Saving Tips: இந்த 2 விஷயங்கள் செய்தால் மின்கட்டணம் அதிகம் வராது.. பணத்தை மிச்சப்படுத்தலாம்
Electricity Bill Saving Tips: இந்த இரண்டு விஷயங்கள் செய்தால் அதிக மின்கட்டணம் வராது.. பணத்தை மிச்சப்படுத்தலாம்.
Electricity Bill Saving Tips: கோடைகாலத்தில் ஏசி, கூலர்களால் மின்சாரக் கட்டணம் அதிகமாக இருக்கும். அதேபோல குளிர்காலம் வரும்போது ரூம் ஹீட்டர்கள் மற்றும் வெந்நீர் காரணமாக மின்சாரக் கட்டணம் அதிகரிக்கும். எப்படி பார்த்தாலும் வருடம் 12 மாதங்களும் மின்சாரக் கட்டணம் மக்களின் ரத்தத்தை உறிஞ்சிவிடுகின்றன. ஒவ்வொரு மாதமும் மின்சாரக் கட்டணம் மிக அதிகமாக வருவதால், கலக்கமடைகின்றனர். மின்சாரத்தை குறைவாக பயன்படுத்துவதன் மூலம், மின்சாரக் கட்டணத்தை சேமிக்கலாம். தற்போது குளிர்காலம் என்பதால், எவ்வாறு மின்சாரக் கட்டணத்தைச் சேமிப்பது என்பது குறித்து பார்ப்போம்.
மின்சாரக் கட்டணத்தைச் சேமிக்க உங்களுக்கு இரண்டு தந்திரங்களை சொல்லுகிறோம். இதை நீங்கள் செய்தால், உங்களுக்கு குளிரவும் செய்து, அதேநேரத்தில் வெந்நீரையும் தொடர்ந்து நீங்கள் பயன்படுத்துலாம். அதுவும் குறைந்த மின் கட்டணத்தில்.. இப்போது நீங்கள் இது எப்படி சத்தியம் என யோசித்துக்கொண்டிருப்பீர்கள் வாருங்கள் தெரிந்து கொள்வோம்.
மேலும் படிக்க: எல்ஐசி ஜீவன் அக்ஷய் திட்டம்: ஒருமுறை பிரீமியம் செலுத்தி மாதம் ரூ.20,000 பெறலாம்!
லைட் கீசரை கேஸ் கீசராக மாற்றலாம்:
அதிக மின்சாரக் கட்டணத்தால் நீங்கள் சிரமப்பட்டால், முதலில் உங்கள் லைட் கீசரை அகற்றிவிட்டு, எட்டு பேருக்குப் போதுமான கேஸ் கீசரைப் பொருத்துங்கள். இதன் காரணமாக இந்த கீசரில் நிறைய வெந்நீரும் கிடைக்கும். இது மட்டுமின்றி, மிக முக்கியமான விஷயம் என்னவென்றால், இதன் மூலம் நீங்கள் அதிக மின் கட்டணத்தில் இருந்து விடுபடுவீர்கள். மேலும், ஒரே ஒரு சிலிண்டர் மூலம் இந்த குளிர் பருவத்தை முழுவதையும் கடந்துவிடலாம்.
பொதுவாக இதுபோன்ற கீசர்கள் பெரும்பாலும் மின்சார பிரச்சனை உள்ள இடங்களில் பயன் படுத்தப்படுகிறது. நீங்கள் பணத்தை சேமிக்க விரும்பினால், உங்கள் குளியலறையில் கேஸ் கீசரைப் பொருத்துவதன் மூலம் மின்சாரத்தையும் மற்றும் மின்கட்டணத்தையும் சேமிக்கலாம்.
மேலும் படிக்க: ஆதார் நம்பருடன் - மின்சார எண் இணைக்கணுமா? ரொம்பவே ஈசி, இத மட்டும் பண்ணுங்க
ரூம் ஹீட்டருக்கு பதிலாக சோலார் ஹீட்டர்:
நீங்கள் வீட்டில் பயன்படுத்தும் அறை ஹீட்டர் மின்சாரத்தில் இயங்கும். கடுமையான குளிர்காலத்தில் ரூம் ஹீட்டர் அதிகமாக பயன்படுத்தப்படுகிறது. இதற்கு அதிக மின்சாரம் தேவைப்படுவதால், அதிக மின்கட்டணமும் வருகிறது. எனவே இந்த ஹீட்டருக்குப் பதிலாக சோலார் ஹீட்டரை பயன்படுத்தலாம். இதனால் உங்கள் மின் கட்டணம் அதிகரிக்காது. மேலும் மின்சாரத்தை நம்பி இருக்க வேண்டிய அவசியமும் இருக்காது. ஒருவேளை மின்தடை செய்யப்பட்டாலும் காத்திருக்க வேண்டியதில்லை. சோலார் ஹீட்டருக்கு சூடான காற்றைக் கொடுக்க சூரிய ஒளி மட்டுமே தேவை.
மேலும் படிக்க: Financial Tips: இந்த விஷயம் தெரிந்தால் போதும் பண பிரச்சனையே இருக்காது
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ