ஆன்லைன் ஷாப்பிங்கில் குறைந்த விலையில் பச்சை நிற ஐபோன் 13!
அமேசான் மற்றும் ப்ளிப்கார்ட் தளத்தில் ஐபோன் 13 பச்சை நிறத்தில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
வாடிக்கையாளர்களை கவரும் வகையில் பச்சை நிறத்தில் ஐபோன் 13 அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த பச்சை நிற ஐபோன் 13 ஆனது ஐபோன் 13, ஐபோன் 13 ப்ரோ, ஐபோன் 13 ப்ரோ மேக்ஸ், ஐபோன் 13 மினி போன்ற பல்வேறு மாறுபாடுகளில் கிடைக்கிறது. தற்போது அமேசான் மற்றும் ப்ளிப்கார்ட்டில் பச்சை நிற ஐபோன் 13 க்கான முன்பதிவு தொடங்கியுள்ளது. ஐபோன் 13 ப்ரோ மற்றும் ஐபோன் 13 ப்ரோ மேக்ஸ் ஆனது ஆல்பயின் பச்சை நிறத்தில் சியாரா ப்ளூ, கிராபைட், கோல்ட், சில்வர் போன்ற நிறங்களில் கிடைக்கிறது, மேலும் இவை ரூ.1,19,900லிருந்து தொடங்கி ரூ.1,29,900 வரை விற்கப்படுகிறது.
மேலும் படிக்க | Amazon Fab Phones Fest: ரூ. 1,649க்கு Xiaomi 5G ஸ்மார்ட்போனை வாங்கலாம்
ஐபோன் 13 மற்றும் ஐபோன் 13 மினி ஆனது பச்சை நிறத்தில் சிவப்பு, 6 ஸ்டார்லைட், மிட்நைட், ப்ளூ மற்றும் பிங்க் நிறத்தில் கிடைக்கிறது, இவை முறையே ரூ.79900 முதல் ரூ.69900க்கு கிடைக்கிறது. பச்சை நிற ஐபோன் 13க்கான முன்பதிவு மார்ச்-11ம் தேதியிலிருந்து தொடங்கியது. ப்ளிப்கார்ட்டில் ஐபோன் 13 ஆனது 128ஜிபி வேரியண்ட்டுடன் 6% தள்ளுபடியில் ரூ.74,900க்கு கிடைக்கிறது. எக்ஸ்சேஜ் சலுகை செய்துகொள்வதன் மூலம் மேலும் இதன் விலையை குறைக்கலாம், எக்ஸ்சேஞ் செய்வதன் மூலம் ரூ.13000 வரை தள்ளுபடி பெறலாம். எஸ்பிஐ க்ரெடிட் கார்டு பயனாளர்களுக்கு 10% தள்ளுபடியும், ஆக்சிஸ் வங்கி க்ரெடிட் கார்டுகளுக்கு 5% அலிமிடெட் கேஷ்பேக் ஆஃபர் வழங்கப்படுகிறது.
ஐபோன் 13ப்ரோ ஆல்பயின் பச்சை நிறமானது 128 ஜிபி ஸ்டோரேஜூடன் ரூ.1,19,900க்கு கிடைக்கிறது, எக்ஸ்சேஞ் சலுகை மூலம் ரூ.13,850 வரை தள்ளுபடி பெறலாம். எஸ்பிஐ க்ரெடிட் கார்டுகளை பயன்படுத்துவோருக்கு உடனடி தள்ளுபடியாக ரூ.5000 வரை பெறலாம், அதேபோல ஐசிஐசிஐ க்ரெடிட் கார்டு பயனாளர்களுக்கும் ரூ.5000 வரை தள்ளுபடி கிடைக்கும். அமேசான் பே மூலம் ஐசிஐசிஐ கார்டு பயனாளர்களுக்கு ரூ.1403 வரை தள்ளுபடி கிடைக்கும். ஹெச்டிஎப்சி வங்கி மனிபேக் +க்ரெடிட் கார்டுகளுக்கு 10X கேஷ்பாயின்டுகள் வழங்கப்படுகிறது. கோடக் வங்கி பயனாளர்களுக்கு ரூ.5000 வரை தள்ளுபடியும், ஹெச்டிஎப்சி வங்கி மில்லெனியா க்ரெடிட் கார்டு பயனாளர்களுக்கு 5% கேஷ்பேக் ஆஃபர் கிடைக்கும்.
ஐபோன் 13 சீரிஸ் ஆனது செராமிக் ஷீல்டுடன் நேர்த்தியாக வடிவமைக்கப்பட்டு இருக்கிறது. ஏ15 பயோனிக் சிப், 5ஜி நெட்ஒர்க், சிறந்த சார்ஜிங் வசதி கொண்ட பேட்டரியையும் கொண்டுள்ளது. ஐபோன் 13 மற்றும் ஐபோன் 13 மினி ஆனது பிரைட் சூப்பர் ரெட்டினா எக்ஸ்டிஆர் டிஸ்பிலேவை கொண்டுள்ளது. ஐபோன் 13 ப்ரோ மற்றும் ஐபோன் 13 ப்ரோ மேக்ஸ் ஆனது வைப்ரன்ட் சூப்பர் ரெட்டினா எக்ஸ்டிஆர் டிஸ்பிளேவை கொண்டுள்ளது.
மேலும் படிக்க | மேலும் படிக்க | 3ஜி, 4ஜிக்கு டாடா, இந்தியா விரைவில் 6G அறிமுகம்
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR