ரயில் நிலையத்தில் இனி விமான டிக்கெட் புக் செய்யலாம், PAN, Aadhaar செய்யலாம்
Indian Railways: ரயில் நிலையங்களுக்கு வரும் மற்றும் செல்லும் பயணிகள் மற்ற முக்கிய வசதிகளையும் பெற முடியும். பயணிகளின் வசதிகளில் ரயில்வே நிர்வாகம் தொடர்ந்து கவனம் செலுத்தி வருகிறது.
புதிய வசதி: ரயில் பயணம் என்பது நமது வாழ்க்கையில் மிகவும் சுவாரசியமான விஷயமாகும். ரயில் நிலையங்களும் அப்படித்தான். ரயிலுக்காக காத்திருக்கவும், ரயில் டிக்கெட் புக் செய்யவும் நாம் பொதுவாக ரயில் நிலையத்துக்கு செல்வோம்.
எனினும், இப்போது ரயில் நிலையங்களில் இன்னும் பல முக்கிய பணிகளையும் செய்யலாம். நாட்டின் ரயில் நிலையங்களில் இனி விமான டிக்கெட்டுகளையும் முன்பதிவு செய்யலாம். இதுதவிர பான், ஆதார் அட்டை தயாரிக்கும் பணியும் ஸ்டேஷன் வளாகத்திலேயே நடக்கும். இதுமட்டுமின்றி, இங்கிருந்து வருமான வரிக் கணக்கையும் தாக்கல் செய்யலாம்.
பயணிகளின் வசதிகளில் கவனம் செலுத்தப்படுகிறது
இப்போது நாட்டின் தேர்ந்தெடுக்கப்பட்ட ரயில் நிலையங்களுக்குச் செல்லும் பயணிகள் மற்ற முக்கிய வசதிகளையும் அங்கு பெற முடியும். பயணிகளின் வசதிகளில் ரயில்வே நிர்வாகம் தொடர்ந்து கவனம் செலுத்தி வருகிறது. இந்த வரிசையில், ரயில்வே நிறுவனமான RailTel, இப்போது ரயில் நிலையங்களில் Railwire Saathi கியோஸ்க்களை நிறுவ திட்டமிட்டுள்ளது.
மேலும் படிக்க | ரயிலில் தூங்குவதற்கான விதிகளில் மாற்றம்..! அவசியம் தெரிந்து கொள்ளுங்கள்
விமான டிக்கெட்டுகளையும் பதிவு செய்யலாம்
ரெயில்டெல் மூலம் திறக்கும் கியோஸ்க் மூலம், பயணிகள் ரயில் டிக்கெட்டுகளையும், விமான டிக்கெட்டுகளையும் முன்பதிவு செய்ய முடியும். ஜான்சியின் வீராங்கனை லக்ஷ்மிபாய் ஸ்டேஷனில் இந்த வசதியை தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது. வரும் நாட்களில் ரயில் நிலையங்களில் உள்ள கியோஸ்க்களில் கூடுதல் வசதிகளும் தொடங்கப்படும். மேலும் இந்த வசதிகள் மற்ற ரயில் நிலையங்களிலும் கொண்டு வரப்படும்.
இந்த வசதி 200 நிலையங்களில் தொடங்கும்
மேற்கூறிய வசதிகளை வழங்கும் கியோஸ்க்கள் ஏற்கனவே வாரணாசி மற்றும் பிரயாக்ராஜ் ரயில் நிலையங்களில் தொடங்கப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. வடகிழக்கு ரயில்வேயின் 200 நிலையங்களில் இந்த வசதி விரைவில் தொடங்கப்பட உள்ளது. பயணிகள் வசதியை ரயில்வே நிர்வாகம் தொடர்ந்து ஊக்குவித்து வருவதாக ரயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர்.
மேலும் படிக்க | Restaurant on wheels: ரயில் பெட்டியை உணவமாக மாற்றி அசத்தும் நாக்பூர் ரயில்வே!
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR