உடல் எடை குறைப்பில், நாம் செய்யும் உடற்பயிற்சிகளை விட நாம் எடுத்துக்கொள்ளும் உணவுகள் பெரிய அளவில் உதவி புரிகின்றன. உடலுக்கு சத்து தரும் உணவுகளை மட்டும் எடுத்துக்கொண்டு பிற உணவுகளை தவிர்த்தால் நம் உடல் எடை குறையும். ஆனால், உடலுக்கு சத்து தரும் உணவினை எடுத்துக்கொண்டு, உடற்பயிற்சி செய்தால் கண்டிப்பாக நம் உடலில் மெட்டபாலிச சக்தி அதிகரித்து அது உடலை வலுபெற வழிவகுக்கும். மேலும், உடல் தசைகளை வளர்க்கவும் உதவும். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

வளர்ச்சிதை மாற்றமும் எடை குறைப்பும்..


நாம் அனைவரும் ஒரு கட்டத்தில் உடல் எடையை குறைக்கும் முயற்சியில் ஈடுபட்டிருப்பாேம். மேலும் பயனுள்ள எடை இழப்பு முறைகள் என்னென்ன என்பது இன்னும் சரியாக கண்டுபிடிக்க முடியாததாக உள்ளது. அமெரிக்க தேசிய மருத்துவ பல்கலைக்கழகத்தில் வெளியிடப்பட்ட ஒரு ஆய்வின்படி, 10 பேரில் 4 பேர் 12 மாதங்களில் எடை இழப்பு பயணத்தை மேற்கொண்டுள்ளனர். இந்த எடை இழப்பில் முக்கியமாக நமக்கு உதவி புரிவர், நமது வளர்சிதை (Metabolism) மாற்றமாகும். ஆனால் வளர்சிதை மாற்றம் என்றால் என்ன, அது எப்படி எடையை குறைக்க உதவுகிறது? 


மேலும் படிக்க | உடலில் பல அதிசயங்களை செய்யும் பெருஞ்சீரகம் மற்றும் வெந்தய தண்ணீர்


வளர்சிதை மாற்றம் என்றால் என்ன, எடை இழப்புக்கு இது எவ்வாறு உதவுகிறது?


வளர்சிதை மாற்றம் என்பது நம் உடலின் இருக்கும் சூப்பர் ஹீரோ போன்றது, நம் உடலில் அனைத்து உறுப்புகளையும் சமநிலையில் வைத்திருக்க =பின்னால் உழைக்கும் சத்து இதுதான். எளிமையான சொல்லப்போனால், இது நாம் உண்ணும் உணவை ஆற்றலாக மாற்றும் செயல்முறையாகும். இந்த ஆற்றல் பின்னர் பல்வேறு உடல் செயல்பாடுகளுக்காக பயன்படுத்தப்படுகிறது,


மூச்சு விடுவது, கண் சிமிட்டுவது, கலோரிகளை எரிப்பது என அனைத்தும் மெட்டபாலிச ஆற்றல் சக்திகளுக்குள் அடங்கும். எடையை குறைக்க, மெட்டபாலிச சத்துக்களும் முக்கிய காரணங்காக இருக்கின்றன. இந்த சத்தினை அதிகரிக்கும் சில உணவு வகைகளை இங்கு பார்க்கலாம். 


1.மிளகாய்:


மிளகாய் என்றவுடன் பலருக்கும் நினைவிற்கு வருவது, காரமான சுவைதான். மிளகாயில் கேப்சைசின் என்ற சத்து உள்ளது . இதில், தெர்மோஜெனிக் எனப்படும் சத்துக்கள் உள்ளன. இது, நம் உடலை உஷ்ணப்படுத்தி அதிகளவிலான கொழுப்பினை குறைக்க உதவும். அடுத்த முறை உங்கள் உடல் எடையை குறைக்க ஏதேனும் உணவை சமைக்க நினைத்தால், அதில் கொஞ்சம் அதிகளவிலான மிளகாயை சேர்த்துக்கொள்ளுங்கள். 


2.கிரீன் டீ:


கிரீன் டீயில் ஆண்டி ஆக்ஸிடன்ஸ் சத்துக்கள் அதிகமாக இருக்கும். நம் உடலில் உள்ள மெட்டபாலிச சக்தியை அதிகரிக்கவும் கிரீன் டீ உதவுகிறது. ஒரு நாளைக்கு, நேரம் கிடைக்கும் போதெல்லாம் கிரீன் டீ குடிப்பதால் உங்கள் உடலில் ஆற்றல் அதிகரிக்கும். 


3.இறைச்சி மற்றும் புரதம் நிறைந்த உணவுகள்:


உடலில் மெட்டபாலிச சக்தியினை அதிகரிக்க புரதம் நிறைந்த உணவுகளை சாப்பிடுவது மிகவும் முக்கியம். பதப்படுத்தப்படாத இறைச்சி, மீன் உள்ளிட்ட உணவுகளை சாப்பிடும் போது இவை செரிமானம் ஆக கொஞ்சம் அதிகமாகவே நேரம் எடுக்கும். இதனால் உடலில் உள்ள கலோரிகள் வேகமாக எரியும். இதை தவிர, தாவர வகையிலான உணவுகளும் உடலில் உள்ள கொழுப்பினை எரிக்க உதவும். க்ரீக் யோகர்ட், டொஃபு, சுண்டல் உள்ளிட்டவை புரதம் நிறைந்த உணவுகளுக்கான சில எடுத்துக்காட்டுகள் ஆகும். 


4.சிட்ரஸ் பழங்கள்:


சிட்ரஸ் வகை பழங்களில் மெட்டபாலிச சக்தியை அதிகரிக்கும் மேஜிக் உள்ளதாக சில மருத்துவ நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். எலுமிச்சை, ஆரஞ்சு, திராட்சை உள்ளிட்டவை சிட்ரஸ் வகை பழங்களுள் அடங்கும். உடல் எடையை குறைக்க உடற்பயிற்சி செய்கையில் இந்த பழங்களை அப்படியேவோ அல்லது பழச்சாறாகவோ எடுத்துக்கொள்ளலாம். காலையில் எழுந்தவுடன் இந்த வகை பழங்களை சாப்பிடுவதும் ஆற்றலுடன் செயல்பட உதவும். 


மேலும் படிக்க | முடி ஒல்லியா எலிவால் மாதிரி இருக்கா? அப்போ உடனே இத பண்ணுங்க


(பொறுப்பு துறப்பு: அன்புள்ள வாசகரே, எங்கள் செய்திகளைப் படித்ததற்கு நன்றி. இந்தச் செய்தி உங்களுக்கு பல தகவல்களை வழங்குவதற்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதை எழுதுவதில் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களின் உதவியை நாங்கள் பெற்றுள்ளோம். இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ