முகேஷ் - நீதா அம்பானி குடும்பத்திடம் கற்றுக் கொள்ள வேண்டிய 6 சீக்ரெட்ஸ்...!
Mukes Ambani, Nita Ambani Family Lifestyle ; நீங்கள் உங்கள் வாழ்க்கையில் எப்போதும் மகிழ்ச்சியாகவும், நிம்மதியாகவும் இருக்க வேண்டும் என்றால் அம்பானிகள் பின்பற்றும் 6 சிக்ரெட்ஸ் வாழ்க்கை முறைகளை கட்டாயம் பின்பற்ற வேண்டும்.
Mukes Ambani, Nita Ambani News Tamil : அம்பானிகள் என்றாலே ஆடம்பரம் என நினைத்துக் கொண்டிருக்கும் நம்மில் பெரும்பாலானோர் அவர்கள் எப்படி மகிழ்ச்சியாக வாழ்கிறார்கள், அதற்காக என்ன செய்கிறார்கள் என்பதை தெரிந்து வைத்திருப்பதில்லை. அவர்கள் ஏன் வெற்றிகரமாகவும், சுறுசுறுப்பாகவும் இருந்துகொண்டே இருக்கிறார்கள் என்றால், அன்றாட வாழ்க்கையில் அம்பானிகள் பின்பற்றும் சில வாழ்க்கை முறைகள் தான் காரணம். அப்படி என்ன அம்பானிகள் கடைபிடிக்கிறார்கள் என்று கேட்கிறீர்களா?. அவர்களின் 6 வாழ்க்கை முறை சீக்ரெட்களை இங்கே பார்க்கலாம்.
மேலும் படிக்க | வெஜிடேரியன்களுக்கு புரோடீன் சத்தை அள்ளிக்கொடுக்கும் குயினோவா, ஓட்மீல் : எது பெஸ்ட்?
உணவுக்கு முன்னுரிமை
அம்பானிகளின் ஆரோக்கியமான வாழ்க்கை முறையின் அடிப்படையே சமச்சீர் உணவு. வைட்டமின்கள், தாதுக்கள், புரதங்கள் மற்றும் ஆரோக்கியமான கொழுப்புகள் உள்ளிட்ட அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் நிறைந்த உணவுகளையே எப்போதும் சாப்பிடுகிறார்கள். அதுவும் வீட்டில் சமைத்த உணவு தான். பழங்கள், காய்கறிகள், முழு தானியங்கள் அம்பானிகளின் உணவில் பிரதானமாக உள்ளன. இந்த அணுகுமுறை ஒட்டுமொத்த ஆரோக்கியத்தை பராமரிக்கவும், நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும் அடிப்படையாக அமைகிறது.
உடற்பயிற்சிக்கு முக்கியத்துவம்
அம்பானி குடும்பமே உடற்பயிற்சிக்கு முக்கியத்துவம் கொடுக்கிறது. குறிப்பாக நீடா அம்பானி பிட்னஸில் அதீத கவனம் செலுத்துவபர். முகேஷ் அம்பானி தனது பிஸியான கால அட்டவணையையும் மீறி தினசரி உடற்பயிற்சிகளுக்கு நேரம் ஒதுக்குகிறார். மன அழுத்தத்தை நிர்வகிக்கவும், மனத் தெளிவை மேம்படுத்தவும் உடற்பயிற்சி உதவுகிறது.
தண்ணீர் குடிப்பதில் கவனம்
நாள் முழுவதும் உங்களை நீங்கள் நீரேற்றமாக வைத்திருப்பது அவசியம். அதனால் நாள் முழுவதும் நிறைய தண்ணீர் குடிப்பதை ஒருபோதும் அம்பானி குடும்பம் தவறுவதில்லை. இது செரிமானத்திற்கு உதவுகிறது, தோல் ஆரோக்கியத்தை பராமரிக்கிறது. பீட்ரூட் சாறு உள்ளிட்ட இயற்கையான பழச்சாறுகள் தினமும் நீதா அம்பானி டையட்டில் இருக்கிறது. சர்க்கரை பானங்களுக்கு முக்கியத்துவம் கொடுப்பதில்லை.
மன அழுத்தம் இல்லாத வாழ்க்கை
அம்பானிகள் தங்கள் வாழ்க்கையில் பல்வேறு மன அழுத்த மேலாண்மை நுட்பங்களைச் சரியாக கடைபிடிக்கிறார்கள். நிதா அம்பானி மன அமைதி மற்றும் சமநிலையை பராமரிக்க தியானம் செய்கிறார். இது பதட்டத்தைக் குறைக்கவும், உணர்ச்சி நல்வாழ்வை மேம்படுத்தவும் உதவுகின்றன. மன அழுத்தத்தை திறம்பட நிர்வகிக்கக் கற்றுக்கொள்வது என்பது ஆரோக்கியமான வாழ்க்கை முறையை பராமரிப்பதற்கு அவசியம். இதற்கு தினமும் தியானம், யோகா செய்யலாம்.
நீங்கள் எப்படி தூங்குகிறீர்கள்?
தரமான தூக்கம் அம்பானிகளின் முன்னுரிமை பட்டியலில் இருக்கிறது. உடல் ஆரோக்கியம், மனத் தெளிவு மற்றும் உணர்ச்சி நிலைத்தன்மைக்கு தூக்கம் இன்றியமையாதது என்பதை அவர்கள் புரிந்து வைத்திருக்கிறார்கள். ஒரு நிலையான தூக்க அட்டவணையை பராமரிப்பதன் மூலமும், அமைதியான சூழலை உருவாக்குவதன் மூலமும், தங்களுக்கு தேவையான ஓய்வு கிடைப்பதை உறுதிசெய்கிறார்கள்.
குடும்பத்தினருக்கும் நண்பர்களுக்கும் நேரம் கொடுப்பது
குடும்பத்துடன் தரமான நேரத்தைச் செலவிடுவதும், சமூகத் தொடர்புகளை உருவாக்குவதும் அம்பானிகளின் வாழ்க்கை முறையின் ஒருங்கிணைந்த பகுதியாகும். அவர்கள் அடிக்கடி குடும்ப நிகழ்ச்சிகள், கொண்டாட்டங்களில் ஈடுபடுகிறார்கள், இது அவர்களின் நல்லுறவுக்கான பிணைப்பை வலுப்படுத்துகிறது. அம்பானி குடும்பத்தை பொறுத்தவரை கிட்டத்தட்ட அனைத்து பண்டிகைகள் மற்றும் கொண்டாட்டங்களை ஒரு கூட்டு குடும்பமாக ஒன்றாக கொண்டாட முனைகிறார்கள். இது மன அழுத்தத்தைக் குறைப்பதற்கும், ஒட்டுமொத்த மகிழ்ச்சியை மேம்படுத்தும்.
மேலும் படிக்க | பற்களில் மஞ்சள் கறை போக... இந்த 3 பழங்களும் நல்லா வேலை செய்யும் - என்னென்னு பாருங்க!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ