Selfie மோகத்தில் சிக்காதவர்கள் எவரும் இல்லை, ஆனால் விலங்குகளும் Selfie-க்கு அடிமையாகி இருப்பது விந்தையிலும் விந்தை!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மத்திய ஆப்பிரிக்காவின் காங்கோ-வில் இருக்கும் தேசிய வனவிலங்கு பூங்காவில் இருக்கும் கொரிலா-க்கள் வனவிலங்கு காப்பாளர்களுடன் புகைப்படம் எடுத்துக்கொண்ட சம்பவம் அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. இந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாக பரவி வருகின்றது.


சுதந்திர காங்கோவின் விருங்கா தேசிய பூங்காவில் இடம்பெற்றிருக்கும் இந்த இரண்டு கொரிலாக்கள் நடாக்சி மற்றும் மட்டாபிஷி தான் இந்த புகைப்படங்களில் இடம்பெற்றிருக்கும் பிரபலங்கள். இவர்களின் புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வெளியாகி ஒரே நாளில் உலக புகழ் பெற்றள்ளன.



விருங்கா தேசிய பூங்காவனது கிராம பகுதியை ஒட்டியுள்ள வன விலங்கு பூங்காவாகும், இந்த பூங்காவினை சுமார் 600 ரேஞ்சர்கள் பாதுகாத்து வருகின்றனர். கிராம மக்களை தவிர புதிய நபர்கள் இந்த வனப்பகுதியில் நுழைய கட்டுப்பாடுகள் பல விதிக்கப்பட்டுள்ளது. 



மனிதர்கள் நடமாட்டம் இல்லாத இந்த வனப்பகுதியில் வசிக்கும் விலங்குகளுக்கு வன விலங்கு பாதுகாவலர்கள் மட்டுமே நண்பர்களாகும். இதன் காரணமாகவே நடாக்சி மற்றும் மட்டாபிஷி தனது நண்பருடன் இவ்வளவு அழகாக செல்பிக்கு போஸ் கொடுத்துள்ளது.