சீரழிந்து வரும் வாழ்க்கை முறை மற்றும் தவறான உணவுப் பழக்கவழக்கங்களால் இதய ஆரோக்கியம் பாதிக்கப்பட்டு பல்வேறு வகையான இதய நோய்களுக்கு மக்கள் பலியாகின்றனர். அப்படிப்பட்டவர்கள் தங்கள் அன்றாட வழக்கத்தில் பிராணாயாமத்தை செய்வது நன்மை பயக்கும். அந்த வகையில் உங்களின் இதயத்தை ஆரோக்கியமாகவும், உடலின் இரத்த ஓட்டத்தை சிறப்பாக வைத்திருக்கவும் உதவும் 5 பிராணாயாமங்களை எவ்வாறு செய்வது என்று இன்று நாம் இந்த கட்டுரையில் காண உள்ளோம்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

பஸ்திரிகா பிராணாயாமம்
நுரையீரலைப் பலப்படுத்தும் மேலும் ஒரு அருமையான மூச்சுப் பயிற்சி பஸ்திரிகா பிராணாயாமம் ஆகும். முதலில், பதுமாசனம் உள்ளிட்ட தியான ஆசனங்களில் ஒன்றில் அமர்ந்து கொள்ளவும். மூச்சை ஆழமாக உள்ளிழுத்து இரண்டு நாசிகள் வழியாக வேகமாக வெளியேற்றவும். அதே வேகத்தில் மூச்சை உள்ளிழுத்து மீண்டும் வேகமாக மூச்சை வெளியேற்றவும். இந்த பிராணயாமாவை சில நிமிடங்கள் பயிற்சி செய்த பிறகு, படிப்படியாக இயல்பு நிலைக்கு வரவும்.


மேலும் படிக்க | ஆயுளை அதிகரிக்க இந்த வாழ்க்கைமுறை மாற்றங்கள் அவசியம்! ஹைப்பர்டென்சன் மரணங்கள் அலர்ட் 


பிரமாரி பிராணாயாமம்
‘பிரமர்’ என்ற வடமொழி சொல்லிலிருந்து உருவானதுதான் பிராமரி. பிரமர் என்றால் வண்டு. பிராமரி பிராணாயாமத்தில் வண்டு போல் ஒலி எழுப்புவதால் இந்த பெயர் பெற்றது. பிரமாரி பிராணயாமத்திற்கு, யோகா பாயில் பத்மாசன நிலையில் அமரவும்.
இப்போது இரண்டு கைகளையும் முழங்கைகளில் வளைத்து காதுகளுக்கு அருகில் கொண்டு வந்து இரண்டு காதுகளையும் கட்டைவிரலால் மூடவும். இதற்குப் பிறகு, கைகளின் ஆள்காட்டி விரல்களை நெற்றியில் மற்றும் நடுத்தர, மோதிரம் மற்றும் சிறிய விரல்களை மூடிய கண்களுக்கு மேல் வைக்கவும். பிறகு வாயை மூடிக்கொண்டு மூக்கின் வழியாக ‘ம்ம்ம்’ என்று வாயை திறக்காமல் குரல் ஒலிக்கவும். உங்கள் தொண்டையில் அதிர்வை உணர்வீர்கள்.


அனுலோம விலோம பிராணாயாமம்
இதற்கு முதலில் யோகா மேட்டில் பத்மாசன நிலையில் அமர்ந்து இரு கண்களையும் மூடவும். இரு கைகளையும் நீட்டி மணிக்கட்டுகளின் ஓரப் பகுதியை அந்தந்த முழங்கால் முட்டிகளின் மேல் வைக்கவும். இரு கை விரல்களாலும் சின் முத்திரையை செய்யவும். இரு கண்களை மூடவும். உடல் முழுவதையும் தளர்வாக வைத்துக் கொள்ளவும். இரு நாசிகளின் வழியாக மூச்சை வெளியே விட்டு நுரையீரலில் இருக்கும் காற்று முழுவதையும் வெளியேற்றவும்.


கபாலபதி பிராணாயாமம்
கபாலபதி பிராணாயாமம் பயிற்சி செய்ய, முதலில் பத்மாசன நிலையில் யோகா பாயில் நேராக நிமிர்ந்து கண்களை மூடிய நிலையில் அமர்ந்து கொள்ள வேண்டும். இரண்டு கைகளையும் முழங்கால்களில் ஊன்றிக் கொள்ள வேண்டும். மூக்கின் இரு துவாரங்கள் வழியாக நுரையீரல் நிரம்பும் வகையில் நன்றாக மூச்சை உள்ளிழுக்க வேண்டும். வயிறு நன்றாக உள்ளிழுத்த நிலையில் இருக்க வேண்டும். இப்போது மூச்சு முழுவதும் வேகமாக வெளியே விடவேண்டும். இப்போது வயிறில் ஒரு அழுத்தம் கிடைக்கும்.


உஜ்ஜாயி பிராணாயாமம்
முதலில், தியான ஆசனத்தில் அமரவும். இரு கைகளையும் நீட்டி முழங்கால்களின் மேல் கை விரல்களால் சின் முத்திரை செய்யவும். கண்களை மூடவும். உடல் முழுவதையும் தளர்த்திக் கொள்ளவும். நிதானமாகவும், ஆழமாகவும், மூச்சை உள்ளுக்கு இழுக்கவும். மூச்சை உள்ளே இழுக்கும்போது தொண்டை பாகத்தில் க்ளாட்டிஸ் என்ற பகுதியில் லேசான அழுத்தம் கொடுத்து சிறிதளவு அடைத்து தொண்டையிலிருந்து ஸ்.....ஸ் என்ற ஒலியை உண்டு பண்ணவும். பிறகு மூச்சுக்காற்றை மெதுவாகவும், ஆழமாகவும் தொடர்ந்து வெளியே விடவும். மூச்சுக் காற்றை வெளியே விடும்போது தொண்டையிலிருந்து உஷ்....உஷ்... என்ற ஒலியை உண்டு பண்ணவும். இது ஒரு சுற்று பயிற்சியாகும். ஆரம்பத்தில் 10 முதல் 15 சுற்று பயிற்சி செய்யவும். தொடர்ந்து பயிற்சியில் 20 முதல் 40 சுற்று வரை பயிற்சி செய்யலாம். மூச்சை உள்ளே இழுக்கும்போது மார்பையும், வயிற்றையும் நன்கு விரிக்கவும்.


மேலும் படிக்க | இந்த நோய் இருந்தால் அன்னாசி பழத்தை அதிகமாக சாப்பிடவே கூடாது!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ