Relationship Tips In Tamil: திருமண உறவில் இருக்கும் போது உங்கள் தாத்தா - பாட்டியில் தொடங்கி தாய் - தந்தை, பெரியம்மா - பெரியப்பா, சித்தி - சித்தப்பா, மாமா - அத்தை என குடும்ப உறுப்பினர்கள் தொடங்கி உங்களின் நண்பர்கள் வரை பலரும் அடிக்கடி சண்டையிடுவதை பார்த்திருப்பீர்கள். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

அது காதலித்து திருமணம் செய்தவர்களாக இருக்கலாம், பல நாள்கள் லிவ்-இன் உறவில் இருந்து அதன்பின் திருமணம் செய்தவர்களாக இருக்கலாம், நீண்ட நாள் நண்பர்களாக இருந்து திருமணம் செய்தவர்களாக இருக்கலாம், வீட்டில் பார்த்து திருமணம் செய்தவர்களாக இருக்கலாம், திருமணமாகிவிட்டாலே ஆண் - பெண் இடையே சண்டை சச்சரவு வருவது இயல்பான ஒன்றுதான். எனவே, இதைக்கண்டு நீங்கள் திருமண உறவுக்கு செல்லலாமா, யாரை திருமணம் செய்துகொள்வது என சிந்தித்து குழப்பிக் கொள்ளக்கூடாது. 


அடிக்கடி சண்டையா...?


இது திருமணம் ஆகாதவர்களுக்கான அட்வைஸ். இதற்கு பின் திருமணமாகி அடிக்கடி சண்டைப் போடுவர்களுக்கான அறிவுரையும் இதில் விரிவாக அலசப்படுகிறது. அதாவது, திருமண உறவில் அடிக்கடி சண்டை வந்தால் அவர்கள் மகிழ்ச்சியாக இல்லை என நினைப்பது முற்றிலும் தவறு. ஆரோக்கியமான முறையில் திருமண உறவில் சண்டை வருவது என்பது ஏற்றுக்கொள்ளத்தக்கதுதான். 


தம்பதிகளுக்கு இடையே சண்டை வராமல் இருந்தால் அவர்கள் பெரும்பாலும் போலியாக இருக்கிறார்கள் என அர்த்தம் எனலாம். அந்த வகையில், திருமண உறவில் அடிக்கடி சண்டை வருவதால் உங்களுக்கு ஏற்படும் 3 நன்மைகளை இங்கு விரிவாக காணலாம். இதன்மூலம், சண்டை வருவதும் ஆரோக்கியமானதுதான் என்பதை நீங்கள் புரிந்துகொள்வீர்கள்.


மேலும் படிக்க | Break Up : காதல் தோல்வியில் இருந்து மீண்டு வர...ஈசியான 8 வழிகள்


நேர்மை அதிகரிக்கும்


திருமண உறவில் நீங்கள் அடிக்கடி சண்டையிடுவது மூலம் உங்கள் உறவில் நேர்மையான விஷயங்கள் அதிகரிக்கும். எதையும் மறைக்காமல் அவற்றை வெளிப்படையாக உங்கள் பார்ட்னரிடம் முன்வைப்பீர்கள். சண்டை ஏற்பட்டாலும் ஆரோக்கியமான முறையில் உரையாடினால் நிச்சயம் அதற்கு தீர்வை பெறலாம்.


நெருக்கம் அதிகமாகும்


அடிக்கடி சண்டையிட்டு அதன்மூலம் தீர்வு பெறும்போது இருவருக்கும் உள்ளான நெருக்கம் அதிகரிக்கும். ஆரோக்கியமான உறவுக்கு இது அவசியமாகும். உணர்வு ரீதியாக நீங்கள் அதிகம் நெருக்கமாவதால் உங்களின் உறவும் பலப்படும். 


பலவீனம் பறந்துபோகும்


அடிக்கடி சண்டையிடுவதன் மூலம் நீங்கள் பலவீனமாக உணரும் விஷயங்களை நீங்கள் நிச்சயம் உதறித்தள்ளுவீர்கள். அதாவது உறவில் வரும் பிரச்னைகளையே தீர்க்கும் போது உங்களுக்கு தன்னம்பிக்கை அதிகரிக்கும், பலவீனங்கள் பறந்துபோகும். 


திருமண உறவில் அடிக்கடி சண்டை வந்தாலும் இந்த மூன்று விஷயங்கள் உங்களின் திருமண உறவை பலமாக்க தாங்கிப்பிடிக்கும். எனவே, அடுத்த முறை சண்டையிடும் போது அதனால் வரும் நன்மைகளை புரிந்துகொண்டாலே மற்ற பிரச்னைகளை தவிர்க்கலாம். 


(பொறுப்பு துறப்பு: இது பொதுவான தகவல்களை அடிப்படையாக வைத்து எழுதப்பட்டது. திருமண உறவில் அடிக்கடி பிரச்னை வரும்பட்சத்தில் அதற்கு உரிய வல்லுநரை சந்தித்து ஆலோசனை பெற வேண்டியது அவசியம். இதனை Zee News உறுதிப்படுத்தவில்லை)


மேலும் படிக்க | அதிகரிக்கும் விவகாரத்திற்கு இது தான் காரணம்! இந்த தவறை செய்ய வேண்டாம்!
 


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ