அமெரிக்காவின் முன்னாள் அதிபராக இருந்தபோது பற்பல சர்ச்சைகளின் நாயகனாக திகழ்ந்தவர் டொனால்ட் டிரம்ப். வெற்றி பெற்ற தொழிலதிபராக, மிகப் பெரிய செல்வந்தராக விளங்கிய டிரம்பின் மதிப்பு அவர் அமெரிக்க அதிபராக இருந்தபோது சற்று குறைந்தது. அவர் அளவுக்கு எந்தவொரு அமெரிக்க அதிபரும் விமர்சனங்களை எதிர்கொண்டதில்லை என்றே சொல்லலாம்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப்பின் அளப்பறிய சொத்துக்களின் நிகர மதிப்பு அவரது பதவிக் காலத்தில் 700 மில்லியன் டாலர் குறைந்தது என்ற தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளது.


2020 ஆம் ஆண்டு அமெரிக்கத் தேர்தல் தோல்வி மட்டும் டிரம்புக்கு பின்னடைவு இல்லை, சொத்தையும் இழந்திருக்கிறார், அதுவும் மிகவும் அதிகமான சொத்து மதிப்பை இழந்திருக்கிறார் என்பது தற்போது வெளிச்சத்துக்கு வந்துள்ளது.


Also Read | கைதிகளுக்கு GPS tag அணிவித்தால் குற்றங்கள் கட்டுப்படும் என்பது உண்மையா?   


கொரோனா வைரஸின் தாக்கம், முன்னாள் ரியாலிட்டி ஸ்டார் டொனால்ட் டிரம்ப்பின் சொத்து மதிப்பிலும் தாக்கத்தை ஏற்படுத்தி, அவரது நிகர சொத்து மதிப்பில் மிகப்பெரிய சரிவைக் கொண்டுவந்தது.


ப்ளூம்பெர்க் பில்லியனர்கள் குறியீட்டின்படி (Bloomberg Billionaires Index), முன்னாள் அமெரிக்க அதிபர் டிரம்பின் சொத்து நிகர மதிப்பு கிட்டத்தட்ட 700 மில்லியன் டாலர் குறைந்து 2.3 பில்லியன் டாலர்களை எட்டியது.


டிரம்பின் அலுவலக கட்டிடங்கள், ஹோட்டல்கள் மற்றும் ரிசார்ட்டுகள் வருவாய் இழப்பை சந்தித்தன. அவற்றின் சொத்து மதிப்பிலும் சரிவு ஏற்பட்டது. டிரம்ப்பின் கோல்ஃப் மைதானங்கள் (golf courses) மற்றும் விமானங்களின் மதிப்பிலும் சரிவு ஏற்பட்டுள்ளது.  


Also Read | H4 விசா திட்டத்தை திரும்பப் பெற்றார் அமெரிக்க அதிபர்  


மே 2016 முதல் ஜனவரி 2021 காலகட்டத்திற்கான ட்ரம்பின் நிதி ஆவணங்கள் மற்றும் பிற காரணிகளை ப்ளூம்பெர்க் ஆய்வு செய்தது. இந்த ஆய்வு, டொனால்ட் டிரம்ப், அமெரிக்க அதிபராவதற்கு முன்னும் பின்னும் உள்ள டிரம்பின் சொத்து மதிப்பை வெளிப்படுத்தியது.


டிரம்பின் முக்கிய வணிக சொத்துக்களின் மதிப்பில் 26 சதவீதம் சரிவு இருப்பதாக ப்ளூம்பெர்க் மதிப்பிட்டுள்ளது.


டிரம்பின் கோல்ஃப் மைதானங்களில் ஏற்பட்ட மதிப்பு சரிவு ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. ஏனெனில் கொரோனா தொற்றுநோயின் போது சமூக இடைவெளியை கடைபிடிப்பது என்ற வழக்கம் அதிகரித்துள்ளதால், கோவிட் தொற்றுநோய் காலத்தில் விளையாட்டின் மீதான விருப்பம் மக்களிடையே அதிகரித்துள்ள நிலையில் கோல்ஃப் மைதானத்தின் சொத்து மதிப்பு குறைந்துள்ளது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.


Also Read | டொனால்ட் டிரம்பை விவாகரத்து செய்கிறாரா மெலினியா..!!!


டிரம்பின் கோல்ஃப் கிளப்களில் நடைபெறுவதாக திட்டமிடப்பட்டிருந்த 2022 ஆம் ஆண்டு சாம்பியன்ஷிப் போட்டிகளை  நடத்தும் ஒப்பந்தத்தை Professional Golfers' Association (PGA) முடித்துக்கொண்டது. அதிபராக டிரம்ப் பதவி வகித்த இறுதி நாட்களில் கேபிடல் வளாகத்தில் நடைபெற்ற கலவரத்திற்குப் பிறகு, டிரம்பின் மதிப்பும் சரிந்ததே இதற்கு காரணமாக சொல்லப்படுகிறது.


இது தவிர, பல தசாப்தங்கள் பழமையான மற்றும் பல ஆண்டுகளாக மதிப்பு சரிவைக் கண்ட பல விமானங்களையும் டிரம்ப் வைத்திருப்பதால் அவரது சொத்து மதிப்பு குறைந்துள்ளது.  


அமெரிக்க அதிபராக இருந்த டிரம்ப்பின் தொழில் இதற்கு முன் இருந்ததைப் போல இனிமேல் இருக்காது பல நிபுணர்கள் கருத்து தெரிவித்து வரும் நிலையில், ப்ளூம்பெர்க்கின் இந்த அறிக்கை வெளியாகியுள்ளது.


Also Read | Happy Birthday கார்த்திக் சுப்புராஜ் என வாழ்த்துமழை பொழியும் வெள்ளித்திரை


"டிரம்ப் தனது பிராண்டின் இதயத்தை சுற்றியுள்ள ஒரு மிருகத்தனமான இலக்குகளுடன் ஜனாதிபதி பதவியில் இருந்து வெளியேறுவார், இது பொருளாதார ரீதியாகவும் அவரது குழந்தைகளின் உயிர்வாழ்விற்கும் ஆபத்தாக இருக்கும், மேலும் அவர் உண்மையில் எதிர்கொள்ளாத வகையிலான வேதனையான வலிக்கு வழிவகுக்கும்," "எரிக் ஷிஃபர், ஒரு மக்கள் தொடர்பு நிபுணர் இன்சைடரிடம் கூறினார்.


அமெரிக்க அதிபராக வெள்ளை மாளிகையில் டிரம்ப் இருந்தபோது கடந்த சில ஆண்டுகளாக அவரது சொத்து மதிப்பு தொடர்பான தகவல்கள் ரகசியமாக இருந்தன. இருப்பினும், கடந்த மாதம், டிரம்ப் தனது வருமான வரிக் கணக்கை நீதிமன்றத்திடம் தாக்கல் செய்யுமாறு அமெரிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. அதையடுத்து டிரம்பின்  மதிப்பு மட்டுமல்ல, அவரது சொத்து மதிப்பும் குறைந்திருப்பது தெரியவந்துள்ளது.


Also Read | Data Theft: OTPகள் பாதுகாப்பாக இல்லை, SMS மூலம் தரவுகள் திருட்டு   


தேசம், சர்வதேசம், கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR