EPS Withdrawal: வேலையை விட்டு வெளியேறிய பிறகு EPS என்ன ஆகும்? எப்போது எவ்வளவு எடுக்கலாம்?

Employees Pension Scheme: EPS இலிருந்து பணத்தை எடுப்பது சில நிபந்தனைகளுடன் அனுமதிக்கப்படுகிறது. இது தொடர்பான அனைத்தையும் இந்த பதிவில் தெரிந்துகொள்ளலாம். 

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Aug 13, 2023, 09:19 PM IST
  • பணியாளர்கள் ஓய்வூதியத் திட்டத்தில் பணம் எவ்வாறு டெபாசிட் செய்யப்படுகிறது?
  • EPS கணக்கிலிருந்து யார் பணம் எடுக்கலாம்?
  • சர்வீஸ் ஹிஸ்டரி வரலாற்றை இபிஎஃப்ஓ ​​எவ்வாறு கணக்கிடுகிறது?
EPS Withdrawal: வேலையை விட்டு வெளியேறிய பிறகு EPS என்ன ஆகும்? எப்போது எவ்வளவு எடுக்கலாம்? title=

பணியாளர் ஓய்வூதியத் திட்டம்: அலுவலக பணிகளில் இருக்கும் பெரும்பாலான மக்கள் பணியாளர் வருங்கால வைப்பு நிதி (இபிஎஃப்ஓ) அமைப்பில் கணக்கு வைத்துள்ளனர். இபிஎஃப் உடன், ஊழியர்களுக்கு ஊழியர்களின் ஓய்வூதியத் திட்டம் (EPS) கணக்கும் உள்ளது. இது ஓய்வூதிய நிதி என்றும் அழைக்கப்படுகிறது. ஒவ்வொரு மாதமும் ஓய்வூதியத் தொகை ஊழியர்களின் கணக்கில் டெபாசிட் செய்யப்படுகிறது. இந்தத் தொகை ஊழியரின் நிறுவனக் கணக்கில் இருந்து டெபாசிட் செய்யப்படுகிறது. ஆனால், இபிஎஸ் பணத்தை எப்போது எடுக்கலாம் என்பதில் மக்கள் பெரும்பாலும் குழப்பத்தில் உள்ளனர். EPS இலிருந்து பணத்தை எடுப்பது சில நிபந்தனைகளுடன் அனுமதிக்கப்படுகிறது. இது தொடர்பான அனைத்தையும் இந்த பதிவில் தெரிந்துகொள்ளலாம். 

பணியாளர்கள் ஓய்வூதியத் திட்டத்தில் பணம் எவ்வாறு டெபாசிட் செய்யப்படுகிறது?

இபிஎஃப்ஓ -வின் தற்போதைய விதிகளின்படி, ஊழியர் தனது சம்பளத்தில் 12% (அடிப்படை சம்பளம் + அகவிலைப்படி) ஒவ்வொரு மாதமும் EPF கணக்கில் செலுத்துகிறார். அதே நேரத்தில், முதலாளி / நிறுவனமும் அதே தொகையை உங்கள் வருங்கால வைப்பு நிதிக் கணக்கில் போடுகின்றனர். எனினும், முதலாளி / நிறுவனத்தின் பங்களிப்பில் 3.67 சதவிகிதம் EPF -இலும் 8.33 சதவிகிதம் ஊழியர்களின் ஓய்வூதியத் திட்டத்திலும் (EPS) டெபாசிட் செய்யப்படுகிறது. ஆனால், இதில் மாதம் ரூ.1,250 வரம்பு உள்ளது. உண்மையில், EPS இல் 8.33% பங்களிப்பு ரூ.15000 (அடிப்படை+டிஏ) என கணக்கிடப்படுகிறது. ஆனால், இந்த உச்சவரம்பை (வரம்பு) நீக்க வேண்டும் என்ற கோரிக்கை நீண்ட நாட்களாக நீடித்து வரும் நிலையில், உச்ச நீதிமன்றத்தில் விசாரணை நடந்து வருகிறது.

EPS கணக்கிலிருந்து யார் பணம் எடுக்கலாம்?

இபிஎஃப்ஓ ஓய்வுபெற்ற அமலாக்க அதிகாரி பானு பிரதாப் ஷர்மாவின் கூற்றுப்படி, இரண்டு சூழ்நிலைகளில் மட்டுமே EPS கணக்கில் இருந்து மொத்தப் பணத்தை எடுக்க முடியும். இபிஎஸ் விதிகளின்படி, வேலையை விட்டு வெளியேறும் முன் சேவை வரலாறு (சர்வீஸ் ஹிஸ்டரி) 10 ஆண்டுகளுக்கு குறைவாக இருந்தால் அல்லது ஊழியர் 58 வயதை அடைந்தால் (எது முந்தையதோ அது), அவர் ஓய்வூதிய நிதிப் பணத்தை மொத்தமாக எடுக்கலாம். ஒருவருக்கு 58 வயதானாலும், மொத்தத் தொகையை எடுப்பதற்கு பதிலாக EPS திட்டச் சான்றிதழின் விருப்பமும் உள்ளது. அதே நேரத்தில், பணியாளர் வேறு நிறுவனத்தில் பணியில் சேர்ந்திருந்தாலும் அல்லது சேவை வரலாறு 10 ஆண்டுகளுக்கு மேல் ஆகியிருந்தாலும் திட்டச் சான்றிதழை எடுக்கலாம், அத்தகைய சூழ்நிலையில் திட்டச் சான்றிதழ் வழங்கப்படுகிறது.

சர்வீஸ் ஹிஸ்டரி வரலாற்றை இபிஎஃப்ஓ ​​எவ்வாறு கணக்கிடுகிறது?

EPF திட்டத்தில் ஒரு பணியாளர் சேர்ந்த நாளிலிருந்து EPFO ​​சேவை வருடங்களை கணக்கிடுகிறது. இருப்பினும், சேவை வரலாறு தொடர்ச்சியாக இருக்க வேண்டிய அவசியமில்லை. உதாரணமாக ஒருவர் ஒரு நிறுவனத்தில் பணிபுரியும் போது 2010 இல் EPF திட்டத்தில் சேர்ந்துள்ளார் என வைத்துக்கொள்ளலாம். 3 வருடங்கள் (2013) இங்கு பணியாற்றிய பிறகு அவர் வேலை மாறியிருக்கலாம். ஆனால் அவர் மாறிய மற்ற நிறுவனத்தில் EPF பலன்கள் வழங்கப்படவில்லை, ஏனெனில் அந்த நிறுவனம் EPF இன் வரம்புக்குள் வராது என்று வைத்துக்கொள்வோம். ஊழியர் இங்கு 4 ஆண்டுகள் பணியாற்றுகிறார் என வைத்துக்கொள்ளலாம். 2017 இல், அவர் மீண்டும் வேலையை மாற்றிவிட்டு, EPF திட்டத்தின் பலன் கிடைக்கும் மூன்றாவது நிறுவனத்திற்குச் செல்கிறார். அத்தகைய சூழ்நிலையில், 2021 ஆம் ஆண்டு வரை EPS திரும்பப் பெறுதலில் உங்கள் சேவை வரலாற்றைக் கணக்கிடுவது முதல் மற்றும் மூன்றாவது நிறுவனத்தில் செலவழித்த ஆண்டுகளின் அடிப்படையில் கணக்கிடப்படும். இடையில் உள்ள மற்ற நிறுவனத்தின் வரலாறு கணக்கிடப்படாது. உங்கள் சேவை வரலாறு மொத்தம் 7 ஆண்டுகளுக்கு பரிசீலிக்கப்படும். அத்தகைய சூழ்நிலையில், நீங்கள் மொத்த ஓய்வூதிய நிதியிலிருந்து பணத்தை எடுக்கலாம்.

மேலும் படிக்க | EPFO வட்டி மற்றும் வரவை வீட்டில் இருந்தே சரிபார்க்க வேண்டுமா? 4 ஈஸியான வழிமுறைகள்

EPS கணக்கிலிருந்து எவ்வளவு பணம் எடுக்க முடியும்?

முதல் 10 வருட சேவையில் (சர்வீஸ் ஹிஸ்டரி) ஆண்டுகள் எவ்வளவு குறைவாக இருக்கிறதோ, அவ்வளவு குறைவான தொகை கிடைக்கும். சேவை 10 ஆண்டுகளுக்கு குறைவாக இருந்தால் அல்லது 58 வயதில் ஓய்வு பெறும் போது மட்டுமே இபிஎஸ் திட்டத்தில் இருந்து மொத்தமாக திரும்பப் பெற அனுமதிக்கப்படும். 10 ஆண்டுகளுக்கு குறைவாக இருந்தால், EPS திட்டம் 1995 இல் கொடுக்கப்பட்ட அட்டவணை D இன் அடிப்படையில் பணத்தை திரும்பப் பெறலாம்.

ஓய்வூதிய சான்றிதழை எவ்வாறு பெறுவது?

10 ஆண்டுகள் பணி முடிந்தவுடன், பணியாளர் ஓய்வூதிய சான்றிதழை பெற்றுக் கொள்ளலாம். இந்த சான்றிதழில், ஓய்வூதியம் பெறக்கூடிய சேவை, சம்பளம் மற்றும் வேலையை விட்டு வெளியேறும்போது வழங்கப்படும் ஓய்வூதியத்தின் அளவு ஆகியவை குறிப்பிடப்பட்டிருக்கும். ஒரு நபர் 10 ஆண்டுகள் அல்லது அதற்கு மேற்பட்ட சேவைக்கான திட்டச் சான்றிதழைப் பெற்றிருந்தால், அவர் 58 வயது முதல் இபிஎஸ்-ன் கீழ் மாதாந்திர ஓய்வூதியத்தைப் பெறுவதற்கு உரிமையுடையவராவார். இருப்பினும், 50 வயதிலிருந்து முன்கூட்டியே ஓய்வூதியத்திற்கு (எர்லி பென்ஷன்) விண்ணப்பிக்க அவருக்கு உரிமை உண்டு. ஆனால், 58 வயதில் பெறும் ஓய்வூதியத்தை விட, 50 வயதில் பெறும் மாத ஓய்வூதியம் குறைவாகவே இருக்கும்.

EPS -இலிருந்து பணம் எடுக்கும்போது வரி விலக்கு அளிக்கப்படுமா?

EPS கணக்கில் இருந்து மொத்தமாக தொகையை திரும்பப் பெறுவது வரி வரம்பிற்கு உட்பட்டது. ஆனால், இந்த வரி எவ்வளவு, எந்த அடிப்படையில் கழிக்கப்படும் என்பது குறித்து வருமான வரிச் சட்டத்தில் விவரம் தெளிவாக இல்லை. EPF திட்டத்தில் வேலையை விட்டு வெளியேறினால், உறுப்பினர் முழுத் தொகையையும் திரும்பப் பெறுவதற்கும் கணக்கை மூடுவதற்கும் விருப்பம் உள்ளது. கணக்கு மூடப்படும் போது (2 மாதங்களுக்கும் மேலாக வேலையில்லாமல் இருப்பதால்), EPF மற்றும் EPS கணக்குகளில் இருந்து மொத்த தொகையை திரும்பப் பெறலாம் (சேவை ஆண்டுகள் 10 ஆண்டுகளுக்கு குறைவாக இருந்தால்).

மேலும் படிக்க | உங்கள் PF கணக்கில் வட்டி பணம் எப்போது டெபாசிட் செய்யப்படும், இதோ அப்டேட் 

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News