ஆதார் சேவை மையம்: ஆதார் பயனர்களுக்கு ஒரு நல்ல செய்தி!! வாடிக்கையாளர்களுக்கு ஆதார் அட்டை வழங்கும் அமைப்பான இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (UIDAI) அவ்வப்போது பல வசதிகளை வழங்கி வருகிறது. இப்போது UIDAI, மக்களின் வசதிக்காக ISRO உடனான ஒப்பந்தத்தின் கீழ் புவன் ஆதார் போர்ட்டலை அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் மூலம் ஆதார் பயனர்கள் தங்களுக்கு அருகிலுள்ள ஆதார் மையத்தை எளிதாகக் கண்டறியலாம்.
யுஐடிஏஐ இஸ்ரோவுடன் செய்த பெரிய ஒப்பந்தம்
ஆதார் வழங்கும் அமைப்பான இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (UIDAI), இருப்பிடம் கண்காணிக்கும் வசதியை (லொகேஷன் ட்ரேக்) அமைக்க இஸ்ரோவுடன் ஒப்பந்தம் செய்துள்ளது. இதன் மூலம் உங்கள் வீட்டிற்கு அருகில் உள்ள ஆதார் மையத்தை எளிதாக கண்டறிய முடியும். இந்த ஒப்பந்தத்தின்படி, ISRO, UIDAI மற்றும் மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் இந்த ஒப்பந்தத்திற்குப் பிறகு, நாட்டின் அனைத்துப் பகுதியில் உங்களவர்களும் தங்கள் வீட்டில் இருந்தபடியே, அருகிலுள்ள ஆதார் மையத்தைப் பற்றிய தகவல்களை எளிதாகப் பெறலாம். இந்த புதிய அம்சத்தைப் பற்றி தெரிந்து கொள்வோம்.
யுஐடிஏஐ தகவல் அளித்துள்ளது
ஆதார் மையத்தின் இடத்தை கண்டறிய, NRSC, ISRO மற்றும் UIDAI ஆகியவை இணைந்து புவன் ஆதார் போர்ட்டலைத் தொடங்கியுள்ளதாக UIDAI தெரிவித்துள்ளது. இதில் மொத்தம் மூன்று அம்சங்கள் உள்ளன. இந்த தளத்தின் மிகப்பெரிய சிறப்பம்சம் என்னவென்றால், பயனர்கள் இதன் மூலம் ஆதார் மையத்தின் தகவலை ஆன்லைனில் தெரிந்துகொள்ளலாம். இது தவிர, உங்கள் அருகிலுள்ள ஆதார் மையத்தை அடைவதற்கான வழியையும் இது உங்களுக்குச் சொல்லும். இதில் உங்களுக்கு உங்கள் இருப்பிடத்திலிருந்து ஆதார் மையத்தின் தூரம் பற்றிய தகவல்களும் வழங்கப்படும்.
மேலும் படிக்க | மின் கட்டண எண்ணுடன் ஆதாரை இணைத்தால் மானியமா?
ஆதார் சேவை மையத்தின் இருப்பிடத்தை எப்படி அறிவது
1. இதற்கு நீங்கள் முதலில் https://bhuvan.nrsc.gov.in/aadhaar/ க்குச் செல்லவும்.
2. இதற்குப் பிறகு, உங்கள் அருகிலுள்ள ஆதார் மையத்தைப் பற்றிய தகவலைப் பெற, 'அருகிலிள்ள செண்டர்' (Centre Nearby) என்ற ஆப்ஷனை கிளிக் செய்யவும்.
3. இங்கே உங்கள் ஆதார் மையம் இருக்கும் இடம் பற்றி தெரிந்துகொள்ளலாம்.
4. இது தவிர, Search by Aadhaar Seva Kendra -லும் தகவலையும் பெறலாம்.
5. இங்கே நீங்கள் ஆதார் மையத்தின் பெயரை உள்ளிட்டவுடன். அதன் பின் மையத்தின் தகவலைப் பெறுவீர்கள்.
6. நீங்கள் விரும்பினால், உங்களைச் சுற்றியுள்ள ஆதார் மையத்தைப் பற்றிய தகவல்களையும் பின் கோட் மூலம் தேடியும் ( Search by PIN Code ) பெறலாம்.
5. இதற்குப் பிறகு, கடைசி ஆப்ஷனாக, 'மாநில வாரியான ஆதார் சேவை மையத்திற்கான' 'State-wise Aadhaar Seva Kendra' ஆப்ஷன் வரும். இந்த ஆப்ஷனை தேர்ந்தெடுத்தால், மாநிலத்தில் உள்ள அனைத்து ஆதார் மையங்களின் தகவலைப் பெறலாம்.
மேலும் படிக்க | mAadhaar பயன்படுத்த பதிவு செய்யப்பட்ட மொபைல் எண் தேவையா?
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ