உறக்கம் முக்கியம் பாஸ்... எந்தெந்த வயதினர் எவ்வளவு மணிநேரம் தூங்க வேண்டும்? - இதுல பாருங்க!
Sleep Chart Details: ஒவ்வொரு வயதினரும் எவ்வளவு நேரம் தூங்க வேண்டும் என்பதை தெரிந்துகொண்டு, அதனை பின்பற்றுவதன் மூலம் தூக்கிமின்மையால் ஏற்படும் பெரிய பாதிப்புகளை தவிர்க்கலாம்.
Sleep Chart Details In Tamil: இன்றைய வாழ்க்கை முறை என்பது ஒவ்வொருவருக்கும் கடுமையான மாற்றத்திற்கு உள்ளாகி உள்ளது. நவீன கால மாற்றம் என்பது ஒருபுறம் இருந்தாலும் ஆரோக்கியமற்ற வாழ்க்கை முறையை இன்று பலரும் கடைபிடித்து வருகின்றனர். இது மனரீதியாகவும் சரி, உடல் ரீதியாகவும் சரி கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்தும்.
அதிகளவில் துரித உணவுகளை எடுத்துக்கொள்வது, உடற்பயிற்சியோ அல்லது உடல் உழைப்போ ஏதுமின்றி இருப்பது, சரியான ஊட்டச்சத்துகளை தரும் உணவுப்பழக்கவழக்கத்தை கடைபிடிக்காதது, சரியாக தூங்காதது என பல மோசமான வாழ்க்கை முறை பழக்கங்கள் உங்களின் அடுத்த சந்ததியினரை கூட பாதிக்கலாம். இது அச்சமூட்டுவதற்கு அல்ல, இன்றே இதனை சீர்செய்து ஆரோக்கியமான சூழலுக்கு செல்ல வேண்டும் என்பதற்கான எச்சரிக்கையாக எடுத்துக்கொள்ளலாம்.
தூக்கம் முக்கியம் அமைச்சரே...
மேல் கூறியவற்றில் தூக்கம் என்பதும் மிக முக்கியமான ஒன்று. இன்றைய காலத்தில் தொடக்கப் பள்ளியில் பயிலும் மாணவர் தொடங்கி பணியில் இருந்து ஓய்வு பெறும் வயதில் இருப்போர் வரை இரவில் தாமதமாக தூங்குவதை ஒரு பழக்கமாக வைத்திருக்கிறார்கள். காலையில் எழுந்துவிட்டாலும் கூட அவர்களின் உடலுக்கு தேவையான போதுமான தூக்கம் என்பது கிடைக்காமல் போகும் அபாயம் அதிகம்.
மேலும் படிக்க | பெரிய மார்புகள் பெண்களுக்கு தினசரி வாழ்க்கையில் ஏற்படுத்தும் பிரச்சனைகள்..!
இதனால், உங்களின் அன்றாட வேலையும் சரி, மற்ற பணிகளும் சரி கடுமையாக பாதிக்கப்படும். குறைந்த கால நோக்கில் பார்த்தோமானால் மேற்சொன்ன பாதிப்புகளை குறிப்பிடலாம். அதே நீண்ட கால நோக்கில் போதுமான தூக்கமின்றி இருந்தால் உடல்நலன் பாதிப்புக்கு உள்ளாகி, மனநலமும் சீர்கெடும். மன அழுத்தம், கவலை, சில உடல்நலப் பிரச்னைகள், அதிக காஃப்பினை உட்கொள்வது, மது மற்றும் பிற போது வஸ்துகளை உட்கொள்வது ஆகியவையும் தூக்கமின்மைக்கு வழிவகுக்கும். எனவே, இவற்றை தவிர்ப்பதன் மூலம் ஆரோக்கியமான தூக்கத்தை பெறலாம். சரியான தூக்கத்தினால் உங்களின் நோய் எதிர்ப்பு ஆற்றல் வலுவாகும், உங்களின் உடல் எடை அதிகரிக்காது என்பதையும் நினைவில் கொள்ளுங்கள்.
யார் யார் எவ்வளவு நேரம் தூங்க வேண்டும்?
அந்த வகையில், ஒவ்வொரு வயதினரும் எவ்வளவு நேரம் தூங்க வேண்டும் என்பதை தெரிந்துகொண்டு, அதனை பின்பற்றுவதன் மூலம் தூக்கிமின்மையால் ஏற்படும் பெரிய பாதிப்புகளை தவிர்க்கலாம். 3 மாத குழந்தை அல்லது அதற்கு குறைவான மாதமான பிஞ்சுக்குழந்தை ஒருநாளுக்கு 16-18 மணிநேரம் தூங்க வேண்டும். 4-11 மாதக் குழந்தைகள் 12-16 மணிநேரம் வரை தூங்க வேண்டும். அதே 1-2 வயதிலான குழந்தைகள் 11-14 மணிநேரம் வரை தூங்க வேண்டும்.
பள்ளிக்குச் செல்லத் தொடங்கும் சிறுவர்கள் அதாவது 3-5 வயதில் இருப்போர் 11-13 மணிநேரம் தூங்க வேண்டும். 6-13 வயதில் இருக்கும் சிறுவர்கள் 9-11 மணிநேரம் தூங்க வேண்டும். அதே டீன் ஏஜ் வயதில் (14-17) ஒருவர் ஒருநாளுக்கு 8-10 மணிநேரம் வரை தூங்க வேண்டும். 18 வயதில் இருந்து அதற்கு மேலானவர்கள் 7-9 மணிநேரம் வரை நிச்சயம் தூங்க வேண்டும். இந்த குறைந்தபட்ச தூக்கம் கூட இல்லாவிட்டால்தான் பிரச்னைகள் ஆரம்பிக்கும்.
(பொறுப்பு துறப்பு: இவை அனைத்து பொதுவான தகவல்களின் அடிப்படையில் எழுதப்பட்டது. இதனை பின்பற்ற நினைப்போர், சந்தேகம் இருப்போர் மருத்துவரை சந்தித்து ஆலோசனை பெறவும். இதனை Zee News உறுதிப்படுத்தவில்லை)
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ