செவ்வாயின் மாற்றத்தால் இந்த ராசிக்காரர்கள் காட்டில் பண மழை: உங்க ராசி என்ன?

Mars Transit: பிப்ரவரி 26-ம் தேதி செவ்வாய் சனி பகவானின் மகர ராசிக்குள் நுழைகிறார். இந்த செவ்வாய் சஞ்சாரத்தால் சில ராசிக்காரர்கள் அதிகம் பாதிக்கப்படுவார்கள். 

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Feb 8, 2022, 08:10 PM IST
  • மேஷ ராசிக்காரர்களுக்கு செவ்வாயின் ராசி மாற்றம் சிறப்பான பலன்களைத் தரும்.
  • செவ்வாயின் இட மாற்றம் ரிஷப ராசியினருக்கு நன்மை பயக்கும்.
  • செவ்வாயின் சஞ்சாரம் மீன ராசியினரின் வாழ்க்கையில் மகிழ்ச்சியைத் தரும்.
செவ்வாயின் மாற்றத்தால் இந்த ராசிக்காரர்கள் காட்டில் பண மழை: உங்க ராசி என்ன?  title=

ஜோதிடத்தில் கிரகங்களின் ராசி மாற்றங்களுக்கு சிறப்பு முக்கியத்துவம் உண்டு. கிரகங்கள் ராசிகளை மாற்றுவது அனைத்து ராசிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்துகிறது. பிப்ரவரி 26-ம் தேதி செவ்வாய் சனி பகவானின் மகர ராசிக்குள் நுழைகிறார். இந்த செவ்வாய் சஞ்சாரத்தால் சில ராசிக்காரர்கள் அதிகம் பாதிக்கப்படுவார்கள். 

செவ்வாய் கிரகம் சனியின் ராசிக்கு மாறுவதால் எந்தெந்த ராசிக்காரர்களுக்கு நல்ல பலன் கிடைக்கும் என்பதை இந்த பதிவில் காணலாம். 

மேஷம் 

மேஷ ராசிக்காரர்களுக்கு செவ்வாயின் ராசி மாற்றம் சிறப்பான பலன்களைத் தரும். செவ்வாய் கிரகத்தின் இந்த பெயர்ச்சி அதிர்ஷ்டத்தை அள்ளித் தரும். செவ்வாய் இந்த ராசியின் கர்ம வீட்டில் சஞ்சரிப்பார். இதன் காரணமாக இந்த காலகட்டத்தில் தடைபட்ட காரியங்கள் அனைத்தும் நடந்துமுடியும். இது தவிர உத்தியோகத்தில் பதவி உயர்வுக்கான வாய்ப்பும் இப்போது அமையும்.

ரிஷபம்

செவ்வாயின் இட மாற்றம் ரிஷப ராசியினருக்கு நன்மை பயக்கும். செவ்வாய் ராசி மாற்றம் அடையும் இந்த காலத்தில் ரிஷப ராசிக்காரர்கள் தொட்ட காரியம் அனைத்தும் துலங்கும். அனைத்து வேலைகளும் வெற்றிகரமாக முடியும். இது தவிர, பொருளாதார நிலையும் இந்த காலகட்டத்தில் வலுவாக இருக்கும். இது தவிர, மனதில் அபரிமிதமான நம்பிக்கையும், உறுதியும் உருவாகும். 

மேலும் படிக்க | சனியின் ராசி மாற்றம் இந்த 4 ராசிக்காரர்களுக்கு நல்ல யோகம் தரும்

தனுசு 

தனுசு ராசிக்காரர்களுக்கு செவ்வாய் பெயர்ச்சி சாதகமாக அமையும். பணவீட்டில் செவ்வாய் சஞ்சரிப்பது சாதகமாக இருக்கும். வியாபாரத்தில் பொருளாதார வளர்ச்சிக்கான வாய்ப்புகள் அதிகமாக இருக்கும். இது தவிர தினசரி வருமானமும் அதிகரிக்கும். மூதாதையர் சொத்துக்களால் ஆதாயமும் பெறலாம்.

மீனம்

செவ்வாயின் சஞ்சாரம் மீன ராசியினரின் வாழ்க்கையில் மகிழ்ச்சியைத் தரும். இந்த காலத்தில் வருமானம் அதிகரிக்கும். வருமானத்திற்கான கட்டத்தில் செவ்வாய் சஞ்சரிப்பதால் வியாபாரம் பெருகும். அதே சமயம் பொருளாதார முன்னேற்றமும் ஏற்படும். இது தவிர, இந்த காலகட்டத்தில் புதிய வேலை வாய்ப்பையும் நீங்கள் பெறுவீர்கள். அதே சமயம் பணம் சம்பந்தமான பிரச்சனைகள் அனைத்தும் நீங்கும்.

(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ஜீ மீடியா இவற்றை உறுதிப்படுத்தவில்லை.)

மேலும் படிக்க | புதன் கிரகத்தால் இன்று முதல் பெரிய மாற்றம்: 4 ராசிக்காரர்கள் மீது நேரடி தாக்கம்

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR

 

Trending News