ராகு கிரகம் கண்டு அஞ்ச வேண்டாம்: இவர்களின் வாழ்வை பிரகாசிப்பார் ராகு

Rahu Effect on Life: நிழல் கிரகமான ராகு-கேதுவின் பெயரைக் கேட்டாலே மக்கள் மனதில் பயம் ஏற்படுகின்றது. பொதுவாக, இந்த கிரகங்கள் மக்களுக்கு தீங்கு விளைவிக்கும் என்று நம்பப்படுகின்றது. 

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Apr 16, 2022, 11:38 AM IST
  • ராகு கேதுவைப் பற்றி அதிகமாக அஞ்ச வேண்டிய அவசியம் இல்லை.
  • ராகு சுப ஸ்தானத்தில் இருந்தால் அதிக நன்மைகள் நடக்கும்.
  • ராகுவின் சுப பலனால் கூர்மையான புத்தி கிடைக்கும்.
ராகு கிரகம் கண்டு அஞ்ச வேண்டாம்: இவர்களின் வாழ்வை பிரகாசிப்பார் ராகு title=

ராகுவால் வாழ்க்கையில் ஏற்படும் சாதகமான பலன்கள்: நிழல் கிரகமான ராகு-கேதுவின் பெயரைக் கேட்டாலே மக்கள் மனதில் பயம் ஏற்படுகின்றது. பொதுவாக, இந்த கிரகங்கள் மக்களுக்கு தீங்கு விளைவிக்கும் என்று நம்பப்படுகின்றது. 

எனினும், ராகு கேதுவைப் பற்றி அதிகமாக அஞ்ச வேண்டிய அவசியம் இல்லை. ராகு, மனிதர்களின் முந்தைய பிறவிகளின் கர்ம பலனை அடிப்படையாகக் கொண்டு பலன் கொடுக்கும் ஒரு கிரகமாகும். 

ஒருவர் முந்தைய பிறவியில் கெட்ட செயல்களைச் செய்திருந்தால், இந்தப் பிறவியில் ராகு அவருடைய ஜாதகத்தில் அசுப ஸ்தானத்தில் இருப்பார். மறுபுறம், ஒருவர் முந்தைய பிறவியில் நல்ல செயல்களைச் செய்திருந்தால், ராகு அதிர்ஷ்ட ஸ்தானத்தில் அமர்ந்து பல நன்மைகளை செய்வார். 

ஆகவே ஜோதிடத்தில், பல வித பரிகாரங்கள் ஒருபுறம் இருந்தாலும், நற்செயல்கள் செய்வதற்கும் அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது. சமீபத்தில் ஏப்ரல் 12ம் தேதி ராகு ராசி மாறி மேஷ ராசிக்கு பிரவேசித்தார். கேது துலா ராசியில் பிரவேசித்துள்ளார். மூன்று ராசிக்காரர்களுக்கு ராகு கேதுவின் இந்த ராசி மாற்றம் மிகவும் நல்ல, வளமான பலன்களை அளிக்கவுள்ளது. ராகு கேதுவின் மாற்றம் எந்தெந்த ராசிக்காரர்களுக்கு அட்டகாசமான பலன்களை அளிக்கவுள்ளது என இந்த பதிவில் காணலாம். 

மேஷம்:

மேஷ ராசிக்காரர்களுக்கு ராகு-கேதுவின் சஞ்சாரம் மிகவும் நல்லதாக இருக்கும். அவர்களின் நம்பிக்கை அதிகரிக்கும். தொழிலில் இருந்த தடைகள் நீங்கி வேகமாக முன்னேறுவீர்கள். இந்த காலத்தில் சற்று கவனமாக இருங்கள். யாருடனும் தகராறு செய்யாமல் இருப்பது மிக அவசியம்.

ரிஷபம்:
ராகு-கேதுவின் பெயர்ச்சி காலம் ரிஷப ராசிக்காரர்களின் தொழிலுக்கு அதிக பலன்களைத் தரும். அவர்களுக்கு புதிய வேலை வாய்ப்பு கிடைக்கலாம். பதவி உயர்வு வரக்கூடும். வருமானம் அதிகரிக்கும். வெளிநாடு செல்ல வாய்ப்புகள் வரும். இதன் மூலம் நல்ல ஆதாயமும் பெறுவீர்கள். ஆரோக்கியத்தில் அக்கறை காட்டுங்கள்.

மிதுனம்:

ராகு-கேதுவின் பெயர்ச்சி மிதுன ராசிக்காரர்களுக்கு அதிக பணம் சம்பாதிக்கும் வாய்ப்பை தரும். சமூகத்தில் மரியாதை அதிகரிக்கும். மனைவியின் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. குழந்தைகளால் மகிழ்ச்சி அடைவீர்கள். வாழ்க்கைத் துணையின் உணர்வுகளை அலட்சியம் செய்தால் சிரமங்கள் ஏற்படும்.

உங்கள் செயல்களில் சிறப்பு கவனம் செலுத்துங்கள்

இந்து மதத்தில் நற்செயல்கள் செய்வதற்கும், தான தர்மங்கள் செய்வதற்கும் அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது. தேவைப்படுபவர்களுக்கு உதவுதல், நன்கொடை அளிப்பது, நன்றாக நடந்துகொள்வது ஆகியவை இதில் அடங்கும். 

ஜோதிட சாஸ்திரத்திலும் இந்த நற்செயல்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது. குறிப்பாக சனி, ராகு-கேது போன்ற கிரகங்கள் நமது செயல்களுக்கே அதிக முக்கியத்துவம் அளிக்கின்றன. 

மேலும் படிக்க | Zodiac Nature: மறப்போம் மன்னிப்போம் மன்னிப்பு கேட்போம் கொள்கை கொண்ட 3 ராசிகள் 

ஜாதகத்தில் ராகு சுப ஸ்தானத்தில் இருப்பவர்களின் அதிர்ஷ்டம் மிளிர்வதற்கு இதுவே காரணம். ராகு அளிக்கும்  சுப பலன்கள் மனிதர்களின் வாழ்வில் பல வித நன்மைகளை அள்ளித்தரும். 

ராகு சுப ஸ்தானத்தில் இருந்தால் நடக்கும் நன்மைகள்

- ஒருவரது ஜாதகத்தில் ராகு சாதகமான நிலையில் இருந்தால், அந்த நபர் இயல்பிலேயே சுறுசுறுப்பாக இருப்பார், உள்ளம் தூய்மையாக இருக்கும்.

- ராகுவின் சுப பலனால் கூர்மையான புத்தி கிடைக்கும்.

- ராகு வின் சுப பலன் காரணமாக, ஆன்மீக செயல்களில் அதிக ஆர்வம் கூடும். ஆன்மிகத் துறையில் அதிக முன்னேற்றமும் அடையலாம். 

- ராகுவின் நல்ல பலன் அபரிமிதமான செல்வத்தையும் மரியாதையையும் தருகிறது. ராகு ஒருவரது ஜாதகத்தில் சுப ஸ்தானத்தில் இருந்தால், அவரது வாழ்நாளில் பணத்துக்குப் பஞ்சமிருக்காது. 

(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)

மேலும் படிக்க | Astro: சனி-ராகு-கேது தோஷங்கள் நீங்க செய்ய வேண்டிய பரிகாரங்கள் 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

 

Trending News