இவர்கள் மீது சனி பகவானின் கோபப்பார்வை எப்போதும் இருக்கும்: நீங்களும் இவர்களில் ஒருவரா?

ஏழையாக இருந்தாலும் சரி, பணக்காரனாக இருந்தாலும் சரி, தவறான செயல்களைச் செய்பவர்களை சனி பகவான் ஒருபோதும் விட்டு வைப்பதில்லை. 

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Jan 6, 2022, 02:59 PM IST
  • சனி பகவான் நீதியின் கடவுள்.
  • தவறு செய்பவர்களை சனி பகவான் ஒருபோதும் மன்னிப்பதில்லை.
  • சனி பகவானின் கொடூரமான பார்வைக்கு ஆளாகும் நபர்கள் யார்?
இவர்கள் மீது சனி பகவானின் கோபப்பார்வை எப்போதும் இருக்கும்: நீங்களும் இவர்களில் ஒருவரா? title=

சனி பகவான் நீதியின் கடவுள். கலியுகத்தில் சனி பகவான் நவகிரகங்களில் நீதிபதி என அழைக்கப்படுகிறார். தன் கடமைகளை செவ்வனே செய்து நியாயமாக நடப்பவர்களுக்கு சனி பகவான் கருணை காட்டுகிறார்.

தவறு செய்பவர்களை சனி பகவான் (Lord Shani) ஒருபோதும் மன்னிப்பதில்லை. ஏழையாக இருந்தாலும் சரி, பணக்காரனாக இருந்தாலும் சரி, தவறான செயல்களைச் செய்பவர்களை சனீஷ்வரர் ஒருபோதும் விட்டு வைப்பதில்லை. 

தீங்கான செயல்களை செய்யும் ஜாதகக்காரர்கள் மீது சனி பகவான் தன்னுடைய தசை, அந்தரதசை, ஏழரை நாட்டு சனி ஆகியவற்றின் மூலம் அசுப பலன்களை வழங்குகிறார். தேவர்களால் கூட சனி பகவானின் கோவத்திலிருந்து தப்பிக்க முடியாதென்றால், மனிதர்கள் எம்மாத்திரம்? 

சனி பகவானின் கொடூரமான பார்வைக்கு ஆளாகும் நபர்கள் யார்? யார் மீது சனீஸ்வரரின் கோவமான பார்வை படுகிறது? இதன் விளக்கத்தை இந்த பதிவில் காணலாம். 

மற்றவர்களை ஏமாற்றுபவர்கள்

சுயநலமாக இருப்பவர்களையும் (Selfish People) தொடர்ந்து மற்றவர்களிடம் பொய் சொல்பவர்களையும் சனி பகவான் தண்டிக்கிறார்.

நிந்தனை செய்பவர்கள்

பிறருக்குத் தீமை செய்பவர்களையும், பிறர் முதுகுக்குப் பின்னால் அவர்களைப் பற்றி பேசுபவர்களையும் சனி பகவான் தகுந்த முறையில் தண்டிக்கிறார். நிதி இழப்பு, குடும்ப தகராறு அல்லது நோய் போன்றவற்றின் மூலம் இந்த தண்டனையை நிறைவேற்றுகிறார்.

பொய் சொல்பவர்கள்

பொய் சொல்பவர்கள் மீது சனி பகவான் மிகுந்த கோவம் கொள்கிறார். அப்படிப்பட்டவர்கள் நினைத்தாலும் முன்னேற முடியாது.

ALSO READ | இந்த ராசிக்காரர்களுக்கு புதனின் எச்சரிக்கை! இந்த பரிகாரங்களால் நிம்மதி கிடைக்கும்

கெட்ட பழக்கங்களை கைவிடாதவர்கள்

திருட்டு (Robbery), வழிப்பறி, மது அருந்துதல், விபச்சாரம் போன்ற தவறான பழக்கங்களைக் கொண்டுள்ளவர்கள் மீதும் சனி பகவானின் கோவம் பாய்கிறது. சனீஸ்வரர் அத்தகையவர்களை எப்போதும் நோயாளியாகவும் ஏழைகளாகவும் வைத்திருப்பார்.

ஏழை மற்றும் பலவீனமானவர்களை ஒடுக்குகிறவர்கள்

சனி பகவான் நீதியின் கடவுள். ஏழை மற்றும் நலிந்த மக்களுக்கு அவர் ஆதரவாக இருப்பவர். அத்தகைய சூழ்நிலையில், பலவீனமானவர்களை துன்புறுத்துபவர்களையும் ஏழைகளை துன்புறுத்துபவர்களையும் அவர் ஒருபோதும் மன்னிப்பதில்லை. இப்படிப்பட்டவர்கள் வாழ்க்கையில் சனி பகவானின் கோவப்பார்வைக்கு ஆளாக நேரிடுகிறது. 

கடின உழைப்புக்கு அஞ்சுபவர்கள்

சனி பகவான் கர்மாவின் அதிபதி. தங்கள் கடமையை செய்யாதவர்கள், கடி உழைப்புக்கு அஞ்சுபவர்கள், வேலை செய்யாமல் இருப்பதற்கு சாக்குப்போக்குகளைக் கண்டுபிடித்து, சோம்பேறித்தனத்தைக் காட்டுபவர்கள் ஆகியோருக்கு சனீஷ்வரர் ஒருபோதும் சுப பலன்களைத் தருவதில்லை. அத்தகைய மந்தமான நபர்கள் மீது சனி பகவானின் கோவமான பார்வையே விழுகிறது. இதனால் இவர்களது வாழ்க்கையில், ஏழ்மை, நிதி பற்றாக்குறை ஆகியவை ஏற்படுகின்றன. 

ALSO READ | 2022-ல் சனி மற்றும் ராகு பெயர்ச்சியால் இந்த ராசிக்காரர்கள் தொட்டதெல்லாம் பொன்னாகும் 

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR

Trending News