அனைவரும் வியந்து நோக்கும் பதவியின் ஒன்று ஐ ஏ எஸ் அதிகாரி. ஐ.ஏ.எஸ் அதிகாரியாக யூனியன் பப்ளிக் சர்வீசஸ் (UPSC) தேர்வில் வெற்றி பெறுவது எளிதல்ல என்பதை நாம் அனைவரும் அறிவோம். யுபிஎஸ்சி தேர்வில் சில நூறு இடங்களுக்கு நாடு முழுவதும் இருந்து லட்சக்கணக்கான மாணவர்கள் போட்டியிடுகின்றனர். இது இந்தியாவின் கடினமான தேர்வுகளில் ஒன்றாகும். யுபிஎஸ்சி தேர்வில், கடின உழைப்பில் வெற்று பெற்று,  ஐ.ஏ.எஸ் அதிகாரியாக பதவி ஏற்கும் எவ்வளவு சம்பளம் பெறுகிறார்கள்  என்பது உங்களுக்கு தெரியுமா


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

IAS அதாவது இந்திய ஆட்சிப் பணி (Indian Administrative Service) மூலம், இந்த அதிகாரிகள் நாட்டின் அதிகாரத்துவம் வாய்ந்த அமைப்பில் பணியாற்றுவதற்கான வாய்ப்பைப் பெறுகிறார்கள். ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் பல்வேறு அமைச்சகங்கள், நிர்வாகத் துறைகளில் நியமிக்கப்படுகிறார்கள். ஒரு ஐ.ஏ.எஸ் அதிகாரியின் மூத்த பதவி என்பது அமைச்சரவை செயலாளர் ஆகும்.


ஐ.ஏ.எஸ் அதிகாரிகளுக்கான சம்பளம்


யு.பி.எஸ்.சி சிவில் சர்வீசஸ் தேர்வில் தேர்ச்சி பெறுவதன் மூலம் ஐ.ஏ.எஸ் அதிகாரிகளாக தேர்ச்சி பெறும் மாணவர்களுக்கு சிறந்த சம்பளம் கிடைக்கும். 7 வது ஊதியக்குழுவில் குறிப்பிட்டுள்ளடி, IAS அதிகாரியின் அடிப்படை சம்பளம் ரூ. 56100 ஆகும். இது தவிர, பயண கொடுப்பனவு மற்றும் டியர்னஸ் கொடுப்பனவு உள்ளிட்ட பல கொடுப்பனவுகளும் உள்ளன. ஒரு ஐ.ஏ.எஸ் அதிகாரியின் மொத்த சம்பளம் மாதத்திற்கு ரூ .1 லட்சத்துக்கு மேல் இருக்கும் என ஊடக அறிக்கைகள் தெரிவிக்கின்றன. அதே நேரத்தில், ஒரு ஐ.ஏ.எஸ் அதிகாரி அமைச்சரவை செயலாளர் பதவியை அடைந்தால், அவரது சம்பளம் மாதத்திற்கு ரூ .2, 50,000 ஐ எட்டும். அமைச்சரவை செயலாளராக நியமிக்கப்பட்ட ஐ ஏ எஸ் அதிகாரி அதிக சம்பளம் பெறுகிறார்.


ஐ.ஏ.எஸ் அதிகாரிகளுக்கான சலுகைகள்


ஐ.ஏ.எஸ் அதிகாரிகளுக்கு  ஜூனியர் பிரிவு, சீனியர் பிரிவு, சூப்பர் டைம் பிரிவு உள்ளிட்ட வெவ்வேறு ஊதியக் அளவுகள் உள்ளன. இதன் அடிப்படையில், அதிகாரிகளுக்கு குடியிருப்பு, சமையல்காரர் மற்றும் பிற ஊழியர்கள் உட்பட பல வசதிகள் வழங்கப்படுகின்றன.


ALSO READ | சிங்கப்பூர் திரிபு’ வைரஸ் சர்ச்சை கருத்தால் சிக்கலில் சிக்குகிறாரா கெஜ்ரிவால்


தேசம், சர்வதேசம், கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR