உங்கள் காதலன்/காதலியிடம் இந்த விஷயங்களை பற்றி கேட்க வேண்டாம்!
சில விஷயங்களை தெரிந்தோ, தெரியாமலோ அல்லது ஆர்வத்திலோ உங்கள் காதலன் அல்லது காதலியுடன் கேட்கலாம். இதனால் உங்கள் உறவு முறிந்து போக கூட வாய்ப்புள்ளது.
ஒரு உறவை நீண்ட நாட்கள் எந்தவித பிரச்சனையும் இல்லாமல் கொண்டு செல்வது கடினமான விஷயம். பெரும்பாலும் ஒரு உறவில் இருப்பவர்கள் தெரிந்தோ தெரியாமலோ சில தவறுகளை செய்கிறார்கள். சில நேரங்களில் அவை பெரிய பிரச்சனைகளில் கொண்டு போய்விடும். இதனால் இருவருக்கும் இடையே உள்ள அன்பு குறைய ஆரம்பிக்கிறது. இதன்பிறகு ஒரு விஷயத்தை மனம்விட்டு பேச கூட தயங்குகின்றனர். சில சமயங்களில் ஒருவருக்கொருவர் பல கட்டுப்பாடுகளை வைக்க ஆரம்பிக்கின்றனர். எனவே சில விஷயங்கள் பற்றி உங்கள் துணையிடம் ஒருபோதும் பேச கூடாது. சில சமயங்களில் பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை என்றாலும், சில சமயங்களில் பெரிய பிரச்சனைக்கு வழிவகுக்கும். உங்கள் துணையிடம் எந்த விஷயங்களை பற்றி பேசலாம், எது பற்றி பேச கூடாது என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.
மேலும் படிக்க | வெளிநாடு டூர் இனி எளிது தான்... IRCTC வழங்கும் சில வெளிநாட்டு பேக்கேஜ்..!!
கடந்த கால காதலை பற்றி பேச கூடாது
உங்கள் துணையின் ஒருபோதும் கடந்த கால உறவுகளை பற்றி மீண்டும் பேச வேண்டாம். கடந்த கால உறவுகளை பற்றி கேட்கும் போது எரிச்சல் மற்றும் கோபம் அடைய வாய்ப்புள்ளது. மறக்க நினைக்கும் ஒரு உறவை பற்றி மீண்டும் மீண்டும் கேட்டு தொந்தரவு செய்வது உங்கள் துணையை காயப்படுத்தலாம். எனவே உங்கள் உறவை நீண்ட காலம் சண்டைகள் இல்லாமல் கொண்டு செல்ல இது போன்ற விஷயங்களை பற்றி பேச வேண்டாம்.
நடத்தை பற்றி கருத்து கூட வேண்டாம்
ஆண் அல்லது பெண் என இருவருக்கும் தங்கள் துணை எப்படி இருக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு இருக்கும். எனவே அதுபோல அவர்களை மாற்றவும் முயற்சி செய்வார்கள். எனவே அவர்கள் செய்யும் சிறு சிறு தவறுகளை கூட சுட்டி காட்டுகின்றனர். எப்படி நடப்பது, எப்படி சாப்பிட வேண்டும், எப்படி உட்கார வேண்டும் போன்ற சின்ன விஷயங்களை கூட சொல்கின்றனர். இப்படி செய்வது ஒருவரது ஆளுமையை பாதிக்கும் மற்றும் அவரது தன்னம்பிக்கையை பலவீனப்படுத்தும்.
உடல் நல பிரச்சனைகள் பற்றி பேச வேண்டாம்
உங்கள் துணையின் தோல் அல்லது முடி பிரச்சனைகளை பற்றித் பேச வேண்டாம் என்று வலியுறுத்தப்படுகிறது. இது உங்கள் துணைக்கு மன அழுத்தத்தை ஏற்படுத்தலாம். பொதுவாக தோல் பிரச்சனை மற்றும் முடி கொட்டும் பிரச்சனைகளை மற்றவர்களிடம் சொல்ல தயங்குவார்கள். எனவே இதுபோன்ற பிரச்சனைகளைப் பற்றி பேசுவதைத் தவிர்க்க வேண்டும்.
உடல் எடை பற்றி பேச வேண்டாம்
உங்கள் துணையை உடல் ரீதியாக கிண்டல் செய்ய கூடாது. உங்கள் துணையின் எடை அதிகமாகவோ அல்லது குறைவாகவோ இருந்தால் அது பற்றி பேச கூடாது. இது போன்ற உணவை சாப்பிட வேண்டும், இந்த உணவுகளை சாப்பிட கூடாது, தினசரி நடக்க வேண்டும் என்று தொந்தரவு செய்ய கூடாது. உடல் எடையை வைத்து ஜோக் அடித்தாலும் பாடி ஷேமிங் பிரிவில் சேர்க்கப்படும். இது உங்கள் துணையை மன ரீதியாக பாதிக்கும்.
மேலும் படிக்க | பத்ரி கேதார் செல்ல நல்ல வாய்ப்பு... IRCTC சார்தாம் யாத்திரை பேக்கேஜ் விபரம்..!!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ