தாஜ்மஹாலில் உள்ள ஷாஜஹான் மற்றும் மும்தாஜ் ஆகியோரின் அசல் கல்லறைகளை சுற்றுலாப் பயணிகள் இலவசமாக பார்க்கும் வாய்ப்பு மீண்டும் ஒருமுறை வந்துள்ளது. இந்த முறை தாஜ்மஹாலை மூன்று நாட்களுக்கு சுற்றுலா பயணிகள் இலவசமாக பார்த்து ரசிக்க முடியும். பிப்ரவரி 27, 28 மற்றும் மார்ச் 1 ஆகிய தேதிகளில் சுற்றுலாப் பயணிகள் நுழைவுக் கட்டணம் செலுத்த தேவையில்லை. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING


உர்ரஸ் நிகழ்வு கடைபிடிக்கப்படுவதால் இந்த அனுமதி வழங்கப்படுகிறது. இது குறித்து தாஜ்மஹாலில் நடைபெறும் நிகழ்சிக்கான பொறுப்பாளர் ராஜ்குமார் படேல் பேசும்போது, பிப்ரவரி 27, ஞாயிற்றுக்கிழமை ஷாஜகான் உர்ஸின் முதல் நாள். அப்போது, மதியம் 2 மணி முதல் மாலை வரை சுற்றுலாப் பயணிகள் இலவசமாக பார்க்கலாம். பிப்ரவரி 28, திங்கட்கிழமை, உர்ஸின் மரபுகள் மதியம் 2 மணிக்குப் பிறகு தொடங்கும். அதிலிருந்து மாலை வரை ஒருவர் இலவசமாக நுழையலாம். 


மேலும் படிக்க | தேச விடுதலைக்கான ஒட்டுமொத்த பெருமையும் காங்கிரஸ் கட்சிக்கு மட்டுமா?



மார்ச் 1 ஆம் தேதி உர்ஸின் கடைசி நாளான செவ்வாய்கிழமை, சூரிய உதயம் முதல் சூரிய அஸ்தமனம் வரை இலவசமாக சுற்றுலாப் பயணிகளுக்கு ஷாஜஹான் மற்றும் மும்தாஜின் அசல் கல்லறைகளை பார்க்க அனுமதி வழங்கப்படும். உர்ஸின் போது, கோவிட்-19 நெறிமுறையைப் பின்பற்ற வேண்டும். பெரிய டிரம்ஸ், டாஷ்கள், விளம்பரப் பொருட்கள் போன்றவற்றிற்கு அனுமதி இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் முக்கியமான விஷயம் என்னவென்றால், ஷாஜகான் மற்றும் மும்தாஜின் அசல் கல்லறைகளை அனைவரும் பார்க்கலாம். இதன் பிறகு சுற்றுலாப் பயணிகள் பார்க்க முடியாது.


மேலும் படிக்க | கிரெடிட் கார்டு பயன்படுத்துபவர்களுக்கு ரிசர்வ் வங்கி வெளியிட்ட முக்கிய அப்டேட்!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ