ரயில் பயணத்தின் Confirm ticket-லும் பயணியின் பெயரை மாற்றலாம்: எளிய IRCTC வழிகள் இதோ!!
உறுதிப்படுத்தப்பட்ட உங்கள் டிக்கெட்டில் உங்கள் குடும்ப உறுப்பினர்கள் பயணம் செய்யலாம். இருப்பினும், இதற்கு நீங்கள் பயணியின் பெயரை மாற்ற வேண்டும்.
கொரோனா வைரஸ் தொற்றுநோய் காரணமாக, நாட்டின் உயிர்நாடியான இந்தியன் ரயில்வே (Indian Railways) சேவையும் சீராக இல்லை. மார்ச் 2020 முதல் பயணிகள் ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. பண்டிகை காலத்திற்கான சில சிறப்பு ரயில்களைத் தவிர, பார்சல் ரயில்கள் மட்டுமே இயக்கப்படுகின்றன.
ரயில்களின் இயக்கம் எப்போது இயல்பு நிலைக்குத் திரும்பும் என்று சொல்வது கடினமாக உள்ளது. இருப்பினும், ரயில்வே நீண்ட காலத்திற்கு ரயில் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்து வருகிறது. இத்தகைய சூழ்நிலையில், நீங்கள் ஏற்கனவே டிக்கெட் முன்பதிவு செய்திருந்தாலோ, அல்லது முன்பதிவு செய்யப்போகிறீர்கள் என்றாலோ, நீங்கள் சில விதிகளை கண்டிப்பாகத் தெரிந்துகொள்ள வேண்டும்.
ஆன்லைன் டிக்கெட் முன்பதிவின் போது பயணிகளின் பெயரை நிரப்புவதில் பெரும்பாலும் மக்கள் தவறு செய்கிறார்கள். இதன் விளைவாக நீங்கள் பயணம் செய்ய இயலாத நிலை கூட ஏற்படலாம். அல்லது டிக்கெட்டை ரத்து செய்ய வேண்டி வரலாம். பல முறை நீங்கள் டிக்கெட்டை முன்பதிவு செய்திருப்பீர்கள், ஆனால் பயணத்திற்கு முன் உங்கள் திட்டங்கள் மாறி விடும். அப்படிப்பட்ட தருணங்களில் நமது டிக்கெட்டில் வேறு யாராவது பயணிக்க முடியுமா என்ற கேள்வி மக்கள் மனதில் வருவதுண்டு. ஆனால், உங்கள் டிக்கெட்டில் வேறு யாராவது எப்படி பயணிக்க முடியுமா?
இது சாத்தியம். உங்கள்உறுதிப்படுத்தப்பட்ட டிக்கெட்டில் (Confirmed Ticket) உங்கள் குடும்ப உறுப்பினர்கள் பயணம் செய்யலாம். இருப்பினும், இதற்கு நீங்கள் பயணியின் பெயரை மாற்ற வேண்டும். தங்கள் டிக்கெட்டில் பயணியின் பெயரை மாற்றும் வசதியை IRCTC வழங்குகிறது. இருப்பினும், இந்த மாற்றத்தை ஒரு டிக்கெட்டில் முறை மட்டுமே செய்ய முடியும். உறுதிப்படுத்தப்பட்ட டிக்கெட்டில் பயணிகளின் பெயரை மாற்றுவதற்கான வழிமுறைகள் மிகவும் சுலபமானவை. அதை எப்படி செய்வது என்று தெரிந்து கொள்ளலாம்.
ALSO READ: RRC Group D Recruitment 2020: அரசாங்கம் வெளியிட்ட பெரிய அறிவிப்பு, 20% சீட்கள் reserved!!
டிக்கெட்டில் பயணிகளின் பெயரை மாற்றுவது எப்படி
-முதலில் ஆன்லைனில் முன்பதிவு செய்யப்பட்ட டிக்கெட்டுகளின் ப்ரிண்ட் அவுட் எடுத்துக் கொள்ளுங்கள்.
-இதற்குப் பிறகு உங்கள் நகரத்தின் ரயில்வே முன்பதிவு கவுண்டருக்குச் செல்லுங்கள்.
-டிக்கெட்டில் யாருடைய பெயரை மாற்ற வேண்டுமோ, அவரது அசல் ஐடி ஆதாரம் மற்றும் அவரது புகைப்பட நகல் ஆகியவை இணைக்கப்பட வேண்டும்.
-ரயில்வே முன்பதிவு கவுண்டரிலிருந்து, தற்போதுள்ள பயணிகளின் பெயருக்கு பதிலாக பயணம் செய்யப்போகும் பயணியின் பெயர் மாற்றப்படும்.
-ரயில் புறப்படுவதற்கு 24 மணி நேரத்திற்கு முன்பு வரைதான் பயணிகளின் பெயரை முன்பதிவு கவுண்டரிலிருந்து மாற்றிக்கொள்ள முடியும் என்பதை நினைவில் கொள்ளுங்கள். இதன் பிறகு இந்த வசதி நிறுத்தப்பட்டு விடும்.
-உங்கள் உறுதிப்படுத்தப்பட்ட டிக்கெட்டில் பெற்றோர், உடன்பிறப்புகள், மகன் மற்றும் மகள், கணவன் மற்றும் மனைவி ஆகியோரின் பெயரை மட்டுமே மாற்ற முடியும்.
ஐடி ஆதாரம் என்னவாக இருக்க வேண்டும்
ஆதார் அட்டை
பான் கார்டு
பாஸ்போர்ட்
ரேஷன் கார்டு
ஓட்டுனர் உரிமம்
தேசியமயமாக்கப்பட்ட வங்கியின் பாஸ் புக்
வாக்காளர் அடையாள அட்டை
மத்திய அல்லது மாநில அரசால் வழங்கப்பட்ட புகைப்பட ஐகார்ட்
செல்லுபடியாகும் மாணவர் ஐகார்ட்
புகைப்படம் உள்ள கிரெடிட் கார்ட்
ALSO READ: Wow…. Flight book செய்தால் 99 ரூபாயில் doctor consultation கிடைக்கும்!!
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR