புதுடெல்லி: கிரகங்களின் ராஜாவான சூரியன் மகர ராசியில் இருந்து விலகி கும்ப ராசிக்கு பிரவேசிக்க உள்ளது. இனி அடுத்த ஒரு மாதம் அவர் கும்ப ராசியில் இருப்பார். அத்தகைய நேரத்தில் 12 ராசிக்காரர்களின் வாழ்க்கையில் நல்ல அல்லது கெட்ட விளைவை ஏற்படுத்தும். இந்த ராசிகளில் 4 ராசிக்காரர்களுக்கு மட்டும் மிகவும் மங்களகரமாக இருக்கும். சூரியனின் ராசி மாறுதலால் இந்த 4 ராசிக்காரர்களுக்கும் பிப்ரவரி 14-ம் தேதி முதல் அதாவது இன்று முதல் நல்ல நாட்கள் துவங்கிவிட்டன என்றே கூறலாம். அதன்படி இந்த 4 ராசிகாரர்களுக்கு வெற்றி, செல்வம், மரியாதை, முன்னேற்றம் மற்றும் தந்தையிடமிருந்து நிறைய ஆதரவு கிடைக்கும்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மேஷம்: மேஷ ராசிக்காரர்களுக்கு தொழில் ரீதியாக சில நல்ல செய்திகளைப் பெறலாம். இந்த செய்தி இந்த மாத இறுதிக்குள் கிடைக்கும். அதிர்ஷ்ட மழை பெறுவீர்கள். ஒவ்வொரு செயலிலும் வெற்றி உண்டாகும். பொருளாதாரத்தில் முன்னேற்றம் ஏற்படும். திருமண வாழ்க்கை மகிழ்ச்சிகரமாக இருக்கும்.


மேலும் படிக்க | இந்த 5 ராசிக்காரர்களுக்கு திடீர் பணவரவு உண்டாகும் 


ரிஷபம்: பண மழை உண்டாகும். இதன் மூலம் பொருளாதாரம் வலுப்பெறுவதுடன், பழைய கடனை அடைக்க உதவும். வாழ்க்கையில் மகிழ்ச்சி தட்டுப்படும். காதல் வாழ்க்கை நன்றாக இருக்கும். தொழிலில் முன்னேற்றம் ஏற்படும். வேலையில் வெற்றி பெறுவீர்கள்.


மிதுனம்: மிதுன ராசிக்காரர்களுக்கு பணம் பெறுவதற்கான வலுவான வாய்ப்புகள் உள்ளன. வேலை மாற்றம் ஏற்படும். வியாபாரத்தில் லாபம் உண்டாகும். நினைத்த காரியம் எளிதாக நடக்கும். தொழிலில் முன்னேற்றம் ஏற்படும். வாழ்க்கை துணையுடன் நேரத்தை செலவிடுங்கள், இது அன்பை அதிகரிக்கும்.


மகரம்: பண வரவு ஏற்படும். நீண்ட காலமாக பொருளாதார சிக்கலில் இருந்திருந்தால், தற்போது நிம்மதிப் பெருமூச்சு விடலாம். உங்கள் கௌரவம் உயரும். வீட்டில் மகிழ்ச்சி நிலவும். தொழில் ரீதியாக இந்த மாதம் மிகவும் முக்கியமானது. நீங்கள் முன்னேற்றம் அடைவீர்கள். வேலையில் வெற்றி பெறுவீர்கள். குடும்பத்துடன் நேரத்தை செலவிட்டு மகிழ்ச்சி அடைவீர்கள்.


(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளவை. ஜீ மீடியா இவற்றை உறுதிப்படுத்தவில்லை.)


மேலும் படிக்க | இந்த ராசிக்காரர்களுக்கு இன்று அடித்தது ஜாக்பாட்: பண மழை, அன்பு மழை பொழியும்


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR