பிஎஃப் சந்தாதாரர்களுக்கு முக்கிய செய்தி!! உயர் ஓய்வூதியத்தைப் பெறுவதற்கான கடைசி வாய்ப்பு இன்று வரை மட்டுமே உள்ளது. ஆகையால், உங்களுக்கும் உயர் ஓய்வூதியம் பெறுவதற்கான விருப்பம் இருந்து, நீங்கள் அதற்கு இன்னும் விண்ணப்பிக்கவில்லை என்றால், அதற்கான கடைசி தேதி இன்று என்பதை நினைவில் கொள்ளுங்கள். இன்று, அதாவது ஜூலை 11, 2023 -க்குப் பிறகு நீங்கள் உயர் ஓய்வூதியம் பெறுவதற்கு விண்ணப்பிக்க முடியாது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

முன்னதாக, உயர் ஓய்வூதியத்திற்கு விண்ணப்பிக்க கடைசி தேதி ஜூன் 26 ஆக இருந்தது. இந்த காலக்கெடு ஜூலை 11 வரை நீட்டிக்கப்பட்டது. ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி அமைப்பு (EPFO) ஜூன் 26, 2023 அன்று, சந்தாதாரர்களுக்கு 15 நாட்களுக்கான கடைசி அவகாசம் வழங்கப்படுவதாக அறிவித்தது. 


இந்த கால அவகாசம், இந்த செயல்முறையில் வரக்கூடிய பிரச்சனைகளை சமாளிக்க, ஓய்வூதியம் பெற தகுதியான உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்டது. இதனுடன், அதிக ஓய்வூதியத்திற்கு விண்ணப்பிக்கும் ஊழியர்களின் சம்பள விவரங்களை பதிவேற்ற முதலாளிகளுக்கு 30 செப்டம்பர் 2023 வரை இபிஎஃப்ஓ ​​கால அவகாசம் அளித்துள்ளது. இதுபோன்ற சூழ்நிலையில், இபிஎஸ்-க்கு விண்ணப்பிக்க உறுப்பினர்களுக்கு கூடுதல் அவகாசம் அளிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தகுதியான உறுப்பினர்களுக்கு அதிக ஓய்வூதியம் பெற விண்ணப்பிக்கும் தேதி நீட்டிக்கப்படுமா இல்லையா என்பது பற்றி இந்த பதிவில் காணலாம். 


காலக்கெடு மூன்று முறை நீட்டிக்கப்பட்டுள்ளது


பணியாளர்கள் அதிக ஓய்வூதியத்திற்கு விண்ணப்பிக்க இபிஎஃப்ஓவால் மூன்று முறை காலக்கெடு நீட்டிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், 30 செப்டம்பர் 2023 வரை, உறுப்பினர்களின் தரவைப் பதிவேற்ற முதலாளி / நிறுவனங்களுக்கு அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது. அத்தகைய சூழ்நிலையில், தகுதியான ஓய்வூதியதாரர்களுக்கு அதிக கால அவகாசம் வழங்கப்படக்கூடும். ஊழியர்களின் பிரச்சினைகளை மனதில் வைத்து இபிஎஃப்ஓ இந்த நேரத்தை வழங்கலாம். இபிஎஃப்ஓ -ன் கீழ் அதிகமான சிக்கல்கள் இருந்தால், அரசாங்கம் இந்த கால அவகாசத்தை மேலும் நீட்டிக்கக்கூடும் என வட்டாரங்கள் தெரிவிகின்றன. 


மேலும் படிக்க | மூத்த குடிமக்களுக்கான அசத்தல் சேமிப்பு திட்டம்: வட்டியிலேயே ஜாக்பாட் வருமானம்


இன்றைய தேதியே இறுதி காலக்கெடுவாக இருக்கும்: நிபுணர்கள் 


இன்னும் அதிக ஓய்வூதியத்திற்கு விண்ணப்பிக்காத பிஎஃப் சச்ந்தாதாரர்கள் அதை இன்று செய்து விட வேண்டும் என சில நிபுணர்கள் கருதுகிறார்கள். ஏனெனில் காலக்கெடு மூன்று முறை நீட்டிக்கப்பட்டுள்ளது. இது தவிர, இபிஎஃப்ஓ ​​இப்போது உயர் ஓய்வூதியத்தின் செயல்பாட்டில் வேலை செய்யும். இவ்வாறான நிலையில், இதையே கடைசி வாய்ப்பாகக் கருதுவதே பொருத்தமானதாக இருக்கும் என்பது நிபுணர்களின் கருத்தாக உள்ளது. சந்தாதாரர்கள் ஏதேனும் சிக்கலை எதிர்கொண்டால், ஆன்லைன் விண்ணப்பத்தை சமர்ப்பிப்பதற்கான தீர்வை தெரிந்துகொள்ள EPFiGMS -இல் உள்ள அதிகாரிகளை நீங்கள் தொடர்பு கொள்ளலாம்.


கவனமாக விண்ணப்பிக்கவும்


நீங்கள் உயர் ஒய்வூதியத்திற்காக விண்ணப்பிக்கப் போகிறீர்கள் என்றால், அதில் சிறப்பு கவனம் செலுத்த வேண்டும். தனிப்பட்ட தகவல்களிலிருந்து ஓய்வூதியம் தொடர்பான தகவல்களை நீங்கள் கவனமாக நிரப்ப வேண்டும். ஏனென்றால் நீங்கள் ஏதேனும் தவறு செய்தால், அதிக ஓய்வூதியத்தை நீங்கள் இழக்க நேரிடலாம். ஆகையால், இதற்கான விண்ணப்பத்தை பூர்த்தி செய்து சமர்ப்பிக்கும் போது அதிகமான கவனத்துடன் செயல்பட வேண்டும்.


முன்னதாக, ஊழியர்களின் ஓய்வூதியத் திட்டம் (EPS), 1995 இன் கீழ் அதிக ஓய்வூதிய விண்ணப்பங்களைப் பதிவு செய்ய இபிஎஃப்ஓ உறுப்பினர்கள் பின்பற்ற வேண்டிய செயல்முறைகளை வருங்கால வைப்பு நிதி நிர்வாகக் குழு முன்னதாக அறிவித்தது. மேலும் இபிஎஃப்ஓ விண்ணப்பத்தைத் தாக்கல் செய்வதற்குத் தேவையான ஆவணங்களின் பட்டியலையும் வெளியிட்டது.


1995 ஆம் ஆண்டு ஊழியர்களின் ஓய்வூதியத் திட்டத்தால் (EPS) கட்டாயப்படுத்தப்பட்ட ரூ. 15,000 என்ற நிர்ணயிக்கப்பட்ட வரம்பிற்கு மேல், அதிக சம்பளத்தில் ஓய்வூதியத்தை கணக்கிடுவதற்கான சூத்திரத்தை இபிஎஃப்ஓ வெளிப்படுத்தியுள்ளது.


மேலும் படிக்க | மத்திய அரசின் அசத்தல் திட்டம்... மாதம் ₹200 முதலீட்டில் ₹72,000 பென்ஷன் பெறலாம்


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ