அன்னை மகாலட்சுமியின் மனம் குளிர்ந்து செல்வம் கொழிக்க செய்ய வேண்டியவை!
உலகில் யார் செல்வத்தைப் வேண்டாம் என சொல்வார்கள். இந்த வகையில், ஒரு நபர் தனது வாழ்நாள் முழுவதும் பணம் சம்பாதிக்க தொடர்ந்து முயற்சி செய்கிறார், ஆனால் சில சிறிய வழிகளை பின்பற்றி, செல்வத்தை விரைவாக அடைவது வாழ்க்கையில் சாத்தியமாகும்.
பணக்காரர் ஆக வேண்டும் என்ற ஆசை யாருக்கு தான் இருக்காது. இன்று, செல்வம் பெருக, மகா லட்சுமியின் மனம் குளிர என்ன செய்ய வேண்டும் என பார்க்கலாம்.
உலகில் யார் செல்வத்தைப் வேண்டாம் என சொல்வார்கள். இந்த வகையில், ஒரு நபர் தனது வாழ்நாள் முழுவதும் பணம் சம்பாதிக்க தொடர்ந்து முயற்சி செய்கிறார், ஆனால் சில சிறிய வழிகளை பின்பற்றி, செல்வத்தை விரைவாக அடைவது வாழ்க்கையில் சாத்தியமாகும்.
மேலும் படிக்க | இந்த ராசிக்காரர்களுக்கு காதலை சொல்ல இது சரியான நேரம்: மிஸ் பண்ணிடாதீங்க
இந்த செயல்களால் செல்வத்தின் தெய்வமான லட்சுமி தேவி மகிழ்ச்சி அடைகிறார். எனவே தாமதம் என்ன, இதைனை பின்பற்றி வாழ்க்கையில் மகிழ்ச்சியாக இருக்கவும்
(1) வெள்ளிக்கிழமை அன்னை லட்சுமிக்கு உகந்த நாளாகக் கருதப்படுகிறது. இந்த நாளில் லட்சுமி தேவியை முறையாக வணங்கத் தொடங்குங்கள். தேவிக்கு இளஞ்சிவப்பு பூக்களை கொண்டு பூஜியுங்கள். ரோஜா பூக்கள் அன்னை லட்சுமி தேவிக்கு மிகவும் பிரியமானவை.
(2) அன்னையை வழிபட, ஸ்ரீலட்சுமி சரஸ்ரநாமம் அல்லது ஸ்ரீ லலைதா சகஸ்ரநாமம் ஜபிக்கலாம் அல்லது ஸ்ரீசுக்தம் பாராயணம் செய்யலாம். தாமரைக்காசுகளை வைத்து பூஜிக்கலாம். (108 காசுகள்).
(3) வீட்டில் தூய்மையாக வைத்திருக்க வேண்டும். மணம் நிறைந்த சூழல் இருக்க வேண்டும்.
(4) சூரிய உதயம் மற்றும் சூரிய அஸ்தமனத்தின் போது ஒருபோதும் தூங்க வேண்டாம்.
(5) முடிந்தவரை தானம் செய்யவும். பசு அல்லது நாய்க்கு உணவளியுங்கள். யாசகம் கேட்டு வருபவருக்கு உணவு கொடுங்கள்.
(6) வடகிழக்கில் அழுக்கை சேர விடாதீர்கள்.
(7) வீடு, கடை-தொழிற்சாலையில் வடக்கு, கிழக்கு மற்றும் ஈசான மூலையை மூட வேண்டாம். அங்கே மணம் நிறைந்த பூக்களை வைக்கலாம்.
(8) துடைப்பத்தை யார் கண்களும் படாத ஒரு இடத்தில் வைத்திருங்கள்.
(9) சுத்தமான ஆடைகளை அணியுங்கள். வாசனை திரவியத்தைப் பயன்படுத்துங்கள்.
(10) வீடு முழுவதையும் ஒப்போதும் தூய்மையாக வைத்திருங்கள். தினமும் ஒரே நேரத்தில் கடவுளை வணங்குங்கள்.
மேலும் படிக்க | செவ்வாயின் மாற்றத்தால் இந்த ராசிக்காரர்கள் காட்டில் பண மழை: உங்க ராசி என்ன?
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR