புதுடெல்லி: இந்த உலகில் மனிதர்களாய் பிறந்த அனைவரும் ஏதோ ஒரு கட்டத்தில் சிக்கலில் மாட்டிக் கொள்ளத்தான் செய்கிறார்கள். ஒவ்வொரு நபருக்கும் ஏதோ ஒரு ரகசியம் இருக்கும். சிலர் தங்கள் மகிழ்ச்சி மற்றும் துக்கத்தை, நம்பி சிலரிடம் பகிர்ந்து கொள்கிறார்கள். ஆனால் தங்கள் ரகசியங்கள் ரகசியங்களாக இல்லை, பலருக்கு தெரிந்துள்ளது என்பது தெரியும்போது, அவர்களுக்கு அதிர்ச்சியாய் இருக்கிறது. அப்போதுதான் தங்கள் தவறை உணர்கிறார்கள். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ஜோதிட சாஸ்திரத்தின் படி, சில ராசிக்காரர்களால், ரகசியங்களை (Zodiac Signs) யாரிடமும் சொல்லாமல் வைத்திருக்க முடியாது. தங்களை நம்பி கூறியவர்களுக்கு இதனால் பிரச்சனை வரும் என்று தெரிந்தாலும், இவர்கள் ரகசியங்களைக் காக்க தவறி விடுகிறார்கள். ஆகையால் சில குறிப்பிட்ட ராசிக்காரர்களிடம் எந்த ரகசியங்களையும் பகிர்ந்துகொள்ளாமல் இருப்பது நல்லது. அவை எந்த ராசிகள் என இங்கே காணலாம். 


மேஷம் (Aries)


மேஷ ராசிக்காரர்கள் மிகவும் உற்சாகமாகவும், சுறுசுறுப்பாகவும் இருப்பார்கள். அவர்களது உற்சாகத்தாலும், துடுக்குத்தனத்தாலும் சில சமயம் அவர்கள் குழம்பிப்போய் மற்றவர்களது ரகசியங்களை பலர் முன்னிலையில் வெளிப்படுத்தி விடுகிறார்கள். இந்த நபர்களுடம் தங்கள் ரகசியங்களை பகிர்ந்துகொள்வதை மற்றவர்கள் தவிர்க்க வேண்டும். 


மிதுனம்  (Gemini)


மிதுன (Gemini) ராசிக்காரர்கள் மற்றவர்களிடம் பேசுவதில் திறம் படைத்தவர்கள். இவர்களிடம் அனைவரும் எளிதில் நட்புகொள்வார்கள். இவர்கள் மக்கள் மனதில் எளிதில் இடம் பிடித்து விடுவார்கள். இதனால், மக்கள் இவர்களை எளிதில் நம்பி தங்கள் ரகசியங்களைச் சொல்லி விடுகிறார்கள். ஆனால், மிதுன ராசிக்காரகளுக்கு வம்பு பேசும் பழக்கமும் இருப்பதால், அவர்கள் ஒருவரது ரகசியங்களை மற்றவர்களிடம் கூறி விடுவார்கள். ஆகையால், இவர்களிடம் ஜாக்கிரதையாக இருப்பது நல்லது. 


ALSO READ | சேமிக்கும் திறனால், பணக்காரர் ஆகும் திறன் பெற்ற ‘4’ ராசிக்காரர்கள்..!!!


கடகம் (Cancer)


கடக ராசிக்காரர்களுக்கு தங்கள் மனம் மற்றும் பேச்சில் கட்டுப்பாடு இருக்காது. எதை சொல்லக்கூடாதோ அதை கண்டிப்பாக சொல்லி விடுவார்கள். ஒருவருடைய ரகசியத்தை பலர் முன்னால் கூறும்போதும் இவர்கள் யோசிப்பதில்லை. ஆகையால், இவர்களிடம் ரகசியங்களை சொல்வது நம் தலையை நாமே அடித்துக்கொள்வது போன்றது. 


துலாம் (Libra)


துலா ராசிக்காரர்கள் பேசுவதில் மிகவும் அற்புதமானவர்கள். இவர்கள் மற்றவர்களிடம் பேசி எளிதில் விஷயங்களைப் பெற்று விடுவார்கள். பின்னர் தங்கள் வசதிக்காக, இவற்றை சொல்லக்கூடாதவர்களிடம் சொல்லியும் விடுவார்கள். இந்த ராசிக்காரர்களை நம்புவதற்கு முன்னர் பலமுறை யோசிக்க வேண்டும். 


தனுசு (Sagittarius)


தனுசு (Sagittarius) ராசிக்காரர்கள் அனைவரையும் எளிதில் ஈர்த்து விடுவார்கள். மக்கள் தனுசு ராசிக்காரர்களை எளிதில் நம்பி விடுவார்கள். தனுசு ராசிக்காரர்கள் தெரிந்தோ தெரியாமலோ தங்கள் ரகசியங்களை மட்டுமல்லாமல் பிறரது ரகசியங்களையும் மற்றவர்களிடம் கூறி விடுகிறார்கள்.  பின்னர் அவதிப்படுகிறார்கள். இவர்களை நம்புவது பிரச்சனையை நாமே வெற்றிலை பாக்கு வைத்து அழைப்பது போன்றதாகும். 


(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ஜீ மீடியா இவற்றை உறுதிப்படுத்தவில்லை.)


ALSO READ | Vastu Alert: சமையலறையில் இவையெல்லாம் இருக்கவே கூடாது, ஜாக்கிரதை!! 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR