நம்மை சுற்றி வாழும் ஒரு உயிரினமாக கொசு இருந்து வருகிறது. மேலும் நமது சுற்றுச்சூழலின் ஒருங்கிணைந்த பகுதியாகவும் கொசுக்கள் உள்ளன. மனிதர்கள் மற்றும் மற்ற உயிரினங்களை போலவே கொசுக்களுக்கும் வாழ்வியல் சுழற்சி உள்ளது. பொதுவாக ஆண் கொசுக்கள் பூக்களிலிருந்து தேனை எடுத்து சாப்பிடுகின்றன, அதே சமயம் பெண் கொசுக்கள் உணவுக்காக மனிதர்களைக் தேடி கடிக்கின்றன. மனித ரத்தத்தில் இருக்கும் சில புரதங்கள் கொசுக்களுக்கு முட்டையிட தேவைப்படுகின்றன. மேலும் கொசுக்கள் நம்மை கடிக்கும் போது நமது உடலில் இருந்து ரத்தத்தை எடுப்பது மட்டுமில்லாமல் உமிழ்நீரை நமது ரத்தத்தில் கலக்கின்றன. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மேலும் படிக்க | IRCTCயின் சுகாதார காப்பீடு! 10 லட்சம் ரூபாய் காப்பீடுக்கு பிரீமியம் 45 காசு மட்டுமே


இதன் காரணமாக தான் நமக்கு மலேரியா, டெங்கு, சிக்குன்குனியா போன்ற நோய்கள் ஏற்படுகின்றன. இதன் மூலம் பரவும் நோய்த்தொற்றுகளால் உலகம் முழுவதும் பல லட்சம் மக்கள் உயிரிழக்கின்றனர். கொசு கடிப்பதை தடுக்க சில கிரீம்கள், வீட்டில் கொசுப்பத்தி அல்லது புகைமூட்டம் போடுவது வழக்கம். ஆனால் இதையும் தாண்டி கொசுக்களின் கடிக்கும் பழக்கத்தைப் புரிந்துகொள்வது அவசியம். பெண் கொசுதான் மனிதர்களை தேடி கடிக்கிறது. அதன் சிறப்பு ஆண்டெனாக்கள் மூலம் குறிவைத்து கடிக்கிறது. இந்த சிறப்பு ஆண்டெனாக்கள் கார்பன் டை ஆக்சைடு, ஈரப்பதம், இரசாயன வாசனைகள் போன்றவற்றை கண்டறிவதில் அதிக உணர்திறன் கொண்டவை. கூட்டமாக இருக்கும் இடத்தில் ஒரு சிலரை மட்டும் கொசுக்கள் தேடி தேடி கடிக்கும், அதற்கான காரணத்தையும் தெரிந்து கொள்ளுங்கள்.


துணி: கொசுக்கள் வெள்ளை அல்லது மற்ற நிறங்களை விட, கருப்பு, ஊதா போன்ற நிறங்களை அதிகம் ஈர்க்கின்றன. மேலும், டவுசர் அல்லது குட்டையான ஆடைகள் அணிந்தவர்களை அதிகம் கடிக்க வாய்ப்புள்ளது. அதே போல டெங்கு நோயை உண்டாக்கும் கொசுவான ஏடிஸ் கால்களைக் கடிக்காமல், கைகளில் அதிகம் கடிக்கும். மேலும் ​​மலேரியாவை உண்டாக்கும் கொசுக்கள் கால்களை அதிகம் கடிக்கும். 


இரத்த வகை: சில ரத்த வகைகளை சேர்ந்தவர்களை கொசுக்கள் அதிகம் கடிக்கும். மற்ற இரத்த வகைகளை ஒப்பிடும்போது "O" இரத்த வகையை சேர்ந்தவர்களை கொசுக்கள் அதிகம் கடிக்கின்றன. 


உடல் வெப்பம்: முன்பு சொன்னது போல பெண் கொசுக்களுக்கு ஆண்டெனாக்கள் அதிகம். இதன் மூலம் தொலைதூரத்தில் இருக்கும் மனிதர்களை கூட தேடி கடிக்கும் திறன் கொண்டவைகளாக உள்ளன. 1 டிகிரி செல்சியஸ் அளவுக்கு சிறிய வெப்பநிலை இருந்தாலும் கொசுக்களால் கண்டுபிடிக்க முடியும். அதே போல அதிக உடல் பருமன் கொண்டவர்களை கொசுக்கள் அதிகம் கடிக்க வாய்ப்புள்ளது. 


கார்பன் டை ஆக்சைடு: காற்றில் உள்ள கார்பன் டை ஆக்சைட்டின் அளவையும் கொசுக்கள் கண்டறியும் திறன் கொண்டவை. அதிக வளர்சிதை மாற்றத்தைக் கொண்டவர்களை கொசுக்கள் அதிகம் கடிக்க வாய்ப்புள்ளது. மேலும் அதிகம் வியர்க்கும் நபர்களை கொசுக்கள் கடிக்கும் என்று கூறப்படுகிறது. உடலில் வியர்க்கும் போது தோலில் விசித்திரமான வாசனை உண்டாகும். இவை கொசுக்களை ஈர்க்கும். 


கர்ப்பம் : பொதுவாக கர்ப்ப காலத்தில் பெண்ணின் உடலிலும் உடலியலிலும் நிறைய மாற்றங்கள் ஏற்படுகின்றன. கர்ப்பகால ஹார்மோன்கள் உடலில் அதிக வளர்சிதை மாற்றத்திற்கும், உடலை அதிக வெப்பமாகவும் மாற்றும். இது பெண் கொசுக்களை அதிகம் ஈர்க்கின்றன. அதே போல மது அருந்துபவர்களை கொசுக்கள் கடிக்க வாய்ப்புள்ளது. மது அருந்தும் போது உடல் சூடு அதிகமாகிறது. இதனால் வியர்வை அதிகரிக்கும், இந்த சமயத்தில் கொசுக்கள் கடிக்கிறது.


மேலும் படிக்க | Health Insurance: மருத்துவ காப்பீடு எடுக்க போறீங்களா... ‘இந்த’ விஷயங்களில் கவனம் தேவை!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ