தீபாவளி கிஃப்ட் ஐடியாக்கள்! பட்ஜெட்டுக்குள் வரும் 5 நல்ல பரிசுகள்!
Diwali 2024 Gift Ideas : தீபாவளி நெருங்கி வந்தாச்சு. இந்த நாளில், உங்கள் அன்புக்குரியவர்களுக்கு என்னென்ன பரிசுகள் கொடுக்கலாம்? இதோ சில ஐடியாக்கள்.
Diwali 2024 Gift Ideas : பண்டிகைக்காலம் வந்தாலே மகிழ்ச்சியான தருணங்களை பங்கு போட, நாம் அனைவரும் விரும்புவோம். அதிலும் தீபாவளி வந்துவிட்டால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் ஒரே குதூகலம்தான். காரணம், புதுப்புது ஆடைகள், அணிகலன்கள், வாய்க்கு ருசியான உணவு, பட்டாசு வெடித்தல், உறவினர்களை சந்தித்தல் என அனைத்துமே மகிழ்ச்சிக்குரிய விஷயங்களாக நடக்கும். பலர், இந்த தீபாவளிக்கு தங்கள் அன்புக்குரியவர்களுக்கு சில பரிசு பொருட்களை வாங்கித்தர வேண்டும் என்று யோசிப்பர். ஆனால், தீபாவளி சமயத்தில் நிறைய செலவாகும் என்பதால் பட்ஜெட் குறித்தும் யோசிப்பர். அந்த வகையில், இந்த வருட தீபாவளிக்கு உங்கள் அன்புக்குரியவர்களுக்கு உங்கள் பட்ஜெட்டிற்குள் வரும் பரிசு பொருட்கள் குறித்து இங்கு பார்க்கலாம்.
வீட்டில் செய்த ஸ்வீட்:
தீபாவளி என்றாலே, அனைவரும் அதிரசம் முருக்கு ஆகியவற்றை வீட்டில் செய்வோம். வெளியில் இருப்பவர்களுக்கு அது போன்ற பொருட்களை தராமல் நீங்கள் புதிதாக தயாரித்த பிஸ்கட், சாக்லேட், கேக் உள்ளிட்டவற்றை கொடுக்கலாம். பட்ஜெட்டுக்குள் வரும் அளவிற்கு பொருட்களை வாங்கி, வீட்டில் தாராளமாக செய்து நீங்கள் நினைக்கும் ஆட்களுக்கு கொடுக்கலாம்.
கிஃப்ட் பாஸ்கெட்:
வீட்டிற்கு தேவையான, தனிப்பட்ட ரீதியாக அவர்களுக்கு தேவையான வெவ்வேறு பொருட்களை வாங்கி ஒரே கிஃப்ட் ஹேம்பராக கொடுக்கலாம். அது மேக்-அப் சம்பந்தப்பட்ட பொருட்களாகவும் இருக்கலாம், சமையலுக்கு தேவையான மளிகை பொருட்களாகவும் இருக்கலாம். உங்கள் பட்ஜெட்டிற்கு ஏற்றபடி அதை வாங்கி கொடுத்து மகிழலாம்.
வீட்டு அலங்கார பொருட்கள்:
வீட்டில் அழகாக மாட்டப்படும் வால் ஹேங்கிங், கடிகாரம், ட்ரீம் கேட்சர், லேம்ப், வாசனை மெழுகுவர்த்தி உள்ளிட்ட அலங்கார பொருட்களை கொடுக்கலாம். இது போன்ற பொருட்கள் வீட்டிற்கு அழகு சேர்ப்பதுடன் உங்கள் உறவுக்கும் அழகு சேர்க்கும். துணி:
ஆடை:
மனிதர்கள் அனைவருக்குமே தாங்கள் வாங்கும் அல்லது உடுத்தும் ஆடைகள் மீது அலாதி பிரியம் வைத்திருப்பர். ஒரு குடும்பத்திற்கு பரிசு கொடுக்க முடிவெடுத்திருக்கிறீர்கள் என்றால் அவர்கள் அனைவருக்கும் ஒரே கலரில் அல்லது ஒரே டிசைனில் ஆடைகள் வாங்கித்தரலாம். அதை வாங்கும் போது அவர்களுக்கு பிடித்தார் போல அது இருக்கிறதா என்பதை பார்த்துக்கொள்ள வேண்டும்.
ஆல்பம் அல்லது போட்டோ ஃப்ரேம்:
நாம் அனைவருமே அழகான தருணங்களை எங்காவது கண்டிப்பாக சேமிக்க வேண்டும் என்று யோசிப்போம். அதற்கு உதவுவதுதான் போட்டோ ஃப்ரேம் அல்லது ஆல்பம். முடிந்தால் அவர்களிடம் நல்ல போட்டோவை வாங்கி, அதை ஃப்ரேம் போடலாம். அப்படி இல்லை என்றால் அவர்களே ப்ரிட்ண்ட் போட்டு போட்டோக்களை வைத்துக்கொள்ள ஒரு ஆல்பத்தை பரிசளிக்கலாம்.
மேலும் படிக்க | விரைவில் தீபாவளி 2024 பரிசு: குடும்ப அட்டைதாரர்களுக்கு வருகிறது புதிய அறிவிப்பு!
விளக்குகள்:
தீபாவளி தினத்தை போல, நீங்கள் பரிசு கொடுப்பவரின் வாழ்விலும் ஒளி வீச பலதரப்பட்ட டிசைன் அல்லது கலர் கொண்ட அகல் விளக்குகளை வாங்கித்தரலாம். இதனால் அவர்கள் வீடும் மனமும் வெளிச்சம் பெரும்.
பிடித்த அல்லது கேட்ட பொருட்கள்:
நீங்கள் பரிசு கொடுக்க விரும்பும் நபர், எப்போதாவது உங்களிடம் தான் வாங்க நினைக்கும் பொருள் குறித்து கூறியிருப்பார். அது, உங்கள் பட்ஜெட்டிற்குள் வந்தால் கண்டிப்பாக அதனை நீங்கள் வாங்கித்தரலாம். உதாரணத்திற்கு அவர் புத்தக பிரியர் என்றால், அவர் அடுத்து எந்த புத்தகம் வாங்க வேண்டும் என்று நினைத்துக்கொண்டிருக்கிறாரோ, அதை வாங்கி கொடுக்கலாம்.
மேலும் படிக்க | வீட்டில் செல்வம் செழிக்க..‘இந்த’ 8 செடிகளை தீபாவளியன்று நடலாம்!!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ