Aadhaar Linking with IRCTC:இந்திய ரயில்வே கேட்டரிங் மற்றும் சுற்றுலா கார்ப்பரேஷனில் (IRCTC) டிக்கெட் முன்பதிவு செய்பவர்களுக்கு முக்கியமான செய்தி உள்ளது. இப்போது உங்கள் ஆதார் அட்டையை IRCTC (Aadhaar Card Link With IRCTC) உடன் இணைப்பதன் மூலம் ஒரு மாதத்தில் 12 டிக்கெட்டுகளை முன்பதிவு செய்யலாம்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இப்போது டிக்கெட் முன்பதிவு விதிகள் மாறிவிட்டன


இதுவரை ஐ.ஆர்.சி.டி.சி (IRCTC) கணக்கிலிருந்து ஒரு மாதத்தில் அதிகபட்சம் 6 ஆன்லைன் டிக்கெட்டுகளை மட்டுமே முன்பதிவு செய்ய முடியும். ஆனால் இப்போது உங்கள் IRCTC கணக்கை ஆதாருடன் இணைப்பதன் மூலம் 6 க்கு பதிலாக ஒரு மாதத்தில் 12 டிக்கெட்டுகளை முன்பதிவு செய்யலாம். 


ALSO READ: IRCTC: ஆன்லைன் டிக்கெட் புக்கிங் விதிகளில் முக்கிய மாற்றம்


IRCTC கணக்குடன் ஆதாரை (Aadhaar) இணைக்கும் செயல்முறை மிகவும் எளிதானது என்பது குறிப்பிடத்தக்கது. 


ஆதாருடன் IRCTC கணக்கை இணைப்பது எப்படி:


1. இதை இணைக்க, முதலில் IRCTC-யின் அதிகாரப்பூர்வ மின்-டிக்கெட் பதிவு செய்யும் வலைத்தளமான irctc.co.in-க்குச் செல்லவும்.


2. இப்போது பயனர் ஐடி மற்றும் கடவுச்சொல்லை உள்ளிட்டு லாக் இன் செய்யவும். 


3. இப்போது முகப்பு பக்கத்தில் தோன்றும் 'My Account section'-க்குச் சென்று,' Aadhaar KYC'-யில் கிளிக் செய்யவும். 


4. இதற்குப் பிறகு, அடுத்த பக்கத்தில் உங்கள் ஆதார் எண்ணை உள்ளிட்டு 'Send OTP' என்பதைக் கிளிக் செய்யவும்.


5. இப்போது உங்கள் ஆதார் அட்டையில் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணில் OTP வரும். இந்த OTP ஐ உள்ளிட்டு வெரிஃபிகேஷன் செய்யவும். 


6. ஆதார் தொடர்பான தகவல்களைப் பார்த்த பிறகு, கீழே எழுதப்பட்ட 'Verify' என்பதைக் கிளிக் செய்யவும்.


7. இதன் பின்னர் KYC விவரங்கள் வெற்றிகரமாக புதுப்பிக்கப்பட்டுள்ளதாக உங்கள் மொபைலில் ஒரு செய்தி வரும்.


ALSO READ: ரயில் நிலைய பெயர்கள் மஞ்சள் நிற பின்னணியில் கருப்பு எழுத்தில் எழுதப்படுவதன் காரணம்


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR