IRCTC: பத்ரிநாத், ரிஷ்கேஷ் உள்ளிட்ட சார்தாம் யாத்திரை பேகேஜ்; முழு விபரம் உள்ளே..!!

பத்ரி, ரிஷிகேஷ் உள்ளிட்ட சார் தாம் யாத்திரை மேற்கொள்ள  COVID-19 தடுப்பூசி (குறைந்தது ஒரு தடுப்பூசி டோஸ்) போட்டிருக்க வேண்டும் 18 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட வயதுடைய பயணிகளுக்கு மட்டுமே அனுமதி.

Written by - ZEE TAMIL NEWS | Edited by - Vidya Gopalakrishnan | Last Updated : Jul 22, 2021, 05:40 PM IST
  • பத்ரி, ரிஷிகேஷ் உள்ளிட்ட சார் தாம் யாத்திரை மேற்கொள்ள COVID-19 தடுப்பூசி (குறைந்தது ஒரு தடுப்பூசி டோஸ்) போட்டிருக்க வேண்டும்.
  • சுற்றுப்பயணம் 17 அக்டோபர் 2021 அன்று தொடங்கும்
  • 18 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட வயதுடைய பயணிகளுக்கு மட்டுமே அனுமதி
IRCTC: பத்ரிநாத், ரிஷ்கேஷ் உள்ளிட்ட சார்தாம் யாத்திரை பேகேஜ்; முழு விபரம் உள்ளே..!! title=

புதுடெல்லி: பக்ரிநாத், கேதார்நாத் உள்ளிட்ட சார் தாம் யாத்திரை செல்ல விரும்பும் பக்தர்களுக்கு ஒரு நற் செய்தி! ஐ.ஆர்.சி.டி.சி சமீபத்தில் அனைத்து ‘சார் தாம்’களுக்கும் மேற்கொள்ளும் சுற்றுலாவிற்கான  டூர் பேகேஜை அறிவித்துள்ளது.

இந்தியா முழுவதும் உள்ள மிக முக்கியமான புனித யாத்திரை சார் தாம் - பத்ரிநாத், ஜெகந்நாத் பூரி, ராமேஸ்வரம் மற்றும் துவாரகாதிஷ்  ஆகிய இடங்களுக்கான சுற்றுலா பயணத்திற்கான ‘தேகோ அப்னா தேஷ்’ என்னும்  டீலக்ஸ் சுற்றுலா ரயிலின் அனைத்தையும் உள்ளடக்கிய “சார் தாம் யாத்திரை” ரயில் சுற்றுப்பயணத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. 

சுற்றுப்பயணம் 17 அக்டோபர் 2021 அன்று தொடங்கும், இதற்கான ரயில் டெல்லி சப்தர்ஜங்கிலிருந்து புறப்படும். இரண்டாவது ஏ.சி. வகுப்பில் 48 இடங்களும், முதல் ஏ.சி. வகுப்பில் 72 இடங்களும் இருக்கும்.  இதில் பயணம் செய்ய18 வயது அதற்கு மேற்பட்ட வயதுடைய பயணிகளுக்கு மட்டுமே அனுமதி. மேலும் சுற்றுலா செல்பவர்கள் COVID-19 தடுப்பூசி (குறைந்தது ஒரு தடுப்பூசி டோஸ்) போட்டிருக்க வேண்டியது கட்டாயமாகும்.

15 இரவுகள் / 16 நாட்கள் ஐ.ஆர்.சி.டி.சி சார் தாம் யாத்ரா டூர் தொகுப்பில் பின்வரும் இடங்கள் அடங்கும்:

1. பத்ரிநாத்: பத்ரிநாத் கோயில், மனா கிராமம் & நரசிங்க கோயில் (ஜோஷி மடம்).

2. ரிஷிகேஷ்: லட்சுமண் ஜுல்லா & திரிவேணி படித்துறை.

3. பூரி: ஜெகந்நாத் கோயில், பூரியின் கோல்டன் பீச், கோனார்க் சூரிய கோயில் & சந்திரபாகா கடற்கரை.

4. ராமேஸ்வரம்: ராம்நாதசுவாமி கோயில் & தனுஷ்கோடி.

5. துவாரகா: துவாரகாதிஷ் கோயில், நாகேஸ்வர் ஜோதிர்லிங்கம், சிவராஜ்பூர் கடற்கரை & பெட் துவாரகா

செலவு
தோராயமாக, 15 இரவுகள் மற்றும் 16 நாட்களுக்கு ஒரு நபருக்கு

1AC வகுப்பு :

ஒருவருக்கு ரூ .109595,
இருவருக்கான பேக்கேஜ் ரூ .99195,
மூன்று பேருக்கு ரூ .95500;

2AC வகுப்பு:

ஒருவருக்கு ரூ .90985,
இருவருக்கான பேக்கேஜ் ரூ 78885,
மூன்று பேருக்கு ரூ .76895;

டூர் பேக்கேஜில் அடங்குபவை

சுற்றுப்பயண தொகுப்பில் முதல் ஏசி / இரண்டாவது ஏசி வகுப்பில் சிறப்பு சுற்றுலா ரயில் மூலம் ஒரு வசதியான பயணம், ஆறு இரவுகள் டீலக்ஸ் பிரிவில்  தங்கும் வசதி, உள் ரயில் உணவு (வெஜ் மட்டும்), வெளியில் இருக்கும் போது ஹோட்டல்களில் போர்டு சாப்பாடு (காய்கறி மட்டும்), பயணக் காப்பீடு, குளிரூட்டப்பட்ட வாகனங்களில் அனைத்து இடங்களுக்கு செல்லும் வசதி. 

டூர் தொகுப்பில் சேர்க்கப்படாதது

இருப்பினும், சுற்றுப்பயண தொகுப்பில் படகு சவாரி, சாகச விளையாட்டு போன்றவை இருக்காது, மெனு தேர்வு, நுழைவு கட்டணம் மற்றும் உள்ளூர் வழிகாட்டிகள் போன்றவை, பணியாளர்கள், ஓட்டுநர்கள், வழிகாட்டிகள், பிரதிநிதி, எரிபொருள் கூடுதல் கட்டணம், தனிப்பட்ட செலவுகள், மினரல் வாட்டர், சலவை செலவுகள், கூடுதலாக வாங்கப்படும் உணவு மற்றும் பானங்கள். மேலும், மலைகளில் ஏசி போக்குவரத்து கிடைக்காது.

Trending News