கணவன்களே ரொம்ப கவனமாக இருங்க... மனைவிமார்களை எரிச்சலாக்கும் இந்த 5 விஷயங்கள்...

Relationship Tips: திருமண உறவில் கணவன் இந்த 5 விஷயங்களை செய்யும்போது மனைவிமார்கள் கடுமையாக எரிச்சலடைவார்கள். இதனால், மனைவியை கோபத்திற்குள்ளாக்காமல் இருக்க இவற்றை கணவன்கள் நிச்சயம் தெரிந்துகொள்ள வேண்டும்.

  • Sep 02, 2024, 14:44 PM IST

திருமண உறவில் கணவன் - மனைவி இருவரும் பரஸ்பரம் நிம்மதியுடனும், மகிழ்ச்சியுடனும் இருக்க வேண்டும். அப்படியிருக்கும்போதுதான் திருமண உறவு என்பது ஆரோக்கியமானதாக இருக்கும்.

 

1 /8

திருமண உறவில் கணவன் - மனைவி ஆகியோர் நிம்மதியாக வாழ வேண்டும் என்றால் இருவருக்கும் தங்கள் குறித்து நல்ல புரிதல் இருக்க வேண்டும். அதில் ஒருவர் மற்ற பிடித்தது என்ன பிடிக்காதது என்ன என்பதை தெரிந்துகொள்வது அவசியம்.  

2 /8

அந்த வகையில், பொதுவாக மனைவிமார்களுக்கு பிடிக்காத இந்த 5 விஷயங்களை கணவன்கள் நிச்சயம் தெரிந்துவைத்துக்கொண்டு அவற்றை செய்யாமல் தவிர்க்க வேண்டும். அதுகுறித்து இங்கு விரிவாக காணலாம்.   

3 /8

மனைவியின் தனிப்பட்ட விஷயங்கள் மற்றும் அவரை சுதந்திரமாக செயல்படவிடாமல் தடுப்பது அவரை கோபத்திற்கும், எரிச்சலுக்கும் உள்ளாக்கும். உங்கள் மனைவி தனியாக ஒரு வேலையை செய்ய ஆசைப்படுகிறார் எனில் அதில் நீங்கள் தலையிடுவதை தவிர்க்க வேண்டும். மனைவிமார்களுக்கு என தனிநேரமும், சுதந்திரமும் அவசியமான ஒன்று.   

4 /8

வீட்டு வேலைகளை புறக்கணிக்காதீர்கள். விருந்தினர்கள் வந்திருக்கும்போது உங்கள் மனைவி மட்டும் அனைத்து ஏற்பாடுகளையும் செய்ய வேண்டும் என நினைக்கக் கூடாது. நீங்களும் அதில் பங்கெடுத்துக்கொண்டு அவருக்கு உதவ வேண்டும். அதாவது,  வீட்டு வேலைகளை இருவரும் சமமாக பிரித்துக்கொண்டு செய்ய வேண்டும். மனைவி மீது மட்டும் மொத்த வேலையையும் போடுவது என்பது அவரை உச்சக்கட்ட எரிச்சலுக்கு உள்ளாக்கும்.   

5 /8

மனைவியின் எண்ணங்களுக்கும், கருத்துக்களுக்கும் முக்கியத்துவம் அளிக்காமல் அவற்றை புறக்கணித்தாலும் அது மனைவியை எரிச்சலுக்கு உள்ளாக்கும். மனைவியின் கருத்துக்கு முக்கியத்துவம் அளித்து, அவர் சொல்வதை காது கொடுத்து கேளுங்கள். இதுதான் ஒரே வழி.   

6 /8

மனைவி நீண்ட நேரம் தூங்குகிறார், மனைவி அதிகம் செலவு செய்கிறார், மனைவி இதை செய்கிறார், அதை செய்கிறார் என மனைவி குறித்து பொதுவெளியில், குடும்பத்தார் மத்தியில் புகார் செய்தால் அவர்களுக்கு கடுமையான எரிச்சல் வரும். எனவே இதை செய்யாதீர்கள்.   

7 /8

மனைவி ஒரு விஷயத்தை நினைத்து கவலைப்படுகிறார் என்றாலோ, பதற்றமடைகிறார் என்றாலோ நீங்கள் அதனை கவனிக்காமல் விட்டால் அவர்களுக்கு எரிச்சல் வரும், அவர்களை தனியாக விடாதீர்கள்.   

8 /8

பொறுப்பு துறப்பு: இவை அனைத்தும் பொதுவான தகவல்களை கொண்டு எழுதப்பட்டது. இதனை Zee News உறுதிபடுத்தவில்லை.