ரயில் நிலைய பெயர்கள் மஞ்சள் நிற பின்னணியில் கருப்பு எழுத்தில் எழுதப்படுவதன் காரணம்

ரயிலில் பயணிக்காதவர் என யாரும் இருக்க முடியாது. ரயில் பயணங்கள், நமது வாழ்வில் பல மகிழ்ச்சிகரமான அனுபவங்களையும், நினைவுகளையும் கொடுத்துள்ளது என்றால் மிகையில்லை. 

Written by - ZEE TAMIL NEWS | Edited by - Vidya Gopalakrishnan | Last Updated : Jul 23, 2021, 12:45 PM IST
  • நம்மில் ரயிலில் பயணிக்காதவர் என யாரும் இருக்க முடியாது.
  • ரயில் பயணங்கள், நமது வாழ்வில் பல மகிழ்ச்சிகரமான அனுபவங்களையும், நினைவுகளையும் கொடுத்துள்ளது என்றால் மிகையில்லை.
ரயில் நிலைய பெயர்கள் மஞ்சள் நிற பின்னணியில் கருப்பு எழுத்தில் எழுதப்படுவதன் காரணம் title=

ரயிலில் பயணிக்காதவர் என யாரும் இருக்க முடியாது. ரயில் பயணங்கள், நமது வாழ்வில் பல மகிழ்ச்சிகரமான அனுபவங்களையும், நினைவுகளையும் கொடுத்துள்ளது என்றால் மிகையில்லை. 

நீங்கள் ரயில் நிலையத்தில் நடந்து செல்லும்போது, அல்லது ​​சில சமயங்களில் ரயிலுக்காக காத்திருக்கும் போது, பொழுது போவதற்காக சுற்றிலும் என்ன நடக்கிறது என்பதை கவனித்திருக்க கூடும். அபோது உங்கள் கண்ணில் நிச்சயம் ரயில் நிலையத்தில் (Railways) வைக்கப்பட்டிருக்கும் போர்டுகள்,  ரயிலின் மீது  எழுதப்பட்டுள்ள ரயில் நிலையத்தின் பெயர்கள் ஏன் மஞ்சள் பின்னணியில், கருத்து எழுத்துக்களில் எழுதப்பட்டுள்ளது என நீங்கள் யோசித்தது உண்டா? அது குறித்த சுவாரஸ்யமான் தகவலை நாங்கள் உங்களுடன் பகிர்ந்து கொள்ளப் போகிறோம். 

ALSO READ | IRCTC வழங்கும் 'Alert' சேவை; இனி கன்பர்ம் டிக்கெட் பெறுவது மிக எளிது..!!!

ரயில்வே கிராசிங் அல்லது ரயில் நிலையம் என எல்லா இடங்களிலும் மஞ்சள் நிறத்தைப் பார்த்திருக்க வேண்டும். குறிப்பாக ரயில் நிலையத்தின் பலகைகளில், நிலையத்தின் பெயர் எழுதப்பட்டிருக்கும், இதில் பெரும்பாலும் மஞ்சள் மற்றும் கருப்பு வண்ணங்களின் கலவையாக இருக்கும். இதன் பின்னணியில்  ஒரு காரணம் உள்ளது.  மஞ்சள் தவிர வேறு எந்த நிறத்தையும் பயன்படுத்துவதில்லை. 

மஞ்சள் நிறத்தை பயன்படுத்துவதற்கான உண்மையான காரணம் என்ன என்பதை அறிந்து கொள்ளுங்கள்
ரயில் நிலையத்தின் பெயர் மஞ்சள் பலகையில் (Yellow Board) எழுதப்பட்டதற்கு மிகப் முக்கிய காரணம், மஞ்சள் நிறம் மிகவும் பிரகாசமாக நிறமாக இருக்கிறது, இது தூரத்திலிருந்து ரயில் ஓட்டுநருக்கு அதாவது லோகோ பைலட்டுக்கு நன்றாக தெரியும் நிறமாகும். இது தவிர, மஞ்சள் நிறமும் கவனம் என்பதை குறிக்கிறது. ரயில் நிலையத்தில் பலகை மஞ்சள் நிறத்தின் பின்னணியிப் கருப்பு நிறத்தில் வரையப்பட்டு இருப்பதற்கான காரணம் இதுதான்.

ALSO READ | IRCTC: பத்ரிநாத், ரிஷ்கேஷ் உள்ளிட்ட சார்தாம் யாத்திரை பேகேஜ்; முழு விபரம் உள்ளே..!!

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News