சென்னை: ரயில் பயணிகளுக்கு ஒரு நல்ல செய்தி! COVID-19 நிலைமை காரணமாக ரத்து செய்யப்பட்ட ரயில்களின் சேவைகள் இன்னும் ஒரு சில நாட்களில், வழக்கம் போல தொடங்கிவிடும். 15 முன்பதிவு செய்யப்படாத சிறப்பு ரயில்களை   இந்திய ரயில்வே மீண்டும் தொடங்கவுள்ளது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ரத்து செய்யப்பட்ட பல சிறப்பு ரயில்களை அடுத்த வாரம் முதல் இயக்கவிருப்பதாக தெற்கு ரயில்வே வெள்ளிக்கிழமையன்று அறிவித்தது.


சென்னை எக்மோர்-தஞ்சாவூர், டாக்டர் எம்.ஜி.ஆர் சென்னை செண்ட்ரல் -திருவனந்தபுரம், கோயம்புத்தூர்-நாகர்கோயில் மற்றும் புனலூர்-மதுரை போன்ற தினசரி சிறப்பு ரயில்கள் ஜூன் 20 மற்றும் 21 முதல் இயங்கத் தொடங்கும் என்று தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது. மேலும், சில்சார்-கோயம்புத்தூர் துறையில் வாராந்திர சிறப்பு ரயில்கள் ஜூன் 22 முதல் இயக்கப்படும். அதேபோல, ரத்து செய்யப்பட்டிருந்த 10 எக்ஸ்பிரஸ் ரயில்கள் நாளை முதல் இயக்கப்படும் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.


கொரோனா இரண்டாம் அலையில் நோய்த்தொற்று பரவலின் வேகம் உச்சத்தை அடைந்தபோது, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நிறுத்தப்பட்ட எக்ஸ்பிரஸ் ரயில் சேவைகளை மீண்டும் நாளை முதல் இயக்க தெற்கு ரயில்வே முடிவு செய்துள்ளது.


Read Also | ஜூன் 30 க்குப் பிறகு, உங்கள் பான் அட்டை 'பயனற்றது'


நாளை முதல் இயங்கும் ரயில்கள்: சென்னை எழும்பூர்-தஞ்சாவூர் (வண்டி எண்: 06865)


சென்னை எம்.ஜி.ஆர் சென்ட்ரல்-திருவனந்தபுரம் (02695)


எம்.ஜி.ஆர் சென்ட்ரல்-ஆலப்புழா (02639)


எம்.ஜி.ஆர் சென்ட்ரல்-மேட்டுப்பாளையம் (02671)


எழும்பூர்-கொல்லம் (06101)


எழும்பூர்-ராமேஸ்வரம் (06851)


கோவை-நாகர்கோவில் (02668)


திருவனந்தபுரம்-மதுரை (0634)


மதுரை-புனலூர் (06729)


திருச்சி-எழும்பூர் (02654)


இந்த ரயில்கள் அனைத்தும் நாளை (ஜூன் 20, 2021) முதல் மீண்டும் இயக்கப்படுகிறது. சில்சார்-கோயம்புத்தூர் வழித்தடத்தில்  ஜூன் 22 முதல் வாராந்திர சிறப்பு ரயில்கள் இயக்கப்படும்


Read Also | Effect of Third Wave: மூன்றாவது அலை; குழந்தைகளை எவ்வாறு பாதிக்கும்


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR