சுபகிருது தமிழ் புத்தாண்டு யாருக்கு என்ன செய்தியை சொல்கிறது? மேஷத்திற்கு மோசமில்லை

தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துகள்... பிலவ ஆண்டு முடிவடைந்து இன்று சுபகிருது ஆண்டு மலர்ந்திருக்கிறது. சித்திரை நன்னாளின் முதல் நாள் பலன்கள் இவை...

Written by - Malathi Tamilselvan | Last Updated : Apr 14, 2022, 07:05 AM IST
சுபகிருது தமிழ் புத்தாண்டு யாருக்கு என்ன செய்தியை சொல்கிறது? மேஷத்திற்கு மோசமில்லை title=

இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துகள். இன்று சுபகிருது வருடம், சித்திரை மாதம் முதல் நாள் பிறந்திருக்கிறது.பிலவ ஆண்டுக்கு பிறகு வரும் இந்த சுபகிருந்து ஆண்டின் பொருள் ’அதிக நன்மைகள் நிறைந்தது’ என்பது ஆகும்

ஆங்கில வருடம் 14/04/2022 மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளுக்கான ராசி பலன்கள் இவை.  

மேஷம்
மேஷ ராசிக்காரர்களுக்கு சுப விரயங்கள் அதிகரிக்கும் நாள். வெளிநாடு செல்லும் வாய்ப்பு இருப்பதால் அதற்கான முன்னேற்பாடுகளை கவனிக்கும் நாளாக இருக்கும்.  திடீர் பண வரவு உண்டு.  

ரிஷபம்
சுபகிருது ஆண்டின் முதல் நாளான இன்று ரிஷப ராசிக்காரர்களின் வாழ்வில் மாற்றங்கள் ஏற்படுவதற்கான அறிகுறிகள் தென்படும். பணவரத்து உண்டு. ஆரோக்கியம் மேம்படும். கணவன் மனைவிக்கு இடையிலான பிரச்சனைகள் நீங்கி ஒற்றுமை அதிகரிக்கும்.

மிதுனம்

மிதுன ராசிக்காரர்களின் வாழ்வில் இருந்த பிஅச்சனைகள் இன்று முதல் மாறிவிரும். சுபகிருது தமிழ் புத்தாண்டு சுபங்களை கொண்டு வரும் ஆண்டாக மலர்கிறது. நிலுவையில் உள்ள பணம் வந்து சேரும். தொழில் மற்றும் பணியிடத்திலும் மரியாதையும் கெளரவமும் அதிகரிக்கும். மிதுன ராசிக்காரர்களுக்கு திருமண யோகம் கூடிவரும்.

கடகம்
சுபகிருது தமிழ் புத்தாண்டு மகிழ்ச்சியைக் கொடுக்கும் ஆண்டாக மலர்கிறது. குடும்பத்தில் நிம்மதி ஏற்படும். செலவுகளை எதிர்கொள்ளும் அளவு வரவு இருக்கும். அன்பை கொடுத்தால் அதற்கு நல்ல பலன் நிச்சயம் கிடைக்கும்.

மேலும் படிக்க | சனிப்பெயர்ச்சி: இந்த ராசிக்காரர்களுக்கு சனிப்பெயர்ச்சி வரப்பிரசாதமாக அமையும் 

சிம்மம்
சுபகிருது தமிழ் புத்தாண்டின் முதல் நாளான இன்று முதல் சிம்ம ராசிக்காரர்களின் வாழ்க்கையில் ஆக்கப்பூர்வமான மாற்றங்கள் ஏற்படும். குடும்பத்தில் நிம்மதி நிலவும், திடீர் அதிர்ஷ்டங்கள் மகிழ்ச்சியைக் கொடுக்கும். திருமண வாழ்க்கை மகிழ்ச்சிகரமானதாக இருக்கும்.

கன்னி
குடும்பப் பிரச்சனைகள் விரைவில் தீரும். திட்டமிட்டு வாழ்க்கையை நடத்துவது எப்போதுமே நல்லது. பணியிடத்தில் முன்னேற்றத்திற்கான வாய்ப்புகள் காத்திருக்கின்றன. குடும்பத்தில் நிம்மதி படிப்படியாக அதிகரிக்கும்.

துலாம்
இந்த நாள் நல்ல நாள் என்று சொல்லும் அளவுக்கு பல நல்ல வாய்ப்புகள் வரும். வீட்டில் சுபகாரியங்கள் நடப்பதற்கான அடித்தளம் அமைக்கும் நாள். தொழில் மற்றும் பணிரீதியில் வாழ்க்கை சிறக்கும். ஆரோக்கியத்தில் சற்று அதிக கவனம் செலுத்துங்கள். திருமண வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும்.

விருச்சிகம்
பொறுத்தவர் பூமி ஆள்வர் என்பதை நினைவில் கொண்டால் என்றும் நலமே என்பதை மறக்கவேண்டாம். முதலீடுகளில் கவனமாகவே இருக்கும். விட்டுக் கொடுத்தால் கெட்டுப் போக மாட்டோம் என்பதை புரிந்தால் வாழ்க்கையில் நிம்மதிக்கு பஞ்சம் இருக்காது.  

மேலும் படிக்க | சனிப்பெயர்ச்சி: இந்த ராசிக்காரர்களுக்கு சனிப்பெயர்ச்சி வரப்பிரசாதமாக அமையும் 

தனுசு
தனுசு ராசிக்கு சுபயோகமான நாள் இன்று. வீட்டில் நிம்மதி குடியேறும். உங்களை புரிந்துக் கொள்வதற்கான வாய்ப்புகள் அதிகரிக்கும். வாழ்க்கை வாழ்வதற்கே கவலைகள் மட்டுமே நிரந்திரம் இல்லை என்பதை உணரும் நாள் சித்திரை முதல் நாள்.

மகரம்
தமிழ் புத்தாண்டின் முதல் நாள் மகர ராசிக்காரர்களுக்கு சுறுசுறுப்பானதாக இருக்கும். கற்றுக் கொள்வதற்கு வயதும் சூழ்நிலையும் தடையே இல்லை என்ற எண்ணம் பூக்கும் நாள். குடும்பத்தினரிடம் இருந்த மனக்கசப்புகள் நீங்கி, நாம் அனைவரும் காலத்தின் கைதிகள் என்ற புரிதல் உண்டாகும். 

கும்பம்
அற்புதமான பலன்கள் கிடைக்கும் பேறு பெற்றவர்கள் கும்ப ராசியினர். குடும்பத்தில் எதிர்பாராத நல்ல விஷயங்கள் நடைபெறும். சுப செலவுகள் ஏற்பட வாய்ப்புள்ளது. தொழில், வியாபாரத்தில் நற்பலன்கள் கிடைக்கும். தம்பதிகளுக்கு இடையே ஒற்றுமை மேம்படும்

மீனம்
குடும்பத்தில் இணக்கம் அதிகரிக்கும். பிரச்சனைகள் என்பது நிரந்திரமானதல்ல, வரும் போய்விடும் என்பதை புரிந்துக் கொள்ளும் நாள் இது. பொறுமையாக இருந்தால் அனைத்தையும் சாதிக்கலாம். இறுதியில் மன நிம்மதியே அவசியம் என்ற புரிதல் உண்டாகும். திருமணாகதவர்களுக்கு திருமண பேச்சுவார்த்தை சுபமாக தொடங்கும்.

(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ஜீ மீடியா இவற்றை உறுதிப்படுத்தவில்லை.)

மேலும் படிக்க | கும்ப ராசியில் பிரவேசிக்கும் சனி பகவான்; நிம்மதி பெருமூச்சு விடும் இரு ராசிகள் 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News