உடல் எடையை வேகமாக குறைக்க வேண்டுமா? ‘இதை’ சாப்பிடுங்கள் போதும்!
உடல் எடை குறைக்க பல உணவுகள் உதவும். அதில், வெங்காயமும் அடக்கம். இதை எப்படி சாப்பிட்டால் உடல் எடை குறையும் தெரியுமா?
அன்றாட சமையலில் இன்றியமையாத பொருளாக இருக்கும் ஒன்று. வெங்காயம். உணவில் சுவை கூட்டுவது மட்டுமன்றி, வாழ்வில் சுவை கூட்ட, உடல் எடையை குறைக்க, உடல் நலனுக்கு உகந்த காய்கறிகளுள் ஒன்று வெங்காயம். எடை இழப்புக்கான பயணத்தில், ஒருவர் தவிர்க்க வேண்டிய பல உணவுப் பொருட்கள் மற்றும் உணவில் சேர்க்கப்பட வேண்டிய ஆரோக்கியமான உணவு விருப்பங்கள் என சில உள்ளன. நாம் அறியாமல், ஒவ்வொரு நாளும் நாம் சாப்பிடும் உணவுப் பொருட்கள் சில உள்ளன. அவற்றை சரியான முறையில் சாப்பிட்டால் மட்டுமே எடையைக் குறைக்க முடியும். அத்தகைய ஒரு சிறந்த உதாரணம் வெங்காயம்.
எடை குறைப்புக்கு வெங்காயம் எப்படி பயன்படுகிறது?
வெங்காயம் ஒரு சக்திவாய்ந்த ப்ரீபயாடிக் உணவாகும். இதில், குறைந்த கொழுப்பு கவுண்ட் உள்ளது. அதிகளவில் ஃபைபர் சத்துக்களும் உள்ளது. ஒரு கப் வெங்காயத்தில் 64 கலோரிகளும், 15கிராம் கார்போஹைட்ரேட்டும், 7 கிராம் ஃபைபரும், 76 கிராம் ப்ரோட்டீன்களும் உள்ளன. அது மட்டுமன்றி, 78 கிராம் இனிப்பும், 12 பர்சண்ட் வைட்டமின் சி, பி 6 ஆகிய சத்துக்களும் உள்ளன. இதில் இருக்கும் ஃபைபர் சத்துக்கள், சாப்பிட்டவுடன் ஒருவரை முழுமையாக உணர வைக்கும். இதனால் அதிகம் சாப்பிடுவதை தவிர்க்கலாம். இந்த வகையில்தான் வெங்காயம் உடல் எடையை குறைக்க உதவுகிறது.
வெங்காயத்தை எப்படி சாப்பிடலாம்?
வெங்காயத்தை, வெல்லம் சேர்த்து தினமும் சாப்பிட்டால் இதய பிரச்சனை வராது என மருத்துவர்கள் சிலர் கூறுகின்றனர். அதே வெங்காயத்தை பச்சையாக சாப்பிட்டால் சில உடல்நல பிரச்சனைகளையும் தீர்க்கலாம். வெங்காயத்தை அரியும் போது கண்களில் கண்ணீர் வருவதால் அது கண்ணை சுத்தம் செய்யவும் உதவுகிறது.
நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்..
பச்சை வெங்காயத்தில் வைட்டமின் சி சத்துக்கள் நிறைந்துள்ளது. இதனால், உடலில் உள்ள நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். குளிர்காலமும் தொடங்கி விட்டது. இந்த காலத்தில் கிருமிகளும் வைரஸ் தொற்றுக்களும் பரவும். எனவே, இந்த காலத்தில் பச்சை வெங்காயத்தை சாப்பிடுவது நல்லது.
சர்க்கரை அளவை கட்டுப்படுத்தும்..
சில காய்கறிகளில், இனிப்பு தன்மை குறைவாக இருக்கிறது. இது, உடலில் உள்ல ரத்த சர்க்கரை அளவை உடனடியாக குறைக்க உதவும். சர்க்கரை நோயாளிகள் தங்களது உணவில் வெங்காயத்தை சேர்த்துக்கொள்வது மிகவும் நல்லது என மருத்துவர்கள் பரிந்துரைக்கின்றனர். வழக்கமாக நாம் சாப்பிட்டவுடன் ரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகரிக்கும். அதை வெங்காயம் குறைக்கிறது.
இதய ஆரோகியத்தை மேம்படுத்த...
இதய ஆரோக்கியத்தை மேம்படுத்த வெங்காயத்தை நமது உணவில் தினம் தோறும் எடுத்துக்கொள்வது நல்லது. ரத்த ஓட்டத்தை சீர்ப்படுத்த, இதய நோய்கள் வராமல் இருக்க வெங்காயத்தை உட்கொள்ளலாம்.
ஊட்டச்சத்து பலன்கள்:
வெங்காயத்தில் வைட்டமின் சி, வைட்டம்ன் பி 6, வைட்டமின் கே, மாங்கனீஸ், பொட்டாசியம் மற்றும் பாஸ்பரஸ் போன்ற பல சத்துக்கள் உள்ளன. இது, நம் உடலில் ஏற்படும் பல்வேறு நோய் பாதிப்புகளில் இருந்து தப்பிக்கலாம்.
மேலும் படிக்க | கண்பார்வை மேம்பட வேண்டுமா? ‘இந்த’ 2 உணவுகளை சாப்பிடுங்கள் போதும்!
வெங்காய ஜூஸ்:
வெங்காயத்தின் அனைத்து ஆரோக்கிய நன்மைகளையும் அனுபவிக்க சிறந்த முறை இந்த வழியில் உள்ளது. வெங்காயம் உரித்து, துண்டுகளாக வெட்டி, நான்கு முதல் ஐந்து நிமிடங்கள் தண்ணீரில் கொதிக்க வைக்க வேண்டும். அடுத்து, அதை நன்கு கலந்து, சாறாக பருகவும்.
சூப்:
வெங்காயத்தை சூப் ஆகவும் குடிக்கலாம். அதை எப்படி செய்ய வேண்டும் தெரியுமா?
>வானலியை அடுப்பில் வைத்து ஆலிவ் எண்ணெயை ஊற்றவும்.
>இஞ்சியை துருவி 2 நிமிடம் எண்ணெயில் வதக்கவும்.
>வெங்காயத்தை வெட்டி, உங்களுக்கு பிடித்த கயகறிகளை வெட்டி அதை 30 நிமிடங்கள் வெங்காயத்துடன் சேர்த்து வதக்கவும்.
>இறைச்சி வேண்டுமானால், அதையும் சேர்க்கலாம்.
>உப்பு மற்றும் மிளகு ஆகியவற்றை சுவைக்காக சேர்த்துக்கொள்ளலாம். பின்னர், இதை தண்ணீர் சேர்த்து 10 முதல் 15 நிமிடங்கள் கொதிக்க விட வேண்டும்.
>கரிவேப்பிலை, கொத்தமல்லி சேர்த்து பருகவும்.
மேலும் படிக்க | டார்க் சாக்லேட்டை டயட்டில் சேர்த்துக்கொள்ளலாமா? பதில் இதோ!
(பொறுப்பு துறப்பு: அன்புள்ள வாசகரே, எங்கள் செய்திகளைப் படித்ததற்கு நன்றி. இந்தச் செய்தி உங்களுக்கு பல தகவல்களை வழங்குவதற்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதை எழுதுவதில் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களின் உதவியை நாங்கள் பெற்றுள்ளோம். இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ