சபரிமலை நாதன் ஐயப்பனுக்கும் முருகனை போல அறுபடை வீடு உண்டு என்பது உங்களுக்கு தெரியுமா?.. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

சுவாமி ஐயப்பனுக்கும் (Sabarimala sree ayyappa temple) அறுபடை வீடு உண்டு. அவை: அச்சன்கோயில், ஆரியன்காவு, குளத்துப்புழை, எருமேலி, பந்தளம், சபரிமலை.


அச்சன்கோயில்: தென்காசியிலிருந்து செங்கோட்டை செல்லும் வழியில் 30 கி.மீ. தூரத்தில் உள்ளது. இங்குள்ள அம்பலத்தில் (Temple) தர்மசாஸ்தா, வன அரசனாகக் காட்சி தருகிறார். பரசுராமரால் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு பிரதிஷ்டை செய்யப்பட்ட இந்த விக்கிரகம் இமயமலை (Himalayas) அடிவாரத்திலிருந்து கொண்டுவரப்பட்ட ஒரே கல்லில் உருவாக்கப்பட்டது. அமர்ந்த நிலையில் கையில் அமுதமும், கருப்பனின் காந்த மலை வாளும் ஏந்தி, பூரணை-புஷ்கலை தேவியருடன் அருள்புரிகிறார்.


ஆரியன்காவு: தமிழகத்திற்கும் கேரள மாநிலத்திற்கும் (Kerala) எல்லையாக அமைந்துள்ள தென்மலையின் பக்கத்தில் உள்ள செங்கோட்டையில் இருந்து 20 கி.மீ. தூரத்தில் கேரள மாநிலத்தில் அமைந்த திருத்தலம். ஆரியன்-உயர்ந்தவன், காவு-சோலை. உயர்ந்தவரான சாஸ்தா கோயில் கொண்டுள்ள சோலை என்று இத்தலத்திற்குப் பெயர். இத்திருக்கோயிலில் ராஷ்டிர குலதேவி புஷ்கலையுடன் அரசனாகக் காட்சி தருகிறார்.


ALSO READ | இந்து தர்மத்தில் மட்டும் ஏன் இத்தனை தெய்வங்கள்? - இதோ உங்களுக்கான பதில்..!


குளத்துப்புழை: செங்கோட்டையிலிருந்து 50 கி.மீ. தூரத்தில் கேரளாவில் அமைந்துள்ளது. இங்கு ஐயப்பன் (Sabarimala ayyappa) குழந்தையாக இருப்பதால் 'பால சாஸ்தா' என்று அழைக்கப்படுகிறார். இப்பகுதியில் வாழும் மக்கள் தங்கள் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்புவதற்குமுன், பால சாஸ்தாவின் அம்பலம் சென்று, அங்கு சிறப்பு வழிபாடுகளைச் செய்து, எழுத்தறிவித்து, பிறகு பள்ளிக்கு அனுப்புவர்.


எருமேலி: சபரிமலையின் ஏழு கோட்டைகளுள் இது முதல் கோட்டையாகும். இங்கு வாவர் பள்ளி வாசல், கோட்டை கருப்பசாமி கோயில்கள் உள்ளன. இங்குதான் மணிகண்டன் எருமை முகத்துடன் அட்டூழியம் செய்துகொண்டிருந்த மகிஷியின் மேல் ஏறி நின்று அவளை வதம் செய்தார். கைகளில் வில், அம்பு ஏந்திய திருக்கோலத்தில் காட்சி தருகிறார்.


பந்தளம்: இத்தலத்தில் உள்ள மணிகண்டன் அம்பலத்தில் ஐயப்பன் பாலகனாக நின்ற நிலையில் அருள்கிறார். சபரிமலை சந்நிதானத்துக்குச் செல்லும் வழியில் உள்ள இத்தலத்தில் அருகில் ஓடிக்கொண்டிருக்கும் பம்பை நதிக்கு அருகில்தான் ஐயப்பன் குழந்தையாக, பந்தள ராஜாவால் கண்டெ டுக்கப்பட்டு வளர்க்கப்பட்டார். இங்குதான் சுவாமி ஐயப்பனுக்கு உரிய திரு ஆபரணங்கள் பாதுகாப்பாக உள்ளன.


ALSO READ | கோயிலில் நந்தியின் காதில் வேண்டு கோளைச் சொல்கிறார்களே.. அது சரியா?


சபரிமலை: கேரளாவில் சபரிமலையில் அருள்புரியும் சுவாமி ஐயப்பன் அமர்ந்தத் திருக் கோலத்தில், இரண்டு குதிகால்களின் மீது உடலின் அடிப்பாகத்தை அழுத்தி முன்புறம் சாய்ந்த நிலையில் தம்மை நாடிவரும் பக்தர்களுக்கு யோக சின்னம், சின்முத்திரை தாங்கி அருள்புரிகிறார். இந்த விக்கிரகத்தில்தான் பன்னிரண்டு வயதான மணிகண்டன், தான் பூலோகத்திற்கு வந்த வேலை முடிந்துவிட்டதாக தன்னை வளர்த்தவர்களிடம் சொல்லிவிட்டு, கலியுகத்தில் பக்தர்களுக்கு அருளாசி வழங்க, 'பரசுராமரால் பிரதிஷ்டை செய்யப்பட்ட விக்கிரகத்தில் இரண்டறக் கலந்தார்' என்று புராணம் கூறுகிறது.