்றின் அடிப்படையில் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.
விண்ணப்பிக்கும் முறை:
https://www.unionbankofindia.co.in/english/home.aspx என்ற இணைய முகவரி மூலம் 19.10.2022 முதல் 08.11.2022க்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
மேலும் படிக்க | ஆதார் பயனர்களுக்கு மிகப்பெரிய வசதியை வழங்கியது UIDAI: மகிழ்ச்சியில் மக்கள்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ