பெண்களுக்கு பம்பர் செய்தி: மோடி அரசின் அசத்தல் வருமானம் அளிக்கும் சேமிப்பு திட்டம்
Mahila Samman Saving Certificate: ஏகப்பட்ட நன்மைகள் கொண்ட பெண்களுக்கான மகிளா சம்மான் சேமிப்பு பத்திரம் பற்றிய விவரங்களை இந்த பதிவில் காணலாம்.
மகிளா சம்மான் சேமிப்பு பத்திரம்: மகிளா சம்மான் சேமிப்பு பத்திரம், 2023க்கான வர்த்தமானி அறிவிப்பை நிதி அமைச்சகம் வெளியிட்டுள்ளது. இது உடனடியாக அமலுக்கு வரும் வகையில் 1.59 லட்சம் தபால் நிலையங்களில் கிடைக்கச் செய்யப்பட்டுள்ளது. இந்த திட்டம் 2023-24 பட்ஜெட்டில் 'ஆசாதி கா அம்ரித் மஹோத்சவ்' நிகழ்வை ஒட்டி மத்திய நிதியமைச்சரால் அறிவிக்கப்பட்டது. மேலும் இது சிறுமியர் உட்பட பெண்களின் நிதி உள்ளடக்கம் மற்றும் மேம்பாட்டிற்கான ஒரு குறிப்பிடத்தக்க முன்னேற்றமாகும்.
இந்த இரண்டு ஆண்டு கால திட்டமானது, நெகிழ்வான முதலீட்டு விருப்பங்களோடும், ரூ. இரண்டு லட்சம் வரையிலான முதலீட்டு வரம்போடும் 7.5 சதவீத கவர்ச்சிகரமான மற்றும் நிலையான வட்டியை வழங்குகிறது. இந்தத் திட்டம் மார்ச் 31, 2025 வரை இரண்டு ஆண்டுகளுக்கு செல்லுபடியாகும்.
தேசிய சேமிப்பு திட்டம், 2019, தேசிய சேமிப்பு (மாதாந்திர வருமானக் கணக்கு) (திருத்தம்) திட்டம், 2023 மூலம் திருத்தப்பட்டு, ஏப்ரல் 1, 2023 முதல் ஒரு கணக்கிற்கான அதிகபட்ச முதலீட்டு வரம்பு அதிகரித்துள்ளது. நான்கு லட்சத்து ஐம்பதாயிரம் ரூபாய் ஒன்பது லட்சமாகவும், கூட்டுக் கணக்கிற்கான தொகை ஒன்பது லட்சத்தில் இருந்து 15 லட்சமாக உயர்ந்துள்ளது.
மேலும் படிக்க | 8th Pay Commission: ஊழியர்களுக்கு பம்பர் செய்தி, விரைவில் 44% ஊதிய உயர்வு
அதேபோல், மூத்த குடிமக்கள் சேமிப்பு திட்டம், 2019, மூத்த குடிமக்கள் சேமிப்பு (திருத்தம்) திட்டம், 2023 மூலம் திருத்தப்பட்டு, அதிகபட்ச முதலீட்டு வரம்பு ரூ.15 லட்சத்தில் இருந்து ரூ.30 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது. சேமிப்பு வைப்புகளைத் தவிர அனைத்து சிறு சேமிப்புத் திட்டங்களுக்கான வட்டி விகிதங்களும் ஏப்ரல் 1, 2023 முதல் திருத்தப்பட்டுள்ளன.
இந்த நடவடிக்கைகள் தபால் நிலையங்களின் சிறுசேமிப்பு வாடிக்கையாளர்கள் மற்றும் அஞ்சல் அலுவலகங்கள் மூலம் குறிப்பாக கிராமப்புறங்களில் மற்றும் பெண்கள், விவசாயிகள், கைவினைஞர்கள், மூத்த குடிமக்கள், தொழிற்சாலை ஊழியர்கள், அரசு ஊழியர்கள், சிறு வணிகர்கள் மற்றும் சமூகத்தின் பிற பிரிவினரிடையே அதிக முதலீடுகளை ஏற்படுத்தும்.
இந்த திட்டங்களுக்கான ஈர்ப்பு அதிகரிக்கும். இந்த சிறுசேமிப்புத் திட்டங்களில் முதலீடு செய்பவர்கள் சிறந்த லாபத்தைப் பெறுவார்கள். மேலும் விவரங்களுக்கு www.indiapost.gov.in என்ற இணையதளத்தைப் பார்க்கவும்.
எம்எஸ்எஸ்சி எனப்படும் மகிளா சம்மான் சேமிப்பு பத்திரம் என்றால் என்ன?
மகிளா சம்மான் சேமிப்பு பத்திரம் பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கான பிரத்யேக சிறுசேமிப்பு திட்டமாகும். இது பெண்களுக்கான நிலையான வருமானத்தை உருவாக்க துவக்கப்பட்ட திட்டமாக உள்ளது. பிற சிறுசேமிப்புத் திட்டங்களான பொது வருங்கால வைப்பு நிதி (பிபிஎஃப்), தேசிய சேமிப்புச் சான்றிதழ் (என்எஸ்சி), மூத்த குடிமக்கள் சேமிப்புத் திட்டம் (எஸ்சிஎஸ்எஸ்) போல இதுவும் நல்ல வட்டியில் சீரான வருமானத்தை அளிக்கும் திட்டமாகும். குறிப்பாக பெண்களுக்கு பாதுகாப்பான மற்றும் நம்பகமான முதலீட்டு வாய்ப்பை ஏற்படுத்திக்கொடுப்பதை இது நோக்கமாக கொண்டுள்ளது.
மேலும் படிக்க | ரேஷன் விதிகளில் அரசு செய்த மிக்கப்பெரிய மாற்றம், இனி இரட்டிப்பு பலன் கிடைக்கும்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ