8ஆம் வகுப்பு தேர்ச்சி போதும் - அரசு வேலை ரெடி!
எட்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் அரசு வேலை செய்ய வாய்ப்பு கிடைத்துள்ளது. விருப்பமுள்ளவர்கள் விண்ணப்பித்து பயனடையலாம்.
மதுரை மாவட்டம், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை அலகு, அரசுத்தலைப்பின் கீழ் பழங்குடியினர் பிரிவில் காலியாக உள்ள ஈப்பு (ஜீப்) ஓட்டுநர் பணியிடத்தை நிரப்ப புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு தற்போது வெளியாகி உள்ளது. இந்த அரசு பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் விண்ணப்பித்து பயனடையலாம்.
ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை காலிப்பணியிடங்கள்:
ஈப்பு ஓட்டுநர் பதவிக்கு என ஒரு பணியிடம் காலியாக உள்ளது.
ஓட்டுநர் கல்வி தகுதி:
அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனத்தில் இருந்து 8ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மோட்டார் வாகனச் சட்டம் 1988 (மத்திய சட்டம் 59/1988) -ன் படி தமிழக அரசின் தகுந்த அதிகாரியால் வழங்கப்பட்ட தகுதியான ஒட்டுநர் உரிமம் பெற்றிருக்க வேண்டும். ஐந்தாண்டுகளுக்கு குறைவில்லாமல் மோட்டார் வாகனங்களை ஒட்டியமைக்கான நடைமுறை அனுபவம் கொண்டவராக இருத்தல் வேண்டும்.
வயது வரம்பு:
01.07.2022 அன்றுள்ளவாறு, விண்ணப்பிக்க விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் வயதானது குறைந்தபட்சம் 18 முதல் அதிகபட்சம் 37 வயதுக்குள் இருக்க வேண்டும்.
ஊரக வளர்ச்சி பணிக்கான சம்பளம்:
ரூ.19500 ரூ.62000வரை ஊதியமாக வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
விண்ணப்பிக்கும் முறை:
மதுரை மாவட்டத்தில் வசிப்பவராக இருக்க வேண்டும். விண்ணப்பதாரர்கள் தங்களது கல்வித் தகுதி, இருப்பிடம் (ரேசன் கார்டு மற்றும் ஆதார் காட்டு), சாதிச்சான்று முன்னுரிமை சான்று இதர சான்றிதழ் நகலினை சான்றொப்பம் பெற்று விண்ணப்பத்துடன் இணைத்து அனுப்ப வேண்டும். எனவே ஆர்வமுள்ளவர்கள் 15.11.2022 க்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
விண்ணப்பம் அனுப்ப வேண்டிய முகவரி :
மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர்(வளர்ச்சி), மாவட்ட ஆட்சியர் அலுவலகம்(வளர்ச்சி பிரிவு), மதுரை -20 என்ற முகவரிக்கு அனுப்ப வேண்டும்.
மேலும் படிக்க | இந்திய வங்கிகள் சங்கத்தில் வேலை - டிகிரி முடித்தவர்களுக்கு வாய்ப்பு
மேலும் படிக்க | EPFO News: இனி இவர்களுக்கு மாதந்தோறும் 3 ஆயிரம் ரூபாய் ஓய்வூதியம் கிடைக்கும்
மேலும் படிக்க | இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் வேலை வாய்ப்பு - முழு விவரம்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ