கிரக தோஷம் என்பதன் சரியான அர்த்தம் மற்றும் திருமணத்திற்கான கிரக தோஷ பரிகாரங்கள்
ஜோதிட சாஸ்திரத்தின்படி, சூரியன், சந்திரன், செவ்வாய், புதன், வியாழன், சுக்கிரன், சனி, இராகு, கேது என நவகிரகங்கள் மக்களின் வாழ்க்கையில் தாக்கத்தை ஏற்படுத்துகின்றன.
புதுடெல்லி: ஜோதிட சாஸ்திரத்தின்படி, சூரியன், சந்திரன், செவ்வாய், புதன், வியாழன், சுக்கிரன், சனி, இராகு, கேது என நவகிரகங்கள் மக்களின் வாழ்க்கையில் தாக்கத்தை ஏற்படுத்துகின்றன.
சூரியனைத் தவிர பிற கிரகங்கள் தாமும் சுழன்று கொண்டே சூரியனையும் சுற்றி வருகின்றன. ராகு மற்றும் கேது கிரகங்கள் இடம் சுழியாகவும், பிறா மற்றைய கிரகங்கள் வலம்சுழியாகவும் சுற்றுகின்றன.
கிரகங்கள் அனைத்துமே வெவ்வேறு வேகத்தில் சுற்றுவதால், கிரக நிலைகள் தொடர்ந்து மாறிக் கொண்டே இருக்கிறது.
நம்மைச் சூழ்ந்துள்ள நட்சத்திரங்களும், கிரகங்களும் தனித்தனி ஆற்றல் கதிர்களைப் பெற்றுள்ளன. அவற்றின் தன்மையின் அடிப்படையில் அவற்றின் கதிர்வீச்சுகள் வெளிப்படுகின்றன.
மேலும் படிக்க | மற்றவர்களது மகிழ்ச்சி, வெற்றியை பார்த்து பொறாமைப்படும் ராசிகள்
ஒவ்வொரு கோள்களின் நிறத்தில் இருந்து அலைவீச்சின் நீளம் வரை அனைத்துமே மாறுபட்டவை.
மனிதர்கள் மீது கிரகங்களில் ஒளிக்கதிர்கள் படும்போது, சில நல்லது செய்தால் சில தீமைகளை செய்கின்றன. நல்லனவாகவும், வேறு சில தீமை பயற்பனவாகவும் அமைந்து விடுகின்றன.
சில கிரகங்கள் அதன் நிலைக்கேற்ப ஒருவருக்கு பாதகமான பலனை தருக்கூடிய கதிர்வீச்சு இருந்தால் அது கிரகதோஷம் ஆகும்.
தோஷங்களை கிரகங்கள் மூலம் எமக்கு ஏற்படுத்துபவர் இறைவன். அவரின் கட்டளைபடியே கிரகங்கள் செயல்படுகின்றன. எனவே கிரக தோஷங்களை இறை வழிபாட்டின் மூலமும், கிரக வழிபாட்டின் மூலமும் தீர்க்க முடியும்.
மேலும் படிக்க | ராகு கிரகம் கண்டு அஞ்ச வேண்டாம்
ஜாதக தோஷங்கள் எவை?
தோஷங்களில் முக்கியமானவை செவ்வாய் தோஷம், ராகு தோஷம், கேது தோஷம், சூரிய தோஷம், களத்திர தோஷம் ஆகியவை ஆகும்.
பொதுவாக இவை திருமணத்திற்காக பார்க்கப்படுபவை என்றாலும், வேறு சில காரணங்களுக்காகவும் கிரக சாந்தி செய்வது நல்லது.
மேலும் படிக்க | Zodiac Nature: மறப்போம் மன்னிப்போம் மன்னிப்பு கேட்போம் கொள்கை கொண்ட 3 ராசிகள்
செவ்வாய் தோஷம்:
செவ்வாய் தோஷம் இருப்பவர்களுக்கு திருமணம் செய்யும்போது தோஷ நிவர்த்தி செய்ய வேண்டும். ஒருவைன் ஜாதக கட்டத்தில் லக்னத்துக்கு 2, 4, 7, 8, 12 ஆகிய இடங்களில் செவ்வாய் கிரகம் இருந்தால் செவ்வாய் தோஷம் என்று கூறப்படும்.
செவ்வாய்க்கு தோஷ நிவர்த்தி செய்தாலும்கூட அதேபோல் 2, 4, 7, 8, 12 ஆகிய இடங்களில் செவ்வாய் இருக்கும் ஜாதகத்தை மட்டுமே திருமணத்திற்கு ஜோடி சேர்க்க வேண்டும்.
செவ்வாய்க்கிழமை விரதம் இருந்து முருகனுக்கு அர்ச்சனை செய்து வரலாம். அறுபடை வீடுகளுக்கு சென்று தரிசனம் செய்யலாம். வைத்தீஸ்வரன் கோயிலில் பரிகார பூஜை செய்யலாம்.
மேலும் படிக்க | சனிப்பெயர்ச்சி: 3 ராசிகளுக்கு அபாய காலம், இவற்றை செய்தால் நிவாரணம் பெறலாம்
ராகு/கேது தோஷம்:
ஜாதகத்தில் லக்னம், 2, 7, 8 ஆகிய இடங்களில் ராகு அல்லது கேது இருப்பதால் சர்ப்ப தோஷம் ஏற்படுகிறது. இந்த தோஷ அமைப்பு உள்ள ஜாதகங்களை அதே சம தோஷம் உள்ள ஜாதகத்துடன் சேர்ப்பதே தோஷ நிவர்த்திக்கு பரிகாரமாகும்.
உதாரணமாக லக்னத்தில் ராகு அல்லது கேது இருந்தால் அதேபோல் லக்னத்தில் ராகு அல்லது கேது உள்ள ஜாதகத்தை சேர்ப்பதே பொருத்தமாகும்.
திருநாகேஸ்வரம், காளஹஸ்தி ஆகிய ஸ்தலங்களுக்கு சென்று வழிபடலாம். சங்கடஹர சதுர்த்தியன்று விநாயகரை வழிபடலாம். செவ்வாய்க்கிழமை ராகு காலத்தில் துர்க்கையை வணங்க வேண்டும்.
மாங்கல்ய தோஷம்:
இந்த தோஷம் பெண் ஜாதகத்தில் மட்டுமே காணப்படும், அதாவது லக்னத்துக்கு 8 ம் இடத்தில் சூரியன், ராகு, கேது, சனி போன்ற கிரகங்கள் இருப்பது மாங்கல்ய தோஷமாகும்.
இதில் 8 ம் இடத்தை சுப கிரகங்கள் மற்றும் குரு பார்த்தால் தோஷ நிவர்த்தி. 8-ம் அதிபதி பலம் பெற்றாலும் தோஷ நிவர்த்தியாகும்.
மேலும் படிக்க | இந்த 4 ராசிக்காரர்கள் சூரிய கிரகணத்தின் போது உஷாராக இருக்க வேண்டும்
சூரிய தோஷம்:
ஜாதக கட்டத்தில் லக்னத்துக்கு 2, 7, 8 ஆகிய இடங்களில் சூரியன் இருந்தால் சூரிய தோஷமாகும். இந்த அமைப்பு உள்ள ஜாதகங்களை அதேபோன்று அமைப்புடைய ஜாதகத்துடன் சேர்ப்பதால் தோஷம் நிவர்த்தியாகிறது.
ஞாயிற்றுக்கிழமை விரதம் இருந்து பசு மாட்டுக்கு கோதுமையால் செய்த உணவு அளிக்கலாம். தினமும் ஆதித்ய ஹிருதய ஸ்தோத்திரம் படிக்கலாம்.
களத்திர தோஷம்:
ஒருவரின் ஜாதகத்தில் களத்திர ஸ்தானம் என்னும் 7-ம் இடத்தில் களத்திர காரகன் சுக்கிரன் இருப்பது களத்திர தோஷமாகும். இந்த அமைப்பால் பல சாதகமான பலன்கள் இருந்தாலும் திருமண சுணக்கம் ஏற்படும். அதேபோல தோஷமுள்ள ஜாதகம் பார்த்து திருமணம் செய்து வைக்க வேண்டும்.
சுமங்கலி பெண்களுக்கு மஞ்சள், வெற்றிலை பாக்கு தட்சிணை என மங்கலப் பொருட்களை வழங்கி ஆசி பெறலாம்.
ஜாதக அமைப்புகளை சீர்தூக்கி பார்த்து தகுந்த ஜாதகத்தை சேர்ப்பதன் மூலமாகவும் எளிய பரிகாரங்களை செய்வதன் மூலமாகவும் மகிழ்ச்சியான மணவாழ்க்கை அமையலாம்...
(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ஜீ மீடியா இவற்றை உறுதிப்படுத்தவில்லை.)
மேலும் படிக்க | Akshaya Tritiya 2022: இந்த 3 ராசிக்காரர்களின் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR