சூரியனைச் சுற்றியே உலகம் இயங்குகிறது. சூரிய ஒளி இல்லாவிட்டால் வாழ்க்கை எப்படி இருக்கும்? அதேபோலத் தான் சூரியனின் அருளும், அவர் இருக்கும் இடமும் நமது வாழ்க்கையில் மிகவும் முக்கிய மாற்றங்களை ஏற்படுத்துகிறது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

தற்போது சூரியன் ஏப்ரல் 14ம் தேதியன்று ராசி மாறினார். கிரகங்களின் சக்ரவர்த்தியாக கருதப்படும் சூரியன் ஆண் கிரகம். சிவப்பு நிறம் கொண்ட அவர், மனித உடலில் தலை மற்றும் எலும்புகளுக்கு காரணகர்த்தா என அழைக்கப்படுபவர்.


 கிழக்கு திசைக்கு அதிபதியான சூரியன் பத்தாமிடத்தில் திக் பலம் பெறுகிறார். சூரியன் ஒவ்வொரு ராசியிலும் ஒரு மாதம் இருப்பார். சூரியன் 12 ராசிகளிலும்  ஒரு மாதம் இருந்துவிட்டு, முழு சுற்று முடிப்பதைத் தான் ஓராண்டு என்று சொல்லுகின்றோம்.


சிம்ம ராசியை ஆட்சி வீடாகக்  கொண்ட சூரியன், மேஷராசியில் உச்சம் பெற்று, ராசி முதல் பத்து பாகைகளில் நீச்சம் பெறுகிறார். இப்படி சூரியனின் நிலையில் ஏற்படும் மாற்றங்கள், வாழ்க்கையின் பல அம்சங்களை பாதிக்கிறது.


மேலும் படிக்க | சுபகிருது தமிழ் புத்தாண்டு மேஷத்திற்கு மோசமில்லை


ஜோதிட சாஸ்திரத்தின்படி, இந்த 4 ராசிக்காரர்களுக்கு அடுத்த 24 நாட்களுக்கு அதிர்ஷ்டம் கோடைக்கால சூரியனாய் பிரகாசிக்கும்! 


ஏப்ரல் 14ம் தேதி மேஷ ராசிக்கு வந்த சூரிய பகவான் அங்கு மே 14-ம் தேதி வரை இருப்பார். சிலருக்கு இது அற்புதமான நேரமாக இருக்கும்.


மே 14 வரை எந்தெந்த ராசிக்காரர்கள் எந்தெந்த ராசிக்காரர்களுக்கு சூரியன் வெற்றியையும் மரியாதையையும் மகிழ்ச்சியையும் செழிப்பையும் தருவார் என்பதை தெரிந்து கொள்வோம்.


மேலும் படிக்க | சூரியனின் கருணையால் ராசிக்காரர்களுக்கு நன்மை


மேஷம்


மேஷ ராசிக்காரர்களுக்கு இந்த நேரம் செல்வம் பெருகும். சொத்துக்களால் ஆதாயம் அடைவார்கள். தொழிலில் ஆதாயம் உண்டாகும். புதிய வேலை கிடைக்கும். முன்னேற்றத்திற்கான வாய்ப்புகள் உள்ளன. இடம் மாற்றம் ஏற்படலாம். சந்ததியினரால் ஆதாயம் உண்டாகும். புதிய வீடு, வாகனம் வாங்கலாம்.



கடகம்


கடக ராசிக்காரர்களுக்கு இந்த நேரம் நம்பிக்கை அதிகரிக்கும். எல்லா வேலைகளையும் எளிதாக செய்து முடிப்பார்கள். சூரியபகவானின் அருளால் எல்லா காரியங்களிலும் வெற்றி கிடைக்கும்.


ஆராய்ச்சி, உயர்கல்வி படிப்பவர்களுக்கு இந்த நேரம் சிறப்பானது. எந்த சாதனையையும் அடையலாம். தொழிலில் முன்னேற்றம், பெரிய மாற்றம் ஏற்பட வாய்ப்புகள் உள்ளன. மொத்தத்தில் இந்த நேரம் வெற்றியையும் மகிழ்ச்சியையும் தரும்.


மேலும் படிக்க | செல்வங்களை அள்ளித் தரும் வியாழக்கிழமை பரிகாரங்கள்


துலாம்
மே 14 வரையிலான காலம் வாழ்க்கையின் பல துறைகளில் நல்ல பலன்களைத் தரும். வீடு, வாகனம் வாங்கும் யோகம் பெறும் வாய்ப்பு ஏற்படும். வேலையில் வெற்றி உண்டாகும்.


குடும்பத்தினரின் ஆதரவையும் மகிழ்ச்சியையும் பெறுவீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பதவி உயர்வு கிடைக்கும். பயணம் செல்ல முடியும். சமயப் பணிகளில் ஆர்வம் கூடும்.


மீனம்
இந்த நேரம் மீன ராசிக்காரர்களுக்கு வெற்றியையும் மரியாதையையும் ஆறுதலையும் தரும். பணியிடத்தில் உங்கள் பணி பாராட்டப்படும், இது முன்னேற்றத்திற்கான புதிய வழிகளைத் திறக்கும். இடம் மாற்றம் ஏற்படலாம். வருமானம் அதிகரிக்கும் வாய்ப்புகள் அதிகம். சேமிப்பதில் வெற்றி கிடைக்கும்.


(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ஜீ மீடியா இவற்றை உறுதிப்படுத்தவில்லை.)


மேலும் படிக்க | கோப மிகுதியால் பணியிலும், வாழ்விலும் தோல்வியை சந்திக்கும் ராசிகள் இவைதான் 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR