எச்சரிக்கை! பிரிட்ஜில் வைக்கக் கூடாத ‘சில’ உணவுகள்!

இன்றைய பிஸியான வாழ்க்கையில் பல வகையான உணவு பொருள்களின் ஆயுளை நீட்டிக்க ஃபிரிட்ஜில் வைத்துப் பாதுகாக்கிறோம். இந்நிலையில், வைக்கவே வைக்கக் கூடாத உணவு பொருட்கள்  எவை என்பதை அறிந்து கொள்ளலாம். 

பழங்கள், காய்கறிகள், வெண்ணெய் பால், மட்டும்மாலாது, சமைத்த பொருட்களையும் பிரிட்ஜில் வைத்து பாதுகாக்கும் பழக்கம் நம்மிடையே உள்ளது. 

1 /9

பிரிட்ஜில் சில பொருட்களை வைப்பதால், அதன் ஆயுள் காலம் அதிகரிக்கும் என்றாலும், ஃபிரிட்ஜில் வைப்பதால், சில பொருட்களின் சுவை, ஊச்சத்து ஆகிய இரண்டும் காலியாகி விடும். இந்நிலையில், வைக்கவே வைக்கக் கூடாத உணவு பொருட்கள்  எவை என்பதை அறிந்து கொள்ளலாம். 

2 /9

மசாலாப் பொருட்கள்: பொடிக்கப்படாத முழு மசாலாப் பொருட்களை பிரிட்ஜில் வைத்தால், அவை ஈரப்பதத்தை இழுத்துக் கொண்டு, இதன் காரணமாக அவற்றின் சுவை மணம் இரண்டும் பாதிக்கப்படலாம்

3 /9

ப்ரெட்: பிரெட் போன்ற பேக்கரி வகை உணவுகள் ஃபிரிட்ஜில் வைக்க உகந்தவை அல்ல. சாதாரண தட்பவெப்பத்தில் இவைத்திருந்தால் தான் இதன் சுவையும் மிருதுவான தன்மையும் நீடிக்கும். பிரிட்ஜில் வைத்தால் சுவையும் கெட்டு, கெட்டியாகி விடும். 

4 /9

உலர் பழங்கள்:  உலர் பழங்களை பிரிட்ஜில் வைக்கும் பழக்கம் பெரும்பாலானோருக்கு இருக்கும். எனினும் இதனை குளிர்சாதன பெட்டியில் வைக்க கூடாது என்கின்றனர். குளிர்ச்சி மற்றும் ஈரப்பதம் உலர் பழங்களின் சுவையை பாதிக்கும். 

5 /9

காபி - காபி கொட்டை அல்லது பொடியை குளிர்சாதன பெட்டியில் வைத்திருந்தால், பிரிட்ஜில் உள்ள ஈரப்பதம் காரணமாக, காபியின் மணமும் சுவையும் பாதிக்கப்படும்

6 /9

முட்டை: முட்டையை பிரிட்ஜில் வைப்பது முற்றிலும் தவறு. aதன் சுவை கெட்டு விடும். மேலும், பிரிட்ஜில் வைத்து வெளியில் எடுக்கப்பட்ட பின் முட்டை சீக்கிரம் கெடத் தொடங்கும். இவை சாப்பிடுவதற்கு ஆரோக்கியமற்றவை. 

7 /9

மூலிகை: துளசி , ரோஸ்மெரி போன்ற  மூலிகை இலைகளையும் ஃபிரிட்ஜில் வைக்கக் கூடாது. பிரிட்ஜில் வைப்பதால், இவற்றில் மருத்துவகுணம் நீங்கி விடும். இதனால் இதனை பயன்படுத்தினால் பலன் இருக்காது.

8 /9

தேன்: இயற்கையிலேயே கெட்டுப் போகாத தன்மை கொண்ட தேனை சாதாரண தட்பவெப்பநிலையில் இறுக மூடி வைத்தாலே போதும். ஆனால், ஃபிரிட்ஜில் குளிர்ந்த சூழலில் வைத்திருக்கும்போது, அதன் மணம், குணம் சுவை உபயோகிக்க முடியாத அளவுக்கு மாறிவிடும்.

9 /9

பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ZEE MEDIA இந்த தகவல்களுக்கு பொறுப்பேற்காது.