COVID-யை கொல்லும் கருவியை கண்டு பிடித்து அசத்திய பெங்களூர் நிறுவனம்!!
பெங்களூர் நிறுவனத்தால் தயாரிக்கப்பட்ட கொரோனா வைரஸை கொல்லும் ஷைகோகன் இயந்திரம் எவ்வாறு செயல்படுகிறது...!
பெங்களூர் நிறுவனத்தால் தயாரிக்கப்பட்ட கொரோனா வைரஸை கொல்லும் ஷைகோகன் இயந்திரம் எவ்வாறு செயல்படுகிறது...!
கொரோனா வைரஸைக் (CORONAVIRUS) கொல்லும் சக்தி வாய்ந்த ஒரு சாதனம் பெங்களூரில் வடிவமைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. பெங்களூரில் உள்ள டி ஸ்கலீன், சென்டர் அட்வான்ஸ்ட் ரிசர்ச் அண்ட் டெவலப்மென்ட் (CARD) அமைப்பின் ஆராய்ச்சி பிரிவு, கொரோனா வைரஸை நடுநிலையாக்கும் அளவுக்கு சக்திவாய்ந்த ஒரு சாதனத்தை கொண்டு வந்துள்ளதாகக் கூறியுள்ளது. SHYCOCAN அல்லது Scalene Hypercharge Corona Canon - எனப்படும் சாதனம் இப்போது அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தின் பல நாடுகளில் தயாரிக்கப்பட்டு விற்பனை செய்யப்படும்.
இந்த அமைப்பு கொரோனா வைரஸ் துகள்களைக் கொல்லும், ஆனால் அது எந்த பாக்டீரியாவையோ அல்லது பூஞ்சைகளையோ கொல்லாது என்று அமைப்பின் தலைவர் டாக்டர் ராஜா விஜய் செய்தி நிறுவனமான ANI இடம் கூறினார்.
ஷைகோகன் (Shycocan) ஒரு சிறிய டிரம் போல கட்டமைக்கப்பட்டுள்ளது. இது அலுவலகங்கள், பள்ளிகள், மால்கள், ஹோட்டல்கள், விமான நிலையங்கள் அல்லது மேற்பரப்புகளை கிருமி நீக்கம் செய்வதற்கான எந்தவொரு பகுதிகளிலும் வைத்துக்கொள்ளலாம். கொரோனா வைரஸில் இருக்கும் ஸ்பைக் - புரோட்டீன் அல்லது எஸ்-புரதத்தை நடுநிலையாக்குவதில் இது 99.9 சதவீதம் பயனுள்ளதாக இருக்கும் என்று நிரூபிக்கப்பட்டுள்ளது.
ALSO READ | 300 ஆண்டுகளுக்கும் மேலான கருத்து தவறானது.... மனித விந்தணு பற்றி புதிய தகவல்...!
கொடிய வைரஸ் பரவுவதைக் கட்டுப்படுத்துவதில் இது மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்று அறிக்கை கூறியுள்ளது. கொரோனா பாதிக்கப்பட்ட நபர் இந்த கருவி இருக்கும் அறைக்குள் நுழைந்தால், தும்மும் போது அல்லது இருமும் போது ஏரோசோல்களில் இருக்கும் வைரஸின் ஆற்றலை ஷைகோகன்(Shycocan) கருவி நடுநிலையாக்கும்.
இது பரப்புகளில் இருக்கும் வைரஸை நடுநிலையாக்குகிறது, இதனால் காற்று அல்லது மேற்பரப்பு வழியாக பரவுவதைக் குறைக்கிறது. அதிகாரிகளின் தகவலின்படி உற்பத்திக்கான ஒப்புதல் கடந்த வாரம் கிடைத்தது. செலவு மற்றும் உற்பத்தி உரிம உரிமையாளர்களைப் பொறுத்து இருக்கும் என்றும் மருத்துவர் விஜய் குமார் கூறியுள்ளார்.