Zodiac Nature: மனிதர்களின் இயல்பு ஆளுக்கு ஆள் மாறுபடும். அதையேதான் ஜோதிட சாஸ்திரமும் சொல்கிறது. அதன்படி, ஒவ்வொரு ராசியைச் சேர்ந்தவர்களின் இயல்பு மற்றும் எண்ணங்களில் வேறுபாடு இருக்கும் என்பதை மாற்ற முடியாது.
சில ராசிக்காரர்களின் இயல்பு கோபம் என்றால், வேறு சிலரின் இயல்பு சாந்தம், சிலர் பொறுமைக்காரர் என்றால் வேறு சிலர் அவசரக்காரர்கள். இப்படி மனிதர்களின் அடிப்படை இயல்புகள் மாறிக் கொண்டே இருந்தாலும், சிலரிடம் பொறாமை குணம் குடி கொண்டிருக்கும். சிலரிடமோ கெட்ட எண்ணமே இருக்காது.
இப்படி பலவிதமான குணங்களை கொண்டவர்களுடன் நாம் தினசரி பேசிப் பழகி வருகிறோம். சிலரின் இயல்பு தந்திரமானதாக இருக்கும், அதை நீங்கள் உணர்ந்தும் இருக்கலாம், சிலர், சுயநலவாதிகளாக இருப்பார்கள். இப்படி பல்வேறு குணங்களைக் கொண்ட வெவ்வேறு ராசிகளில் தவறை மறக்காதவர்களும் மன்னிக்காதவர்களும் உண்டு.
சில ராசிக்காரர்கள் தவறு செய்தாலும், உள்ளம் சுத்தமாக இருப்பார்கள் என்று கூறப்பட்டுள்ளது. அவர்கள் கோபத்தில் எதையாவது தவறாகச் சொன்னாலும், தங்கள் தவறை மிக விரைவில் புரிந்துகொள்கிறார்கள். தங்கள் தவறை புரிந்துக் கொண்டால், அதை உடனடியாக மாற்றிக் கொள்ளும் ராசிகள் இவை.
மேலும் படிக்க | கும்ப ராசியில் பிரவேசிக்கும் சனி பகவான்; நிம்மதி பெருமூச்சு விடும் இரு ராசிகள்
மேஷம்: இந்த ராசியை சேர்ந்தவர்களுக்கு கோபம் அதிகம். முன்கோபிகளாக இருப்பினும், அவர்கள் எவ்வளவு சீக்கிரம் கோபப்படுகிறார்களோ, அவ்வளவு சீக்கிரம் அவர்கள் சாந்தமாகிவிடுவார்கள். மேஷ ராசிக்காரர்கள் யாரைப் பற்றியும் தவறாக நினைக்காதவர்கள்.
கோபம் இருக்கும் இடத்தில் தான் குணம் இருக்கும் என்ற பழமொழியை நிரூபிக்கும் ராசிக்காரர்கள். யாரையும் மோசம் செய்யாத மேஷ ராசிக்காரர்கள், மனதில் தோன்றுவதை மறைக்காமல் அப்படியே வெளியே சொல்லும் ராசிக்காரர்கள்.
கடகம்: கடக ராசிக்காரர்கள் அமைதியான இயல்புடையவர்கள். பொதுவாக இந்த ராசிக்காரர்கள் மற்றவர்களுக்கு நல்லதையே நினைப்பார்கள். அதே சமயம் மக்களுக்கு எப்போதும் நல்லது செய்ய வேண்டும் என்ற மேன்மையான எண்ணம் கொண்டவர்கள்.
கர்மாவில் நம்பிக்கை கொண்ட கடக ராசிக்காரர்கள், தங்கள் கடின உழைப்பால் அதிர்ஷ்டத்தை உருவாக்குகிறார்கள். மற்றவர்களுக்கு உதாரணமாகவும், உத்வேகத்தின் ஆதாரமாக மாறும் கடக ராசிக்காரர்கள், யார் மீதும் பகை கொள்வதில்லை. இருப்பினும், ஒருவரை பிடிக்காவிட்டால், அவர்களிடமிருந்து விலகி விடுவார்கள்.
மேலும் படிக்க | சூரியனின் ராசி மாற்றம்: சில ராசிகளுக்கு அமோக லாபம், சிலருக்கு அதிருப்தி
கன்னி ராசி: கன்னி ராசிக்காரர்கள் மற்றவர்களுக்கு மிகவும் உதவியாக இருப்பார்கள். பொதுவாக, இந்த ராசிக்காரர்கள் தங்கள் வாழ்க்கையில் பிறர் தலையிடுவதை விரும்ப மாட்டார்கள்.
புத்திசாலிகள் மற்றும் ஒழுக்கமான இயல்புடையவர்களாகவும் காணப்படும் கன்னி ராசிக்காரர்கள், எப்போதும் மற்றவர்களுக்கு மரியாதை கொடுக்க விரும்புகிறார்கள். மிகவும் நியாயமான ராசிக்காரர்கள் இந்த கன்னி ராசியினர்.
(பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல் பொதுவான அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளது. ZEE NEWS இதற்கு பொறுப்பேற்காது.)
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR