மார்ச் மாதம் நிதியாண்டின் கடைசி மாதமாகும். அடுத்த நிதியாண்டு ஏப்ரல் 1 ஆம் தேதி தொடங்கும். மார்ச் மாதத்தில், பொதுமக்கள் செய்து முடிக்க வேண்டிய பல முக்கிய பணிகள் உள்ளன. பணத்தைச் சேமிக்கவும், நிதிப் பலன்களைப் பெறவும் வழக்கமாக இந்த மாதத்தில் பல பணிகள் செய்யப்படுகின்றன. இதில் முதலீடுகள், வருமான வரி தாக்கல் உட்பட பல முக்கிய விஷயங்கள் அடங்கும். நடப்பு நிதியாண்டு 2022-23 மார்ச் 31 அன்று முடிவடைவதால், இந்த தேதிக்குள் நாம் ஒவ்வொருவரும் செய்து முடிக்க வேண்டிய முக்கிய பணிகள் பற்றிய விவரங்களை இந்த பதிவில் காணலாம். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

பான்-ஆதார் இணைப்பு


கடந்த சில ஆண்டுகளாக பான் எண்ணை (நிரந்தர கணக்கு எண்) ஆதாருடன் இணைப்பதை அரசு கட்டாயமாக்கியுள்ளது. இருப்பினும், இன்னும் இந்த இணைப்பை செய்து முடிக்காத சிலரும் இருக்கின்றனர். நீங்களும் அவர்களில் ஒருவர் என்றால், இந்த முக்கிய பணியை மார்ச் 31-ஆம் தேதிக்குள் செய்துவிடுங்கள். இதற்கு நீங்கள் ரூ.1,000 அபராதம் செலுத்த வேண்டும். உங்கள் பான் எண்ணை ஆதாருடன் இணைக்கவில்லை என்றால் ஏப்ரல் 1 முதல் உங்கள் பான் செயலிழந்துவிடும்.


மியூச்சுவல் ஃபண்ட்ஸ் நாமினி


நீங்கள் மியூச்சுவல் ஃபண்டுகளில் முதலீடு செய்தால், மார்ச் 31 ஆம் தேதிக்குள் உங்கள் நாமினேஷனை சமர்ப்பிக்க வேண்டியது கட்டாயமாகும். இந்த விதிமுறைக்கு இணங்காத முதலீட்டாளர்களின் முதலீடுகள் முடக்கப்பட்டும். மேலும் அவற்றில் பரிவர்த்தனை எதுவும் செய்ய முடியாது.


பிரிவு 80C இன் கீழ் வரி விலக்கு


பிரிவு 80C இன் கீழ் வரி விலக்குகளைப் பெற நீங்கள் பல முதலீட்டுத் திட்டங்களில் முதலீடு செய்ய விரும்பினால், மார்ச் 31க்கு முன் முதலீடு செய்யலாம். வரி விலக்கு பெற பிபிஎஃப் (PPF), செல்வமகள் சேமிப்புத் திட்டம் (Sukanya Samriddhi Yojana), இஎல்எஸ்எஸ் (ELSS) போன்றவற்றில் முதலீடு செய்யலாம்.


மேலும் படிக்க | 7th Pay Commission: இந்த தேதியில் வருகிறது மாஸ் அறிவிப்பு, குஷியில் ஊழியர்கள்


பிரதம மந்திரி வய வந்தனா யோஜனா


பிரதம மந்திரி வய வந்தனா யோஜனா (PMVVY) என்பது காப்பீட்டுக் கொள்கை மற்றும் ஓய்வூதியத் திட்டமாகும். இத்திட்டத்தில் தனிநபர் ஒருவர் ரூ.15 லட்சம் வரை முதலீடு செய்யலாம். இந்தத் திட்டம் மூத்த குடிமக்களுக்கு தற்போது ஆண்டுக்கு 7.40% வட்டியுடன் நல்ல வருமானத்தை வழங்குகிறது. இந்தத் திட்டத்தில் முதலீடு செய்வதற்கான காலக்கெடு மார்ச் 31, 2023 ஆகும்.


ஹை-பிரீமியம் எல்ஐசி பாலிசி


ஹை பிரீமியம் எல்ஐசி பாலிசியில் வரி விலக்கு பெற விரும்பினால், மார்ச் 31 காலக்கெடுவிற்கு முன் பாலிசியை வாங்கினால் மட்டுமே நீங்கள் அதைப் பெற முடியும். ஏப்ரல் 1, 2023 முதல், விலக்கு கிடைக்காது என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.


மேலும் படிக்க | கிரெடிட் கார்டு தொகையை EMI ஆக மாற்றுவதால் யாருக்கு லாபம்? தெரிந்து கொள்ளுங்கள்


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ