குழந்தை வளர்ப்பு... பெற்றோர்கள் மனதில் கொள்ள வேண்டிய ‘சில’ முக்கிய விஷயங்கள்.!

குழந்தை வளர்ப்பு: குழந்தைகளை சிறப்பாக வளர்க்க,  தாயும் தந்தையும் இணைந்து குழந்தை வளர்ப்பில் முழு பங்களிப்பை வழங்க வேண்டும். அதனால் குழந்தைகள் நல்ல சூழலில் வளர்வது மட்டுமின்றி வீட்டில் உள்ள நேர்மறையான சூழல் அவர்களின் ஆளுமை திறனை அதிகரிக்கிறது.

குழந்தை வளர்ப்பில் பல விஷயங்கள் உதவுகின்றன. இதில் பெற்றோர்களுடன் குழந்தை கழிக்கும் வீட்டுச் சூழலும் முக்கியமானது. தாயின் போதனையால் மட்டும் குழந்தைகள் முழுமையாக வளர முடியாது. ஒரு தந்தையாக, அவரை வளர்க்கும் போது சில விஷயங்களை மனதில் கொள்ள வேண்டும். 

1 /8

குழந்தைகளுடன் நேரத்தை செலவிடுவதல்: குழந்தையுடன் முழுமையாக நேரத்தை செலவிடுவது முக்கியம். குறிப்பாக அம்மா வேலை செய்யும் சமயங்களில், குழந்தையுடன் தொடர்ந்து ஈடுபடுவது, அவருக்கு உணவளிப்பது, கற்பிப்பது மற்றும் அவர்ருடன் பேசுவது தந்தையின் பொறுப்பு. அதனால் குழந்தைக்கு, தந்தையுடனான பந்தமும் அதிகரிக்கிறது. 

2 /8

மனைவியை அவமரியாதை செய்யாதீர்கள்: உங்கள் பிள்ளைகள் முன்னிலையில் உங்கள் மனைவியை அவமரியாதை செய்வது அல்லது உரையாடலை குறுக்கிட்டு அவள் செய்வது தவறு என கூறுவது சரியானதல்ல. இதனால், குழந்தைகள் அமாவின் பேச்சைக் கேட்காமல் போகும் வாய்ப்பு உண்டு.

3 /8

பெற்றோர்கள் பரஸ்பரம் சண்டையிடுதல்: பெற்றோர்கள் பரஸ்பரம் சண்டையிடுதல்  வளரும் குழந்தையின் மனதில் எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. குழந்தையின் முன் கருத்து வேறுபாடுகளை வெளிப்படுத்தாமல் இருக்க முயற்சி செய்யுங்கள், மாறாக நீங்கள் தனியாக இருக்கும் போது பரஸ்பர கருத்து வேறுபாடுகளை தீர்த்துக் கொள்ளுங்கள்.

4 /8

ஒன்றாக இரவு உணவு அருந்துதல்: இரவு உணவிற்கு முழு குடும்பத்தினர் சேர்ந்து உட்கார்ந்து உணவு உட்கொள்ளுங்கள். இந்த நேரத்தில், குழந்தையுடன் பேசவும்.  இதன் மூலம் குழந்தை தனது உணர்வுகளைப் பகிர்ந்து கொள்ளக் கற்றுக்கொள்கிறார். தயக்கமின்றி அனைவருக்கும் முன்னால் பேசும் பழக்கத்தை வளர்த்துக் கொள்கிறார்கள்.

5 /8

குழந்தைகள் மனதை குழப்பக் கூடாது: பெற்றோர்களும் தங்கள் குழந்தைகளிடம் ஒரே விதத்தில் பேச வேண்டும். குழந்தையின் முன் ஒருங்கிணைந்த மனதை வெளிக்காட்ட வேண்டும். பரஸ்பரம் குறுக்கிட்டு பேசுவது குழந்தையை குழப்பமடையச் செய்வது மட்டுமல்லாமல், அவரது மனதில் எதிர்மறையான தாக்கத்தையும் ஏற்படுத்துகிறது.

6 /8

குழந்தை செய்யும்  செலவு: பெரும்பாலும் அப்பா குழந்தைகளுக்காகச் சிந்திக்காமல் பணத்தைச் செலவு செய்கிறார்.  எனவே செலவுகளுக்கு அம்மாவிடம் சம்மதம் வாங்கும் பழக்கத்தை குழந்தைக்கு ஏற்படுத்தினால் மட்டுமே குழந்தை பணத்தை செலவழிக்கும் முன் கண்டிப்பாக யோசித்து, பட்ஜெட்டை எவ்வாறு கட்டுப்படுத்துவது என்பதை அறிந்து கொள்ளும்.  

7 /8

தவறை ஒப்புக் கொள்ளும் குணம்: நீங்கள் ஏதேனும் தவறிழைத்தால், அதற்காக மன்னிப்பு கேட்க தவறாதீர்கள். இதன் மூலம் குழந்தைப் பருவத்திலிருந்தே தன் தவறை ஒப்புக்கொள்ளவும், யாரேனும் ஒருவரின் மனதை புண்படுத்தும் போது   மன்னிப்பு கேட்கவும், கற்றுக் கொள்ளும். 

8 /8

குழந்தை வளர்ப்பு டிப்ஸ்: குழந்தைகள் அறிவாளிகளாக வளரும் அதே சமயத்தில் கண்ணியமானவர்களாகவும் வளர மேலே கூறப்பட்ட அறிவுரைகளை பின்பற்றுவது பலன் கொடுக்கும்.