தேச விடுதலைக்கான ஒட்டுமொத்த பெருமையும் காங்கிரஸ் கட்சிக்கு மட்டுமா?

RN Ravi on Congress: சுதந்திர போராட்டத்தில் பங்கு பெற்றதற்கான பெருமை காங்கிரசுக்கு மட்டும் சொந்தமானது இல்லை என தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி கருத்து

Written by - Malathi Tamilselvan | Last Updated : Dec 13, 2022, 11:01 AM IST
  • காங்கிரஸ்காரர்கள் மட்டுமே விடுதலை பெற்றுத் தந்தார்களா?
  • இந்திய விடுதலை குறித்த சரித்திரப் பதிவுகள்
  • கேள்வி எழுப்பும் தமிழக ஆளுநர் ஆர்.என் ரவி
தேச விடுதலைக்கான ஒட்டுமொத்த பெருமையும் காங்கிரஸ் கட்சிக்கு மட்டுமா? title=

RN Ravi on Congress: சுதந்திர போராட்டத்தில் பங்கு பெற்றதற்கான பெருமை காங்கிரசுக்கு மட்டும் சொந்தமானது இல்லை என தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி சுட்டிக்காட்டியுள்ளார். பள்ளிகளில் மாணவர்களுக்கு சுதந்திரப் போராட்டம் தொடர்பான பாடங்களில், அது காங்கிரஸ் இயக்கத்துடன் மட்டுமே தொடர்புடையது என போதிக்கக் கூடாது என்று தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்தார். காந்தி, ஒரு சிறந்த தலைவர் என்பதில் சந்தேகமில்லை, ஆனால் அவரைத் தவிர ஏராளமான சுதந்திரப் போராட்ட வீரர்கள் களத்தில் இருந்தார்கள் என்று மகாத்மா காந்தி ஆட்சியின் தலைமைப் பொறுப்பில் இருந்ததால், தேசிய சுதந்திரப் போராட்டத்தில் அங்கம் வகிக்காதவர்கள் விளிம்பு நிலையிலோ, அடிக்குறிப்பிலோ, எங்கும் வீழ்ந்தனர் இருந்தனர்.

சுதந்திரப் போராட்டத்தை பள்ளிகளில் மாணவர்களுக்குக் கற்பிப்பது காங்கிரஸுடன் மட்டும் இருக்கக் கூடாது என்று தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி திருச்சியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் தெரிவித்தார். சுதந்திர போராட்டத்தில் தென்னிந்திய மொழிகளின் பங்களிப்பு குறித்து திருச்சி தேசிய கல்லூரியில் நடந்த கருத்தரங்கில் தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி  கலந்துக் கொண்டு உரையாற்றினார்.

மேலும் படிக்க | Zika வைரஸால் பீதியடைய வேண்டாம்! ஜிகா வைரஸ் அறிகுறிகள்

அவர், 'இந்த இயக்கத்தைப் பார்க்கும்போது, ​​அது இந்திய தேசிய காங்கிரஸுடன் மட்டும் நின்றுவிடக் கூடாது.  காங்கிரஸ் கட்சி, நாட்டின் விடுதலைக்காக பாடுபட்டது என்பதில் மாற்றுக்கருத்து எதுவும் இல்லை. மகாத்மா என்று பெயர் பெற்ற அண்ணல் காந்தி, ஒரு சிறந்த தலைவர், அதில் எந்த சந்தேகமும் இல்லை, ஆனால் அவரைத் தவிர இன்னும் பலர் நாட்டு விடுதலைக்காக பாடுபட்டனர்.

பி.ஆர்.அம்பேத்கர், நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ், வீர பாண்டிய கட்டபொம்மன், வேலுநாச்சியார், சிதம்பரம் பிள்ளை, மருது சகோதரர்கள், புலிதேவன் போன்ற பலர், அடிமைத்தனத்தில் இருந்து நாட்டை விடுவிக்க தங்கள் வாழ்நாளையே அர்ப்பணித்தார்கள் என்ற விஷயத்தை அழுத்திவிடக்கூடாது என தமிழக ஆளுநர் ஆர்.என் ரவி கூறினார்.

மகாத்மா காந்தி மிகப் பெரிய தலைவர், அவருக்கு முக்கியம் கொடுக்கும் அதே நேரத்தில், தேசிய சுதந்திர இயக்கத்தின் ஒரு பகுதியாக இருந்த பிறருடைய தியாகங்கள் குறைந்தது  இல்லை, பலரது போராட்டங்களும், தியாகங்களும் எங்குமே பதிவு செய்யப்படவே இல்லை என்று ஆளுநர் தெரிவித்தார்.

மேலும் படிக்க | அறிவிக்கப்படாத துணை முதலமைச்சர் ஆகிறாரா உதயநிதி ஸ்டாலின்?

பள்ளி மற்றும் கல்லூரிகளில் கற்பிக்கப்படும் சுதந்திர போராட்டத்தின் பதிவு பெரும்பாலும் இந்திய தேசிய காங்கிரஸின் வரலாற்றை சுற்றியே உள்ளது. மகாத்மா காந்தி சுதந்திரப்ப் போராட்டத்தின் சிற்பியாக இருந்தார் என்பதால், சுதந்திரத்திற்காக பாடுபட்ட முக்கியத் தலைவர்களின் தகவல்களை மறைத்துவிடக்கூடாது என்று தனது  கருத்தை வலுவாக பதிவு செய்தார். 

'மகாத்மா காந்தி சுதந்திரப் போராட்டத்தை வழிநடத்தினார், ஆனால் சுபாஷ் சந்திரபோஸ், பகத்சிங், சந்திரசேகர் ஆசாத், உத்தம் சிங், ராஜகுரு போன்ற அடிமைத்தனத்தின் வலியைத் தாங்க முடியாதவர்களை என்ன செய்வது? தமிழ்நாட்டில் இருந்தும் எத்தனை பேர் சுதந்திரத்தாக தங்கள் உயிரையே பயணம் வைத்தார்கள் என்று கேள்வி எழுப்பிய தமிழக ஆளுநர், அடிமைத்தனத்தின் வலியைத் தாங்க முடியாமல் அனைத்தையும் தியாகம் செய்தவர்கள் புரட்சியாளர் என்று அழைக்கப்பட்டனர், இயக்கத்தின் தலைவர் என்று அழைக்கப்படவில்லை என்று தெரிவித்தார்.

ஆளுநரின் இந்தக் கருத்துகள் தேசிய அளவில் பேசுபொருளாகியுள்ளது. 

மேலும் படிக்க | Virgin of Guadalupe: கத்தோலிக்கர்களின் புனித தளத்தில் குவிந்த கிறிஸ்தவர்கள்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ 

Trending News