பணியாளர் வருங்கால வைப்பு நிதி (EPF) தனியார் துறையில் தகுதியான ஊழியர்களுக்கான ஓய்வூதிய சேமிப்பு திட்டமாக முக்கிய பங்கு வகிக்கிறது. முதலாளி / நிறுவனம் மற்றும் பணியாளர் இரு தரப்பினரும் EPF -க்கு ஒவ்வொரு மாதமும் அடிப்படை ஊதியத்தில் 12 சதவீதத்தை வழங்குகிறார்கள். இதில் சேரும் தொகைக்கு ஆண்டுதோறும் வட்டி கிடைக்கிறது. இபிஃப் தொடர்ப்பான பல சந்தேகங்கள் அவ்வப்போது ஊழியர்களுக்கு எழுவதுண்டு. அவற்றி மிக முக்கியமான சந்தேகம், சம்பளச் சீட்டு அதாவது சேலரி ஸ்லிப்பில் கழிக்கப்பட்டதாக காட்டப்பட்டுள்ள பிஎஃப் தொகையானது பிஎஃப் கணக்கில் ஒழுங்காக வரவு வைக்கப்படுகிறதா என்பது. அதை பற்றி இந்த பதிவில் காணலாம். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இப்படியும் நடக்கலாம்


சில சந்தர்ப்பங்களில், சம்பளத்தில் கழிக்கப்பட்டதாக காட்டப்பட்டுள்ள பிஎஃப் தொகை பணியாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பால் (இபிஎஃப்ஓ) நிர்வகிக்கப்படும் இபிஎஃப் கணக்கில் கிரெடி செய்யப்படாமல், அதாவது வரவு வைக்கப்படாமல் இருக்கலாம். 


இபிஎஃப் தொகை வரவு வைக்கப்படவில்லை என்றால் என்ன செய்வது?


உங்கள் சம்பளச் சீட்டில் குறிப்பிடப்பட்டுள்ள வருங்கால வைப்பு நிதி (PF) தொகை குறிப்பிட்ட நேரத்திற்குப் பிறகும் உங்கள் இபிஎஃப் கணக்கில் வரவு வைக்கப்படவில்லை என்றால், நீங்கள் எடுக்க வேண்டிய சில செயல்முறைகள் உள்ளன.


முதலில், உங்கள் இபிஎஃப் இருப்பைச் சரிபார்க்க EPFO அல்லது UAN இணையதளத்திற்கு சென்று பார்க்கவும். உங்கள் சம்பளத்திலிருந்து பிடித்தம் செய்யப்பட்ட தொகை உங்கள் முதலாளி / நிறுவனத்தால் டெபாசிட் செய்யப்பட்டதா என்பதைப் புரிந்துகொள்ள இது உதவும்.


மேலும் படிக்க | EPFO Pension Update: ஓய்வூதியம் தொடர்பான விதிகளில் முக்கிய மாற்றம்! 


EPF கிரெடிட்டில் கணிசமான தாமதம் ஏற்பட்டால், உங்கள் முதலாளி / நிறுவனத்தைத் தொடர்புகொள்ளவும். உங்கள் EPF பங்களிப்புகளை முதலாளி கழித்திருக்கலாம் ஆனால் செலுத்தாமல் இருக்கலாம், இது கிரிமினல் குற்றமாகும். முதலாளி பிஎஃப் தொகையை டெபாசிட் செய்யவில்லை என்றால், நீங்கள் EPF குறைதீர்ப்பு போர்டல் மூலம் EPFO க்கு உங்கள் குறையை தெரிவிக்க வேண்டும். 


இதில் உங்கள் EPF கணக்கு எண், UAN மற்றும் தனிப்பட்ட விவரங்களை நீங்கள் வழங்க வேண்டும். அதன் பின்னர் உங்கள் சிக்கலை நீங்கள் விரிவாக விவரிக்கலாம், EPFO தேவையான நடவடிக்கை எடுக்கும்.


முதலாளி / நிறுவன கழிப்புகள் மற்றும் சட்டப் பாதுகாப்புகள்


முதலாளிகள் / நிறுவனங்கள் பணியாளர்களின்  ஊதியத்திலிருந்து தவறான முறையில் கழிப்புகளை செய்தால், அதற்கு இபிஎஃப்ஒ சட்டத்தால் பாதுகாப்பு அளிக்கப்படுகின்றது. EPF சட்டம், 1952 இன் படி, EPF கொடுப்பனவுகளுக்காக ஒரு பணியாளரின் ஊதியத்தை ஒரு முதலாளி குறைக்க முடியாது. EPF-க்கான தொகையை முதலாளி / நிறுவனம் கழித்து, ஆனால் அதை இபிஎஃப் கணக்கில் டெபாசிட் செய்யவில்லை என்றால், அதற்கான தீர்வை அந்தச் சட்டம் வழங்குகிறது.


மேலும், முதலாளி / நிறுவனத்தின் பங்களிப்புகளில் ஏதேனும் தாமதம் ஏற்பட்டால், பணியாளர்கள் உரிய தேதியிலிருந்து முழு வட்டியைப் பெறுவார்கள். இபிஎஃப் கணக்குகளில் வட்டி வரவு வைப்பதை சில மென்பொருள் மேம்படுத்தல் இருந்தாலும், அதனால் தாமதங்கள் ஏற்பட்டாலும், பிஎஃப் சந்தாதாரர்களுக்கு வட்டி விகித இழப்பு இருக்காது. 


சந்தாதாரர்கள் தங்கள் EPF விவரங்கள் மற்றும் PF டிரான்ஸ்ஃபரை புதுப்பிப்பது எப்படி?


EPF சந்தாதாரர்கள் EPFO UAN போர்ட்டல் மூலம் பெயர் போன்ற தங்கள் விவரங்களைப் புதுப்பிக்கலாம். க்ளெயிம் நிராகரிப்பு போன்ற சிக்கல்களைத் தடுக்க உங்கள் விவரங்கள் துல்லியமாக இருப்பதை உறுதிசெய்வது இன்றியமையாதது.


மேலும், ஊழியர்கள் வேலை மாறும்போது, தங்கள் UAN -ஐப் பயன்படுத்தி, ஒரு நிறுவனத்தில் இருந்து மற்றொரு நிறுவனத்திற்கு தங்கள் PF -ஐ மாற்றுவதற்கான வசதியை  EPFO வழங்குகிறது. இது அவர்களின் நீண்ட கால சேமிப்பை பராமரிக்க உதவுகிறது, மேலும் கணக்கை மூடுவதை விட இது மிகவும் பரிந்துரைக்கப்பட்ட தேர்வாகும்.


மேலும் படிக்க | EPS Withdrawal: வேலையை விட்டு வெளியேறிய பிறகு EPS என்ன ஆகும்? எப்போது எவ்வளவு எடுக்கலாம்? 


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ