“அழகு” எனும் சொல்லை ஒரு பொருளுக்கு, இடத்திற்கு, மனிதர்களுக்கு என அனைத்திற்கும் பயன்படுத்துகிறோம். ஆனால், உண்மையிலேயே அழகு என்பது அதை பார்க்கும் கண்களை பொருத்துதான் இருக்கிறது. சமூக ரீதியாக ஒரு பெண்ணோ, ஆணோ, “இந்தந்த குணாதிசயங்கள் வைத்திருந்தால்தான் அழகு..இப்படி இல்லை என்றால் அவர்கள் சுமார்தான்” என்ற கட்டமைப்புகள் இருக்கிறது. இவை ஒருவரிடம் இல்லை என்றால், அவர் அழகானவர் இல்லை என்பது அர்த்தம் இல்லை. நாம், வாழ்வில் அழகை முதன்மைப்படுத்துவதை விட்டு விட்டு நமது நற்குணங்களை மேன்மைப்படுத்த வேண்டும். அப்படி செய்தாலே, நாம் வசீகர குணம் படைத்தவராக மாறலாம். அதற்கு நாம் என்ன செய்ய வேண்டும் தெரியுமா?


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

தன்னம்பிக்கை:


மனிதர்கள் அனைவருக்குமே தன்னம்பிக்கை என்பது மிகவும் முக்கியமானது. நம்மிடம் இருக்கும் தனித்துவமான குணங்களையும், பலங்களையும் நினைத்து பெருமைக்கொண்டு, தன்னம்பிக்கையை வளர்த்துக்கொள்வது மிகவும் முக்கியம் ஆகும். தன்னம்பிக்கை என்ற ஒன்று வந்துவிட்டாலே போதும், அழகும்-அறிவும் தானே சேர்ந்து விடும்.


பாசிடிவான அணுகுமுறை:


நாம், வாழ்வில் சந்திக்கும் அனைத்தையுமே முதலில் விமர்சனம் செய்வதை விட்டுவிட்டு, அதை ஒரு நம்பகத்தன்மையுடன் பார்க்க வேண்டும். நாம் இப்படிப்பட்ட மனிதராக மாறிவிட்டால் அனைவருக்கும் நம்மிடம் எதை சொல்லவும் தயக்கமே இருக்காது. 


பேசும் திறன்:


நாம் பேசும் போது ஒரு சிலர் “இடம், பொருள், ஏவல் பார்த்து பேச வேண்டும்” என்று கூறுவர். இது ஒரு வகையில் உண்மைதான்.  அனைத்து நேரங்களில் நீங்கள் நீங்களாக இருக்க முடியாது என்றாலும், முடிந்த அளவிற்கு நீங்கள் அனைவரிடமும் உண்மையாக இருக்க கற்றுக்கொள்ள வேண்டும். ஒருவர் பேசும் போது அதை ஆழ்ந்து கவனிப்பது, நீங்கள் பேச வரும் விஷயத்தை தெளிவாக பேசுவது உள்ளிட்டவை உங்களை வசீகரமான நபராக மாற்றும்.



நம்பகத்தன்மை:


ஒரு வாக்கு கொடுத்தால் அதை சரியாக செய்து முடிப்பது, உங்கள் வார்த்தைக்கு உண்மையாக நடந்து கொள்ளும் நபராக நீங்கள் இருக்கிறீர்கள் என்றால், உங்களிடம் எக்கச்சக்கமான வசீகரத்தன்மை இருக்கும். 


உங்களை நீங்கள் பார்த்துக்கொள்வது:


“ஆள் பாதி-ஆடை பாதி” என்பது மிகவும் உயர்வான சொல்லாடல் ஆகும். எங்கு சென்றாலும், நாம் உடுத்தியிருக்கும் ஆடையை வைத்துதான் நம்மை எடை போடுவர். எனவே, உங்கள் ஆடை விஷயத்தில் கவனம் செலுத்துங்கள். சுத்தமாக இருப்பது, தினமும் உங்கள் நலனில் நீங்களே அக்கறை செலுத்துவது உங்களை வசீகரமிக்க நபராக மாற்றும்.


உடல் மொழி:


ஒருவருடன் பேசும் போது அவரது கண்ணோடு கண் பார்த்து பேசுவது, கை குலுக்குகையில் கனமாக பிடிப்பது போன்றவை நீங்கள் தன்னம்பிக்கைக்குரிய நபர் என்பதை காண்பிக்கும் உடல் மொழியாகும். இதை ஃபாலோ செய்யுங்கள்.


பிடித்த விஷயங்கள்:


நம் அனைவருக்குமே, நமக்கு செய்ய பிடித்த வேலை என்ற ஒன்றாவது இருக்கும். இப்போது நீங்கள் பிடிக்காத வேலையில் இருந்தாலும், உங்களுக்கு பிடித்த விஷயங்களை தொடர்ந்து செய்து கொண்டே இருந்தால் உங்கள் மனம் தினம் தோறும் மகிழ்ச்சியாக இருக்கும்.


மேலும் படிக்க | வாழ்வை மகிழ்ச்சியாக மாற்றுவது எப்படி? இதோ 7 சிம்பிள் டிப்ஸ்!


இரக்கம்:


நம்மை போல பிறரும் ஒரு மனிதர், என்ற எண்ணத்துடன் எப்போதும் பிறரிடம் இரக்க குணத்துடன் நடந்து கொள்ள வேண்டும். இப்படி இருப்பவர்களிடம் வசீகரம் கொட்டிக்கிடக்கும். எனவே, உங்களிடம் கணிவாக நடந்து கொள்ளும் நபரிடம் நீங்கள் கணிவாக நடந்து கொள்வது மிகவும் முக்கியமாகும்.



நகைச்சுவை உணர்வு:


நகைச்சுவையாக பேசுபவர்களிடம் எப்போதும் வசீகரம் ததும்பி இருக்கும். எனவே, அதை எப்போதும் உயிர்ப்புடன் வைத்திருங்கள்.


பிறருக்கு உதவி:


பிறருக்கு ஆதரவு தெரிவிப்பதாலும், உதவி செய்வதாலும் நம்மை நாமே உயர்த்திக்கொள்கிறோம். எனவே, உங்களிடம் இருக்கும் வசீகரத்தன்மையை அதிகரிக்க எப்போதும் பிறருக்காகவும் ஆதரவு தெரிவிக்க வேண்டும்.


மேலும் படிக்க | எப்போதும் அழகா இருக்க சிம்பிள் டிப்ஸ்! முயற்சி செய்தா நீஙகளே எவர்கிரீன் ஹீரோ


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ